தொல்லியல் அருங்காட்சியகம், கொனாரக்

தொல்லியல் அருங்காட்சியகம், கொனாரக் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் உள்ளது. சூரியன் கோயிலில் இருந்து விழுந்துவிட்ட சிற்பங்கள், கட்டிடக்கலைக் கூறுகள் என்பவற்றை இந்த அருங்காட்சியகம் உள்ளடக்குகிறது. இக் கட்டிடம் கோயிலில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் சூரியன் கோயிலின் துப்புரவுப் பணியின்போது கிடைத்த 260 அரும்பொருட்கள் நான்கு காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர இங்கே மேலும் பல பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. முதல் காட்சிக் கூடத்தில் 62 அரும்பொருட்கள் உள்ளன. சூரியன் கோயிலில் கிடைத்த சிற்பங்களில் பெரும்பாலானவை இந்தக் காட்சிக்கூடத்திலேயே உள்ளன. இரண்டாம் காட்சிக்கூடத்தில் 108 பொருட்களும், மூன்றாம், நான்காம் காட்சிக் கூடங்கள் ஒவ்வொன்றிலும் தலா 45 பொருட்களும் உள்ளன.


இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு