தோம்காச்சு

நாட்டுப்புற நடனம்

தோம்காச் (Domkach) என்பது பீகார் மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களில் ஆடப்படும் ஒரு வகையான நாட்டுப்புற நடனமாகும். பீகாரிலுள்ள மிதிலா மற்றும் போச்பூர் மண்டலங்களில் தோம்காச் நடனம் ஆடப்படுகிறது [1]. சார்க்கண்டில் நாக்புரி மொழி பேசும் மக்கள் இந்த நாட்டுப்புற நடனத்தை ஆடுகின்றனர் [2]. திருமணங்களின்போது மணமகன் மற்றும் மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த நடனத்தை நிகழ்த்துகிறார்கள். அனைத்து முக்கிய திருமண விழாக்களிலும் இந்த நடனம் நடக்கிறது. ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்த குறிப்பிட்ட நடனத்தை நிகழ்த்த அவர்கள் ஒரு அரை வட்டத்தை உருவாக்குகிறார்கள். பாடப்படும் பாடலின் வரிகள் நையாண்டி மற்றும் மகிழ்ச்சி நிறைந்தவையாக பாடப்படும். நாக்புரி தோம்காச் நடனம் எகாரியா தோம்காச், தோக்ரி தோம்காச் மற்றும் யும்தா தோம்காச் என மேலும் பிரிக்கப்படுகிறது [3]. உத்தரபிரதேசத்தில் இந்நடனத்தையே ஒரு வகையான பண்டிகையாகவும் கொண்டாடுகிறார்கள் [4].

மேற்கோள்கள்

தொகு
  1. "Domkach". Folklibrary.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  2. "Out of the Dark". democratic world.in. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "Easrern Zonal Cultural Centre". Ezccindia.org. Archived from the original on 5 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Rajesh Kumar; Om Prakash (30 November 2018). Language, Identity and Contemporary Society. Cambridge Scholars Publishing. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5275-2267-1. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோம்காச்சு&oldid=3784583" இலிருந்து மீள்விக்கப்பட்டது