தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் பேச்சிப்பாறை அணையின் முதன்மைக் கால்வாய்க்கரையில் அமைந்துள்ளது பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் (Horticultural Research Station). இந்நிலையம் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 8.3 எக்டரில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குமுன் இது தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையின் அன்னாசிப்பழ நாற்றங்காலாக இருந்தது[1]1992 இல் மேலும் 8 எக்டர்கள் சேர்க்கப்பட்டது. இதில் 2008ம் ஆண்டு விவசாய மையம் என்ற பெயரில் விவசாய பட்டயப்படிப்பு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது (Institute of Agriculture)[2].
ஆராய்ச்சிகள்
தொகு- மர வாசனைப்பயிர்கள், இடைக்கால மாம்பழ இரகங்கள், அன்னாசி இரகங்கள்[3], மரவள்ளிக்கிழங்கு, பூசணி குடும்பப் பயிர்கள், பயறுவகைப்பயிர்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் ஆகியவற்றில் அதிக விளைச்சல் தரக்கூடிய இரகங்களை உருவாக்குதல்
- மேற்கண்ட பயிர்களுக்கு சாகுபடித் தொழில் நுட்பத்தை கண்டறிதல்
- ஒருங்கிணைந்த பூச்சி, நோய் நிர்வாகம்
- பருவமழை
- வேளாண்காடுகள்[4]
பயிற்சிகள்
தொகு- பயிற்சிகள்
உற்பத்தி மற்றும் விற்பனை
தொகு- மண்புழு உரம்[5], பயிர் நாற்றுகள், உயிர் உரங்கள், சூடோமோனாஸ் உற்பத்தி மற்றும் விற்பனை
இங்கிருந்து வெளியிடப்பட்ட சில இரகங்கள்
தொகுபலா
தொகுஇரகம்: பிபிஐ 1 (PPI-1 )[6]
- ஒரு மரத்திற்கு 1800 கிலோ எடையுள்ள பழங்கள்
- ஒரு மரத்தில் 108 பழங்கள்
- இரு பருவங்களிலும் பலன் தரக்கூடியது
- இனிப்பான சுளைகள்
- 1996ல் வெளிடப்பட்டது
கத்தரி
தொகுஇரகம்: பிபிஐ (பி) 1 (PPI(B)1)
- 2001ல் வெளிடப்பட்டது
இலவங்கப்பட்டை
தொகுஇரகம்: பிபிஐ (சி) 1 (PPI(C)1)
- 2002ல் வெளிடப்பட்டது
உசாத்துணை
தொகு- ↑ http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_pechiparai.html
- ↑ https://www.mycollege.in/Horticultural-Research-station,-Pechiparai/809.php
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-29. பார்க்கப்பட்ட நாள் 2015-02-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-01. பார்க்கப்பட்ட நாள் 2015-02-02.
- ↑ http://agritech.tnau.ac.in/crop_protection/schemes%20&%20services_govt_vcs_hrs%20pechiparai.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-02-02.