தொழில்துறை நடவடிக்கை

தொழில்துறை நடவடிக்கை (Industrial action, ஐரோப்பா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா) அல்லது வேலை நடவடிக்கை (job action, கனடா மற்றும் அமெரிக்கா) எனப்படுவது   தொழிற்சங்கங்களால் கூட்டாக எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். சில தொழிற்சாலை நிர்வாகங்கள் தங்கள் ஒப்பந்த பணியாட்களை ஏதும் பெரிய காரணம் இன்றி வேலையை விட்டு நிறுத்தும் வழக்கம் பரவலான ஒன்று. இவ்வாறு ஒப்பந்த முறிவு ஏற்பட்டு அதற்கு ஒரு தீர்வு எட்ட முடியாத பட்சத்தில், தொழிற்சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை பதியும் முகமாக பல போராட்டங்களை முன்னெடுக்கும். பெரிய அளவிலான வேலைநிறுத்தம் பொதுவாக செய்யப்படும் ஒன்று. அதோடு உள்ளிருப்பு போராட்டம், வேலையின் வேகத்தை குறைத்தல், ஆர்ப்பாட்டங்கள், முதலிய பல போராட்ட வடிவங்களை தொழிற்சங்கங்கள் கையிலெடுக்கும். இந்த போராட்டங்கள் ஒரு இடக்கரடக்கலாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைகள் அல்லது தொழில்துறை நடவடிக்கை என்று அழைக்கப்படுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்துறை_நடவடிக்கை&oldid=2426363" இலிருந்து மீள்விக்கப்பட்டது