தோமசு தங்கத்துரை வில்லியம்

மரு. தோமசு தங்கத்துரை வில்லியம் (Dr Thomas Thangathurai William, பிறப்பு: 13 பெப்ரவரி 1944) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்[1] ஆவார்.

தோமசு வில்லியம் தங்கத்துரை
Thomas Thangathurai William
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2010
முன்னையவர்கே. பத்மநாதன், ததேகூ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 13, 1944 (1944-02-13) (அகவை 81)
பாண்டிருப்பு, அம்பாறை மாவட்டம், இலங்கை
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பைச் சேர்ந்த தோமசு தங்கத்துரை சமூக சேவையாளர் ஆவார்.[2] இவர் இலங்கையின் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 9,029 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[3] ஆனாலும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் 2009 மே மாதத்தில் இறந்தததை அடுத்து வெற்றிடமான பதவிக்கு கட்சிப் பட்டியலில் இருந்து (இரண்டாவதாக வந்த அரியநாயகம் சந்திரநேரு ஏற்கனெவே இறந்தததினால்) தோமசு வில்லியம் 2009 சூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.[4]

2010 தேர்தலில் இவர் போட்டியிட்டாராயினும், 8,256 விருப்பு வாக்குகள் பெற்று கூட்டமைப்பு வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை நாடாளுமன்றம்: William, Thomas Thangathurai". இலங்கை நாடாளுமன்றம். Retrieved 27 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை பதவி பிரமாணம்". தேசம்.நெட். 11 சூன் 2009. Retrieved 27 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. Retrieved 2015-09-27.
  4. "New TNA MP for Ampaa'rai district sworn in". தமிழ்நெட். 12 June 2009. Retrieved 20 சூன் 2009.
  5. "General Election 2010 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. Retrieved 2015-09-27.