தோக்ரா

மெழுகுக் கலை

தோக்ரா (Dhokra) ( டோக்ரா என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இரும்பு அல்லாத மெழுகு வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு வார்ப்பு ஆகும். இந்த வகையான வார்ப்பு இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது. இக்கலை இன்றும் பயன்பாட்டில் உள்ளது. மொகெஞ்சதாரோவில் கிடைத்த நடன மங்கை சிலை தொலைந்து போன மெழுகு கலைப் பொருட்களில் மிகவும் பழமையானது.[1] பழமையான எளிமை, நாட்டுப்புற உருவங்கள் மற்றும் வலிமையான வடிவம் காரணமாக தோக்ரா கைவினைஞர்களின் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக தேவை உள்ளது. தோக்ரா குதிரைகள், யானைகள், மயில்கள், ஆந்தைகள், மதம் சம்பந்தமான உருவங்கள்ள், அளவிடும் கலசங்கள் மற்றும் விளக்கு கலசங்கள் போன்றவை மிகவும் பாராட்டப்படுகின்றன.[2] சீனா, எகிப்து, மலேசியா, நைஜீரியா, நடு அமெரிக்கா போன்ற இடங்களிலும் தாமிர அடிப்படையிலான இவ்வகை மெழுகு நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.

தன் குடும்பத்திற்காக எறும்புகளை அரைக்கும் தாய் உருவம்
கொல்கத்தாவின் நியூ டவுனில் உள்ள மேற்கு வங்க மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தோக்ரா பொருட்கள்

தோக்ரா கலையானது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் தாமர் பழங்குடியினர் பாரம்பரியமாக தயாரிக்கிறார்கள். அவர்களின் இழந்த மெழுகு வார்ப்பு நுட்பம் அவர்களின் பழங்குடியினப் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர்கள் சார்க்கண்டிலிருந்து மேற்கு வங்காளம் வரை பரவியுள்ளனர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் தோக்ராக்கள் தெற்கே தமிழ்நாடு வரை மற்றும் வடக்கே ராஜஸ்தான் வரை பயணம் செய்தனர்.

படங்கள்

தொகு
தனது ஐந்து குழந்தைகளுடன் இருக்கும் ஒரு தாயின் உருவம்.
இந்துக் கடவுள்களைக் கொண்டுள்ள தோக்ரா கலை.
பல்வேறு பணிகளை செய்யும் இருவர்
தோக்ரா ஆண் முகம்.
தோக்ரா பெண் முகம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Della Cava, Chiara. "Metal Working in India - Lost Wax Casting". Museum of Anthropology, University of Missouri-Columbia. பார்க்கப்பட்ட நாள் 2009-02-08.
  2. "Dokra". Archived from the original on 2009-01-30. பார்க்கப்பட்ட நாள் 2009-02-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்ரா&oldid=4138523" இலிருந்து மீள்விக்கப்பட்டது