தோரைட்டு

சிலிக்கேட்டு கனிமம்

தோரைட்டு (Thorite) என்பது Th,U)SiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தோரியம் தனிமத்தின் ஒரு கனிமச் சேர்மமாகும். தோரியத்தினுடைய சிலிக்கேட்டு வகை கனிமமான இது நாற்கோண படிக வடிவில் படிகமாகிறது. சிர்க்கான் எனப்படும் சிர்க்கோனியம் சிலிக்கேட்டு, ஆபினியத்தின் சிலிக்கேட்டு வகை கனிமமான ஆப்னான் போன்ற கனிமங்களுடன் இது சமவுருவம் கொண்டதாகக் காணப்படுகிறது. தோரைட்டு கனிமம் தோரியத்தின் மிகவும் பொதுவான ஒரு கனிமமாகும், இக்கனிமம் எப்போதும் வலுவான கதிரியக்கப் பண்பைக் கொண்டுள்ளது. இதன் தோரியம் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் 1829 ஆம் ஆண்டு இதற்கு தோரைட்டு எனப் பெயரிடப்பட்டது. தோரைட் கனிமம் 1828 ஆம் ஆண்டில் நோர்வேயின் லெவியா தீவில், கிராமப் புரோகிதரும் கனிமவியலாளருமான ஆன்சு மோர்டன் திரேன் எசுமார்க் என்பவர் கண்டுபிடித்தார். அவர் இந்த கருப்பு கனிமத்தின் முதல் மாதிரிகளை தனது தந்தை யேன்சு எசுமார்க்குக்கு அனுப்பினார், அவரும் கனிமவியல் மற்றும் புவியியல் பேராசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் [4][5][6].

தோரைட்டு
Thorite
கனடாவின் ஒண்டாரியோவில் கிடைத்த தோரைட்டு கனிமம் (அளவு: 2.2 x 2.2 x 1.6 செ.மீ)
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Th,U)SiO4
இனங்காணல்
நிறம்மஞ்சள் ஆரஞ்சு, பழுப்பு மஞ்சள், பழுப்புக் கருப்பு, கருப்பு, பச்சை
படிக இயல்புசதுரப் பட்டகம், அல்லது போலி எண்முகப் படிகங்கள்; பொதிகளாக
படிக அமைப்புநாற்கோணகம்
பிளப்பு{110} இல் தனித்துவம்
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4.5 – 5
மிளிர்வுபளபளப்பும் பிசின் தன்மையும்
கீற்றுவண்ணம்இளம் ஆரஞ்சு முதல் இளம் பழுப்பு வரை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது, மெல்லிய துண்டுகள் ஒளியை கடத்தும்
ஒப்படர்த்தி6.63 – 7.20
ஒளியியல் பண்புகள்ஒற்றை அச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.790 – 1.840 nε = 1.780 – 1.820
இரட்டை ஒளிவிலகல்δ = 0.010 – 0.020
Alters toபொதுவாக உருமாறும்
பிற சிறப்பியல்புகள்கதிரியக்கப் பண்பை கொண்டது
மேற்கோள்கள்[1][2][3]

தோற்றம் தொகு

 
பிரேக் தேசிய அருங்காட்சியகத்தில் தோரைட்டு
 
பச்சை தோரைட்டின் சிறிய படிகங்கள்-பெரிதாக்கப்பட்டுள்ளது

தோரைட்டு கனிமத்தின் மாதிரிகள் பொதுவாக தீப்பற்றக்கூடிய பெக்மாடைட்டு எனப்படும் தீப்பாறைகள் மற்றும் எரிமலை குழம்பிலிருந்து வெளிவந்த எரிமலைப்பாறை வகை பாறைகள் வெப்பநீர்ம நரம்புகள் மற்றும் உருமாறியப் பாறைகளில் இக்கனிமம் தோன்றுகிறது. தேய்வு மணல்களில் இது சிறு மணிகளாகவும் தோன்றுகிறது. படிகங்கள் அரிதானவையாகும் ஆனால் கண்டுபிடிக்கப்பட்டால் பிரமிடு முனையங்களுடன் நேர்த்தியான வடிவிலான குறுகிய படிகங்களை இவற்றிலிருந்து உருவாக்க முடியும். இது பொதுவாக சிர்க்கோன் , மோனசைட்டு, கடோலினைட்டு பெர்குசோனைட்டு , யுரேனைட்டு இட்ரைட்டு, பைரோகுளோர் உள்ளிட்ட கனிமங்களுடன் சேர்ந்தே காணப்படுகிறது.

தோரைட் கனிமம் தற்போது யுரேனியத்தின் முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும். தோரைட்டு கனிமத்தின் பல்வேறு வகைகளில் ஒரு வகையாக இது கருதப்படுகிறது. பெரும்பாலும் இதை யுரேனோதோரைட்டு என்றே அழைப்பார்கள். யுரேனியம் குறிப்பாக அதிகம் நிறைந்த தோரைட்டு கனிமம் கனடா நாட்டின் ஒன்டாரியோ நகரில் கிடைக்கிறது. தோரைட்டு கனிமத்தின் மற்ற இனங்கள் ஒராங்கைட்டு மற்றும் கால்சியோ தோரைட்டு போன்றவைகளாகும். தூய்மையில்லாதா கால்சியோ தோரைட்டு கனிமத்தில் சுவடு அளவுகளில் கால்சியம் தனிமமும் கலந்துள்ளது.

பண்புகள் தொகு

தோரைட்டு கனிமம் பொதுவாக முழுமையான உருமாற்றமும் நீரேற்றமும் அடையக்கூடிய கனிமமாகும். ஒற்றை சரிவச்சும் எளிதில் நொறுங்கக் கூடியதாகவும் பளபளப்பாகவும் பிசின் உடைய தோற்ற்மும் கொண்டதாக தோரைட்டு கனிமம் காணப்படுகிறது. இது ஒளியியல் ரீதியாக சமவியல்பு கொண்டு புறவேற்று வடிவமாகக் காணப்படுகிறது. உட்கூறுகளின் இயைபில் வேறுபாடும் ஒப்படர்த்தியிலும் 4.6 முதல் 6.6 வரை மாறுபாடும் , ஒளிர்வைப் பொறுத்தவரையில் பளபளப்பும் பிசின் உடையதாகவும் பண்புகளை வெளிப்படுத்துகிறது. தோரைட்டின் நிறம் பொதுவாக கருப்பு நிறமாகும். ஆனால் பல்வேறு காரணங்களினால் பழுப்புக் கருப்பும், ஆரஞ்சு நிறத்திலும், மஞ்சள் ஆரஞ்சு நிறத்திலும், அடர் பச்சை நிறத்திலும் கூட காணப்படுகிறது.

தோரைட்டு கனிமம் அதிக கதிரியக்கத்தன்மை கொண்டதாக இருப்பதால், அதன் மாதிரிகள் பெரும்பாலும் உருமாறும் நிலையில் உள்ளன. ஆகும் . இது கதிரியக்க தாதுக்களில் காணப்படும் ஒரு பொதுவான நிலையாகும். இதன் படிக அணிக்கோவையில் தோரைட்டு அதன் சொந்த கதிர்வீச்சினால் சிதையும் விளைவை சந்திக்கிறது. வெளிப்புற தோற்றம் மாறாமல் இருக்கும்போது இதன் விளைவு ஒரு படிக அணிக்கோவையை முற்றிலுமாகவும் அழிக்கக்கூடும்.

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தோரைட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரைட்டு&oldid=2868402" இலிருந்து மீள்விக்கப்பட்டது