தொழில்நுட்ப மாற்றம்
தொழில்நுட்ப மாற்றம் (Technological change) அல்லது தொழில்நுட்ப வளர்ச்சி (technological development), தொழினுட்பம் அல்லது வணிகச் செயல்முறைகளின் இயற்றுதல் அல்லது புதுமைப்புனைவு, புத்தாக்கம், புத்தாக்கத்தின்பரவல்லாகியவற்றின் ஒட்டுமொத்த நிகழ்வாகும்.[1][2] சாரநிலையில், தொழில்நுட்ப மாற்றம் செயல்முறைகள் உள்ளடங்கிய தொழில்நுட்பங்களின் புதுமைபுனைவையும் அவற்றின் வணிகமயமாக்கத்தையும் ஆராய்ச்சிவழி உருவாக்கத் திறந்தநிலை வாயிலாக அமையும் வெளியீட்டையும் ( புதிய தொழில்நுட்பங்களின் எழுச்சி), செலவு குறைக்கும் தொழில்நுட்பங்களின் தொடர்வளர்ச்சியையும் தொழில்துறைகளிலும் சமூகத்திலும் அத்தொழில்நுட்பங்களின் பரவலையும் (இது சிலவேளைகளில் குலைவுவழிப் புத்தாக்கத்தையும் தொழில்நுட்பக் குவிதலையும் உள்ளடக்கலாம்). சுருக்கமாக, தொழில்நுட்ப மாற்றம் சிறந்த, செறிந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதாகும்.
தொழில்நுட்ப மாற்றத்தைப் படிமமாக்கல்
தொகுதொடக்க காலத்தில், தொழில்நுட்ப மாற்றம் புத்தாக்கத்தின் நேரியல் படிமமாக விளக்கப்பட்டது. இப்படிம்ம் இப்போது கைவிடப்பட்டு தொழில்நுட்ப மாற்றத்திற்கான புதிய படிமத்தால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதுப்படிமம் புத்தாக்கத்தின் ஆராய்ச்சி, பொருள் உருவாக்கம், பரவல், பயன்பாடு ஆக்கிய அனைத்து கட்டங்களையும் உள்ளடக்குகிறது. "தொழில்நுட்ப மாற்றத்தின் படிமமாக்கல்," பற்ரிப் பேசும்போது, இது புத்தாக நிகழ்வைக் குறிப்பிடுகிறது. இந்த தொடர்மேம்பாட்டு நிகழ்வு, கால அடைவில் குறையும் செலவு வரைவாகப் படிமப்படுத்தப்படுகிறது ( காட்டக, எரிபொருள்கலத்தின் அடக்கவிலமொவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருதலைக் கருதலாம்). தொழில்நுட்ப மாற்றம் கற்றல் வரைவு கொண்டும் படிமப்படுத்தப்படுகிறது. எ. கா.: Ct=C0 * Xt^-b
தொழில்நுட்ப மாற்றம் காலநிலை மாற்றம் போன்ற பிற படிமங்களிலும் உள்ளடக்கப்படுகிறது. அவற்றில் இதுவொரு புறநிலைக் காரணியாக்க் கொள்ளப்படுகிறது. அண்மையில் தொழில்நுட்ப மாற்றம்ளாவற்றின் அகநிலைக் காரணியாக்க் கருதும் போக்கு வலுவடைந்து வருகிறது. இதனால் தொழில்நுட்ப மாற்றமும் தாக்கத்துக்கு உள்ளாகலாம் என்பது உள்வாங்கப்பட்டுள்ளது. இன்று தொழில்நுட்ப மாற்றத்தின் வேகத்தையும் திசைவழியையும் மாற்றவல்ல கொள்கையைப் பின்பற்றும் துறைகள் உள்ளன. காட்டாக, தூண்டல்வழி தொழில்நுட்ப மாற்றக் கருதுகோளை முன்வைப்பவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விலைகளின்சார்புக் காரணியால் முடுக்கலாம் எனக் கூறுகின்றனர். இதைப் புதைபடிவ எரிபொருள் ஆற்றல் பயனைக் காலநிலைக் கொள்கை கட்டுபடுத்துவதால் விளக்கலாம். குறிப்பாக இக்கொள்கையால் எப்படி ஆற்ரல் விலை கூடுகிறது என்பதால் உணரலாம்.[3] ஆனால், இன்றுவரை கொள்கைவழித் தூண்டப்படும் புத்தாக்க விளைவுகளுக்கான சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. இதற்கான படிமத்துக்கு வெளியே அமையும் பல காரணங்களைக் கூறலாம். அவற்ரில் நெடுங்கால நோக்கில் கொள்கைகளின் உறுதியற்ற தன்மையையும் புத்தாக்கத்துக்கான புறநிலை உந்துதல்களையும் கூறலாம்.[4] இதேபோன்ற மற்றொரு வழிநடத்தும் தொழில்நுட்ப மாற்றக் கருதுகோளையும் சுட்டலாம். இது தொழில்நுட்ப மாற்றத்தை கொள்கைசார் தூண்டலை விட விலைசார் தூண்டல் விளைவுகளைப் பெரிதும் வற்புறுத்துகிறது.[5]
புதுமைபுனைதல் (இயற்றுதல்)
தொகுஇயற்றுதல் அல்லது புதுமைபுனைதல் என்பது இதுவரை நிலவாதவொன்றைப் புதியதாக உருவாக்குதலை அல்லது தொழிநுட்ப்ப் புரட்சியைக் குறிக்கிறதுகாராய்ச்சி வழியாக புதுப்பொருள் உருவாதலில் இது உள்ளடங்குவதைப் பார்க்கலாம். புதியதாக இயற்றிய விரிதாள் மென்பொருளாக்கம் வழியும் விளக்கலாம். புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் பதிவுரிமம் பெறப்படுகின்றன.
விரவல் (பரவுதல்)
தொகுவிரவல் என்பது சமூகத்திலும் தொழில்துறைகளிலும் நிகழும் தொழில்நுட்ப்ப் பரவலைக் குறிக்கிறது.[6]
சமூக நிகழ்வாக தொழில்நுட்ப மாற்றம்
தொகுதொழில்நுட்ப மாற்றம் ஒரு சமூக நிகழ்வாக கருதுவது, சமூகச் சூழல், தொடர்பாடலின் முதன்மையால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கருத்துப் படிமத்தின்படி, தொழில்நுட்ப மாற்றம் என்பது பொருளாக்கத்தில் உழைப்போர், முனைவோர், தகவமைப்போர், பண்பாட்டு, அரசியல், சந்தை வழிமுறைமையைக் கட்டுபடுத்தும் அரசு நிறுவனம் ஆகியோரை உள்ளடக்கிய சமூக நிகழ்வாகும். கட்டற்ற பொருளியல் சூழலில், தொழில்நுட்ப மாற்ற உந்துதலாக முதலுக்கான பேரளவு ஈட்டமே (இலாபமே) அமைகிறது. பொதுவாக பெரும ஈட்ட்த் தொழில்நுட்பமே தொழில்முனைவோரால் ஏற்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்ப்படுமே ஒழிய, சமூக முழுநிறைவைத் தருவதாயினும். ஈட்டங்குன்றிய தொழில்நுட்பங்கள் நீக்கப்படுகின்றன. எனவே, இந்நிலையில் தொழில்நுட்ப மாற்றம் முதலீடு சார்ந்த ஆர்வங்களின் பக்கச் சாய்வுடையதாகவே உள்ளது.
பரவலின் கூறுகள்
தொகுதொழில்நுட்ப மாற்ற நிகழ்வின் நான்கு முதன்மைக் கூறுகளாகப் பின்வருவன வற்புறுத்தப்படுகின்றன. அவையாவன, (1) புத்தாக்கத் தொழினுட்பம், (2) தொடர்பாடல் வழிமுறைகள்.(3) சமூக உறுப்பினர்கள், (4) குறிப்பிட்ட கால்ம் வரை பின்பற்றும் பொது உறுதிப்பாடு என்பனவாகும். இவை எவரெட் எம். உரோசர்சுவின் தொடர்பாடல் அணுகுமுறை சார்ந்த புத்தாக்கங்களின் விரவல் கோட்பாட்டில் இருந்து தரப்பட்டுள்ளன.
புத்தாக்கம்
தொகுமேற்கோள்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Derived from Jaffe et al. (2002) Environmental Policy and technological Change and Schumpeter (1942) Capitalism, Socialisme and Democracy by Joost.vp on 26 August 2008
- ↑ From [[The New Palgrave Dictionary of technical change[தொடர்பிழந்த இணைப்பு]" by S. Metcalfe.
• "biased and biased technological change" by Peter L. Rousseau.
• "skill-biased technical change[தொடர்பிழந்த இணைப்பு]" by Giovanni L. Violante. - ↑ Ruttan, Vernon W. "Technology, growth, and development: an induced innovation perspective." OUP Catalogue (2000).
- ↑ Jaffe, Adam B., Richard G. Newell, and Robert N. Stavins. "Technological change and the environment." Handbook of environmental economics. Vol. 1. Elsevier, 2003. 461-516.
- ↑ Acemoglu, Daron. "Directed technical change." The Review of Economic Studies 69.4 (2002): 781-809.
- ↑ Lechman, Ewa (2015). ICT Diffusion in Developing Countries: Towards a New Concept of Technological Takeoff. New York: Springer. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-18253-7.
மேலும் படிக்க
தொகு- Books
- Jones, Charles I. (1997). Introduction to Economic Growth. W. W. Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-97174-0
- Kuhn, Thomas Samuel (1996). The Structure of Scientific Revolutions, 3rd edition. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-45808-3
- Mansfield, Edwin (2003). Microeconomic Theory and Applications, 11th edition. W. W. Norton பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-97918-0
- Rogers, Everett (2003). Diffusion of Innovations, 5th edition, Free Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7432-2209-1
- Green, L (2001). Technoculture, Allen and Unwin, Crows Nest, pp. 1–20.
- Articles
- Danna, W. (2007). "They Had a Satellite and They Knew How to Use It", American Journalism[தெளிவுபடுத்துக], Spring, Vol. 24 Issue 2, pp. 87–110. Online source: abstract and excerpt.
- Dickey, Colin (January 2015), A fault in our design பரணிடப்பட்டது 2015-08-12 at the வந்தவழி இயந்திரம். "Perhaps a brighter technological future lies less in the latest gadgets, and rather in learning to understand ourselves better, particularly our capacity to forget what we’ve already learned. The future of technology is nothing without a long view of the past, and a means to embody history’s mistakes and lessons." Aeon
- Hanlon, Michael (December 2014), The golden quarter. பரணிடப்பட்டது 2015-09-05 at the வந்தவழி இயந்திரம் "Some of our greatest cultural and technological achievements took place between 1945 and 1971. Why has progress stalled?" Aeon
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் தொழில்நுட்ப மாற்றம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.