தோசபாய் பிராம்ஜி கரகா
தோசாபாய் பிராம்ஜி கரகா ( Dosabhai Framji Karaka) ஓர் இந்திய செய்தித்தாள் ஆசிரியரும் மற்றும் அதிகாரியும் ஆவார். இவர் பார்சி மக்களின் வரலாற்றுக்கு பெயர் பெற்றவர்.[1]
வாழ்க்கை
தொகுஇவர், மும்பை எல்பின்ஸ்டோன் நிறுவனத்தில் கல்வி பயின்றார். குஜராத்தி செய்தித்தாளின் ஆசிரியராக தொழிலைத் தொடங்கிய பிறகு, இவர் பாம்பே டைம்ஸ் பத்திரிக்கையின் மேலாளரானார். தோசாபாய் இங்கிலாந்தில் சிலகாலம் வாழ்ந்தார். அங்கு பார்சிகளின் வரலாறு, பழக்கவழக்கங்கள், உடைகள் மற்றும் மதம் பற்றி எழுதினார். இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் பல சட்ட மற்றும் உத்தியோகபூர்வ பதவிகளை வகித்தார்.[1] மேலும் மும்பை மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.[2] 1872 ஆம் ஆண்டிற்கான மும்பை செரிப்பாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
தோசாபாய் ஆக்சுபோர்டு ஒன்றியத்தின் உறுப்பினராக இருந்து அதன் விவாதங்களில் பங்கேற்றார். ஆக்சுபோர்டு ஒன்றியத்தின் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு இவர் அதில் பொருளாளர், செயலாளர் மற்றும் நூலகர் போன்ற பல பதவிகளை வகித்தார். தனது நெருங்கிய நண்பராக இருந்த மைக்கேல் பூட்டிற்குப் பிறகு பதவியேற்றார்.[4] இவரது பெயரைக் கொண்ட இவரது பேரனும் ஒரு பத்திரிக்கையாளராக இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dictionary of Indian Biography. Ardent Media. 1971. p. 229. GGKEY:BDL52T227UN. பார்க்கப்பட்ட நாள் 27 October 2012.
- ↑ John Hinnells (12 December 2007). Parsis in India and the Diaspora. Taylor & Francis. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-44366-1. பார்க்கப்பட்ட நாள் 27 October 2012.
- ↑ Dictionary of Indian Biography. p. 229.
- ↑ "Dosabhai Framji Karaka | Making Britain".