தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில்

தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் வேதாரண்யத்திற்கு வடக்கில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி தொகு

கேட்ட வரத்தைத் தருபவராக அபீஷ்ட வரதராஜபெருமாள் மூலவராக உள்ளார். பிரம்மா இங்கு தவம் செய்து இறைவனின் அருளைப் பெற்று வேதங்களைக் கற்றதாகவும், பிரம்மாவுக்கு அதனை உபதேசித்தவராக பெருமாள் இருந்ததால் அவரை வேதநாராயணன் என்றும் அழைக்கின்றனர். சேதுமாதவன் என்றும் அவர் அழைக்கப்படுகின்றார். [1]

சிறப்பு தொகு

ராமன் சீதையைத் தேடி தெற்கே சென்றபோது முதலில் வேதாரண்யத்தை அடைந்து இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை அமைத்து வழிபட்டதாகவும், இலங்கைக்குச் செல்லப் பாலம் அமைப்பதற்காக திட்டமிட்டதால் இவ்விடம் ஆதிசேது என்ற பெயரைப் பெற்றது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள் தொகு