தோல் (பாட்டின் வனப்பு)

தோல் என்பது பாட்டின் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.

இழுமென இழிதரும் அருவி திருமுருகாற்றுப்படை ஈற்றயலடி என்னும்போது ‘இழும்’ என்னும் சொல் வழிந்தோடும் ஓசையை உணர்த்துவதை அறிகிறோம். சமனிலத்தில் ஆறு பரந்து ஓடுவதைப் பார்க்கிறோம். இவற்றைப் போல பல அடிகள் விழுமிய பொருளை விளக்கிக்கொண்டு இழும் எனப் பரந்து நடக்கும் அடிகளைக் கொண்ட பா அல்லது பாட்டு தோல் என்னும் வனப்பாகும்.[1]

மலைபடுகடாம் என்னும் நூல் தோல் வனப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. [2]

அடிக்குறிப்பு தொகு

  1. இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
    பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்
    தோல் என மொழிப தொல் மொழிப் புலவர்.
                                  -தொல்காப்பியம், செய்யுளியல் 230

  2. உரையாசிரியர் இளம்பூரணர் எடுத்துக்காட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_(பாட்டின்_வனப்பு)&oldid=1247513" இலிருந்து மீள்விக்கப்பட்டது