தோர்னாரியா

தோர்னேரியா (Tornaria) என்பது ஏகோர்ன் புழுக்கள் போன்ற சில அரைமுதுகுநாணிகளின் மிதவைவாழிகளின்இளம் உயிரி ஆகும்.[1][2] இது நட்சத்திர மீன்களின் பைபின்னாரியா இளம் உயிரி தோற்றத்தினை மிகவும் ஒத்திருக்கிறது. குற்றிலையின சுருண்ட பட்டைகள் உடலைச் சுற்றி ஓடுகின்றன.[1] இது முட்டை வடிவினை உடையது. இந்த இளம் உயிரின் விட்டம் சுமார் 3 மி.மீ. ஆகும். நுனி ஒன்றில் தகடு ஒன்றைக் கொண்டுள்ளது. குற்றிலை நிறைந்த தடிமனான பகுதியும் ஒரு இணை கண் புள்ளிகளும் காணப்படுகிறது. இளம் உயிரிகள் முழுமையான உணவுக் கால்வாயைக் கொண்டுள்ளன. குற்றிலை பட்டைகள் முன்புற மற்றும் பின்புற பகுதி முழுவதும் நீண்டுள்ளது.

தோர்னேரியா இளம் உயிரி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Nakajima Y; Humphreys T; Kaneko H; Tagawa K. (January 2004). "Development and neural organization of the tornaria larva of the Hawaiian hemichordate, Ptychodera flava". Zoological Science 21 (1): 69–78. doi:10.2108/0289-0003(2004)21[69:DANOOT]2.0.CO;2. பப்மெட்:14745106. 
  2. "tornaria". 2015. {{cite web}}: |access-date= requires |url= (help); Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்னாரியா&oldid=3816629" இலிருந்து மீள்விக்கப்பட்டது