தொழு நோயாளி மன்னனின் மேல்தளம்
தொழு நோயாளி மன்னனின் மேல் தளம் (Terrace of the Leper King) என்பது கம்போடியாவின் அங்கோர் தோம் நகரின் அரச சதுக்கத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.
இது ஏழாம் செயவர்மனின் கீழ் பேயோன் பாணியில் கட்டப்பட்டது. இருப்பினும் அதன் நவீன பெயர் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 15ஆம் நூற்றாண்டின் சிற்பத்திலிருந்து பெறப்பட்டது. இந்தச் சிலை இந்துக் கடவுளான யமனை, மரணத்தின் கடவுளாகக் காட்டுகிறது.
அந்தச் சிலை "தொழுநோய் மன்னன்" என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அதில் ஏற்படும் நிறமாற்றமும், படியும் பாசியும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை நினைவூட்டுகிறது. மேலும் இது தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதலாம் யசோவர்மனின் கம்போடிய புராணக்கதையுடன் பொருந்துகிறது. [1] இருப்பினும், கம்போடியர்கள் அவனை "தர்மராசன்" என அழைத்த பெயர் [2] சிலையின் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
U-வடிவ அமைப்பு, அரசக் குடும்பத்தினரின் தகனம் செய்யும் தளமாகப் பயன்படுத்தப்பட்டதாக சிலரால் கருதப்படுகிறது.
புகைப்படங்கள்
தொகு-
தொழுநோய் மன்னனின் மேல் தளம்
-
மேல் தளத்திற்கு அதன் பெயரைக் கொடுத்த சிலை ஒரு பிரதியால் மாற்றப்பட்டுள்ளது.
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Terrace of the Leper King - Comprehensive Photographic Documentation by khmer-heritage.de