தோப்பில் முகமது மீரான்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்

தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[2]

தோப்பில் முகமது மீரான்
பிறப்பு(1944-09-26)26 செப்டம்பர் 1944
நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு10 மே 2019(2019-05-10) (அகவை 74)
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
2010
வாழ்க்கைத்
துணை
ஜலீலா மீரான்
பிள்ளைகள்சமீம் அகமது
மிர்சாத் அகமது
விருதுகள்சாகித்திய அகாதமி விருது

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தனது 74 வயதில் (மே 1, 2019) உடல்நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எனும் இடத்தில் இறந்தார்.[3]

விருதுகள்

தொகு
  • சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தமிழக அரசு விருது
  • அமுதன் அடிகள் இலக்கிய விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது

எழுதிய நூல்கள்

தொகு

(முழுமையானதல்ல)

புதினங்கள்

தொகு
  • ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
  • துறைமுகம் (1991)
  • கூனன் தோப்பு 1993)
  • சாய்வு நாற்காலி (1997)
  • அஞ்சுவண்ணன் தெரு
  • குடியேற்றம்(2017)

சிறுகதைத் தொகுப்புகள்

தொகு
  • அன்புக்கு முதுமை இல்லை
  • தங்கரசு
  • அனந்தசயனம் காலனி
  • ஒரு குட்டித் தீவின் வரைபடம்
  • தோப்பில் முகமது மீரான் கதைகள்
  • ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது)
  • வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)

மேற்கோள்கள்

தொகு
  1. "எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்". புதியதலைமுறை (மே 10, 2019)
  2. "Living Legend". தி இந்து. 19 பிப்பிரவரி 2005 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606132411/http://www.hinduonnet.com/thehindu/mp/2005/02/19/stories/2005021900630100.htm. பார்த்த நாள்: 3 மே 2010. 
  3. "எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் மறைவு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோப்பில்_முகமது_மீரான்&oldid=3306625" இலிருந்து மீள்விக்கப்பட்டது