தௌண்டியா கேரா தங்கப் புதையல் சோதனை
தௌண்டியா கேரா தங்கப் புதையல் சோதனை உத்தரப் பிரதேசம் மாநில உன்னோ மாவட்டத்தில் சங்கரம்பூர்(பழைய பெயர் தௌண்டியா கேரா) கிராமத்தில் 2013ம் ஆண்டு நடைபெற்றது. சோபன் சர்க்கார் என்ற சாதுவின் கனவில் 1000 டன் மதிப்புள்ள தங்கம் ராஜா ராவ் ராம் பக்சிங் கோட்டையில் இருப்பதாகக் கண்டார் என்று கூறப்படுகிறது.அவர் நேராக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திடம் செல்லாமல் , மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்தை அனுகினார் .[1] அதன் பிறகு சுரங்கத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆகிய அமைப்புகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டு அவற்றின் ஒப்புதலுடன் 18 அக்டோபர் 2013ல் அகழாய்வுகள் தொடங்கப்பட்டன.[2][3]
தௌண்டியா கேரா ராஜா ராவ் ராம் பக்சிங் கோட்டை | |
---|---|
பகுதி | உன்னோ மாவட்டம் |
ஆயத்தொலைகள் | 26°09′59″N 80°39′12″E / 26.16639°N 80.65333°E |
பகுதி | உத்தரப் பிரதேசம் |
வரலாறு | |
கட்டுநர் | ராஜா ராவ் ராம் பக்சிங் |
கட்டுமானப்பொருள் | கற்கள் |
பயனற்றுப்போனது | 1857 |
காலம் | 7ம் நூற்றாண்டு |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | அக்டோபர் 2013 |
அகழாய்வாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
நிலை | Ruins |
தௌண்டியா கேராவின் வரலாறு
தொகுதௌண்டியா கேரா கிராமம் ஒரு பழமையான பகுதியாகும். இந்தியத் தொல்லியல் ஆய்வக நிறுவனர் சர் அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரால் தௌண்டியா கேரா மற்றும் ஹயமுக ஆகிய தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் சீனப் பயணியான சுவான்சாங் ஹயமுக பகுதிக்கு வந்து ஐந்து புத்தக் கோவில்களின் பட்டியல்களையும் ஆயிரக்கணக்கான புத்தப் பாடசாலைகளையும் பதிவுசெய்துள்ளார். கன்னிங்காம் கூற்றின் படி தௌண்டியா கேரா பகுதி பழைய இந்து போராளி சமூகமான பைஸ் ராஜபுத்திரர்களின் தலை நகரமாக இருந்துள்ளது
அகழாய்வு
தொகு18 அக்டோபர் 2013 அன்று 12 சிறிய குழுக்களுடன் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழாய்வுகளை நடத்தத் தொடங்கியது. இந்திய ஊடகங்களின் கவனம் ஒரே நாளில் இக்கோட்டைக்கும், இப்பகுதிக்கும் கிடைத்துள்ளது. மேலும் அகழாய்வுகளைக் காணப் பலர் இங்கு கூடுகின்றார்கள்[4] இப் பணியை நீதிமன்றம் கண்காணிக்க கோரி தொடுக்கப்பட்ட பொதுநலன் வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாக எந்த முடிவையும் எடுக்க இயலாது என்று கூறியது.[5] அகழ்வாய்வின்படி, 2013 அக்டோபர் 27-ம் தேதி வரை சுமார் 4000 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் கனிமங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Daundiya Kheda Live". The Indian Express. 19 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2013.
- ↑ "BBC News - Tight security at India 'treasure hunt' site". BBC News. Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
- ↑ "Unnao treasure hunt: Seer sees, diggers dig for gold of dreams and a grave for reason in old UP village". இந்தியா டுடே. 18 October 2013. பார்க்கப்பட்ட நாள் 18 October 2013.
- ↑ மன்னர் கோட்டையில் தங்க புதையலா ? தேடுதல் வேட்டையில் தொல்லியல் துறை -தினமலர்
- ↑ "தங்கம் தோண்டுவதைக் கண்காணிக்க முடியாது--உச்சநீதிமன்றம்". பிபிசி. 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2013.
- ↑ தங்கம் மற்றும் கனிமங்கள் கண்டெடுப்பு