தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு)

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் எழுத்தாளர் வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு முதலில் 1978-ல் வெளிவந்தது. இத்தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகள் உள்ளன. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்றான தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்பதே இப்புத்தகத்தின் பெயராகவும் அமைந்துள்ளது. இப்புத்தகத்திற்கு அன்பின் வழியதே உயிர்நிலை எனும் தலைப்பில் வண்ணதாசன் முன்னுரை எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் காப்புரிமை வண்ணதாசன் அவர்களிடம் உள்ளது

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
நூலாசிரியர்வண்ணதாசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைதமிழ் இலக்கியம்
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்சந்தியா பப்ளிகேஷன்
வெளியிடப்பட்ட நாள்
முதல் பதிப்பு 1978
பக்கங்கள்120

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள்

தொகு

இப்புத்தகத்தில்

  • தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
  • போர்த்திக் கொள்ளுதல்
  • ஞாபகம்
  • நரகத்திற்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்
  • போட்டோ
  • பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக
  • ஊமைப்படங்கள்
  • அன்பின் வழியது
  • நடப்பு
  • ஜன்னல்

ஆகிய சிறுகதைகள் உள்ளன.

பின்னட்டைக் குறிப்புகள்

தொகு

இப்புத்தகத்தின் பின்னட்டையில் பின்வரும் குறிப்பு இடம்பெற்றிருக்கிறது:

இந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.
கானகம் போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது.
இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை, அமைதி என்று வெவ்வேறு அடர்த்தியுடன் அந்தக் குரல் இந்த வாழ்வின் பரப்பில் படர்ந்துகொண்டேயிருக்கிறது.
நான் வாங்கிக்கொண்ட விதத்தில் என் காதில் விழுவதைச் சொல்கிறேன். சொல்வதைப் பாசாங்கின்றிச் சொல்வதே என் தொடர் முயற்சியாக இருக்கிறது.

வெளி இணைப்புகள்

தொகு