தோல்வி மனப்பான்மை

தோல்வி மனப்பான்மை (Defeatism) என்பது தோல்வியை போராடாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும். இதனை உளவியலில் நம்பிக்கையில்லாத குணத்துடன் தொடர்புபடுத்தலாம். மேலும் சில சமயங்களில் மரணவாதம் அல்லது நிர்ணயவாதத்திற்கு ஒத்ததாகப் பயன்படுத்தப்படலாம்.[1]

வரலாறு

தொகு

தோல்வி மனப்பான்மை என்ற சொல் பொதுவாக அரசியலில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சித்தாந்த நிலைப்பாட்டிலிருந்து விளக்கமளிக்கும்போது, இதை எதிர்கட்சியோடு ஒத்துழைப்பு நல்குவதாக கருதலாம். இராணுவச்சூழலில் பார்க்கும்போது, போர்க்காலங்களில், குறிப்பாக போரிடப்போவதற்கு முன்பாக, தோல்வி மனப்பான்மையை “தேசத்துரோகத்துடன்” ஒப்பிடப்படுகிறது.

தோல்வி மனப்பான்மையுடையவனாக ஒரு இராணுவ வீரன் இருந்துகொண்டு, தனது சித்தாந்த மதிப்புடைய தேசக்கொள்கையை சந்தேகித்து, குரல் எழுப்பி, போரிட மறுக்கும்போது அவனை இராணுவச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தலாம். அதாவது தொடர்ந்திருக்கும் வினாக்களான “போரானது முன்பே தோற்றுப்போனதா?” மற்றும் “சண்டையானது நாம் படும் பிரயத்தனத்திற்கு தகுமா?” போன்ற வினாக்கள் மூலம் எழும் தோல்வி மனப்பான்மையானது, இராணுவ வெற்றியைவிட, போர் முடிவிற்கான மாற்றுவழியென மறைபொருளாக ஆலோசனை வழங்குகிறது.

தோல்வி மனப்பான்மையுடைய பல தளபதிகளை இரண்டாம் உலகப்போரின்போது, இட்லர் திடீரென வேலையிலிருந்து வெளியேற்றினார்.[2] போரின் இறுதியாண்டில் ஜெர்மன்மக்கள் நீதிமன்றம்” நாடுமுழுவதும், விளம்பர பலகைகளில் அவர்களை கண்டித்து, அவர்களின் பெயர், பேச்சு, செயல்கள் அடங்கிய இளம்சிவப்புநிற சுவரொட்டிகளை வாரந்தோறும் ஒட்டியது.[3][4]

மேற்கோள்

தொகு
  1. "defeatism". dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
  2. Ian Kershaw (2001) Hitler 1936-1945 Vol. II p. 168
  3. Kershaw 2001, p. 580: "[Hitler] was much influenced by the views of the Commander-in-Chief South, Field Marshal Kesselring, one of nature's optimists and, like most in high places in the Third Reich, compelled in any case to exude optimism, whatever his true sentiments and however bleak the situation was in reality. In dealings with Hitler — as with other top Nazi leaders whose mentality was attuned to his — it seldom paid to be a realist. Too easily, realism could be seen as defeatism. Hitler needed optimists to pander to him..."
  4. Antony Beevor, 2003, The Fall of Berlin 1945, p. 131.

மேலும் சில ஆதாரங்கள்

தொகு
  1. H.W. Koch: In the Name of the Volk: Political Justice in Hitler's Germany. I.B. Tauris, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1860641741 pp. 228
  2. http://dictionary.reference.com/browse/defeatism. Retrieved 2014-03-13
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்வி_மனப்பான்மை&oldid=4049002" இலிருந்து மீள்விக்கப்பட்டது