தோரியம் இருகார்பைடு
தோரியம் இருகார்பைடு (Thorium dicarbide) என்பது ThC2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
12071-31-7 | |
EC number | 235-131-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
ThC2 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தோரியம் இருசிலிசைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | யுரேனியம் கார்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு2000-2500 °செல்சியசு வெப்பநிலையில் தோரியமும் கிராபைட்டும் சேர்ந்து வினைபுரிவதால் தோரியம் இருகார்பைடு உருவாகிறது.[1]
- Th + 2C -> ThC2
பண்புகள்
தொகுஇயற்பியல் பண்புகள்
தொகுதோரியம் இருகார்பைடு மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. இது தண்ணீரில் சிதைவடைகிறது.[2] 2773 °செல்சியசு வெப்பநிலையில் தீப்பற்றி எரிகிறது. 9 கெல்வின் வெப்பநிலையில் மீகடத்தியாகச் செயல்படுகிறது.[3] அறை வெப்பநிலையில் C2/c (விண்வெளி குழு எண். 15) என்ற இடக்குழுவுடன் ஒற்றைசரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. 1430 பாகை செல்சியசு மற்றும் 1480 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது ஒரு நாற்கோண படிகமாகவும் அதற்கு மேலான வெப்பநிலையில் கனசதுரப் படிக அமைப்பிலும் உள்ளது.[4]
வேதிப் பண்புகள்
தொகுதோரியம் இருகார்பைடு காற்றில் விரைவாக நீராற்பகுப்பிற்கு உட்பட்டு தோரியம் டையாக்சைடு, ஐதரசன் மற்றும் ஐதரோகார்பன்களை உருவாக்குகிறது. [5] இதன் வினை வீதம் தொடர்புடைய யுரேனியம் டைகார்பைடை விட 10 மடங்கு அதிகமாகும்.[6] கந்தக அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரியும். இவ்வினையில் தோரியம்(IV) சல்பேட்டு உருவாகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Elton B. Hunt, R. E. Rundle (Oct 1951). "The Structure of Thorium Dicarbide by X-Ray and Neutron Diffraction 1" (in en). Journal of the American Chemical Society 73 (10): 4777–4781. doi:10.1021/ja01154a090. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01154a090. பார்த்த நாள்: 2020-11-03.
- ↑ Lide, David R. (2006-06-26). 1998 Freshman Achievement Award (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0594-8.
- ↑ RÖMPP Lexikon Chemie, 10. Auflage, 1996-1999: Band 6: T - Z (in ஜெர்மன்). Georg Thieme Verlag. 2014-07-16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-200071-1.
- ↑ Bowman, A. L.; Krikorian, N. H.; Arnold, G. P.; Wallace, T. C.; Nereson, N. G. (1968-08-15). "The crystal structures of ThC2" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 24 (8): 1121–1123. doi:10.1107/S056774086800378X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. https://scripts.iucr.org/cgi-bin/paper?S056774086800378X.
- ↑ Perry, Dale L. (2016-04-19). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8.
- ↑ G. B. Engle, W. V. Goeddel, C. S. Luby (Mar 1962). "Reaction-Rate Studies of Thorium-Uranium Dicarbides in Moist Air" (in en). Journal of the American Ceramic Society 45 (3): 136–141. doi:10.1111/j.1151-2916.1962.tb11102.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7820. http://doi.wiley.com/10.1111/j.1151-2916.1962.tb11102.x. பார்த்த நாள்: 2020-11-03.
- ↑ Yasuichi Sasaki, Fujio Ichikawa, Hisashi Imai, Shinobu Uruno (Jul 1962). "Acid Leaching of Thorium Carbide" (in en). Nature 195 (4838): 267–268. doi:10.1038/195267a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. Bibcode: 1962Natur.195..267S. http://www.nature.com/articles/195267a0. பார்த்த நாள்: 2020-11-03.