தோனி நதி (Doni river) (கன்னடம்: ಡೊಣಿ) கர்நாடக மாநிலத்தின் எல்லைக்கு அருகில் மகாராட்டிராவின் சாங்கலி நகரத்தைச் சுற்றி கிழக்கு நோக்கி பாய்கிறது. வட கர்நாடகாவின் பெல்காம், பீசப்பூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில் இந்நதி பெரும்பான்மையாக பாய்கிறது. தலிகோட்டா நகருக்கு தென்மேற்கில் கிருஷ்ணா ஆறு|கிருட்டிணா ஆற்றுடன்]] கலக்கிறது. இந்நதி கிருட்டிணா ஆற்றின் துணை நதியாகக் கருதப்படுகிறது. மேலும் தோனி நதி கிருட்டிணா ஆற்றுடன் தலிகோட்டாவில் சங்கமிக்கிறது. காட்னாலி மற்றும் பசவான பேகிவடி நகரங்களுக்கு அருகில் மழைக்காலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கை ஏற்படுகிறது.

ஒழுங்கற்ற வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால் வறட்சி ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது [1]. இதன் தண்ணீர் சலவை செய்வதற்கு கூட பொருத்தமானதாக இருப்பதில்லை [2].

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.
  2. Maramkal, MB (7 October 2009). "Notorious for breaching banks, Doni is Karnataka's Sorrow". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Notorious-for-breaching-banks-Doni-is-Karnatakas-Sorrow/articleshow/5095532.cms. பார்த்த நாள்: 18 May 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோனி_நதி&oldid=3846580" இலிருந்து மீள்விக்கப்பட்டது