த. கோடப்பிள்ளை
புலவர் த.கோடப்பிள்ளை என்பவர் தமிழ் எழுத்தாளர் ஆவார்[1]
இளமைக்காலம்
தொகுகோடப்பிள்ளை திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலக்காடு என்னும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் தம்மனான் மற்றும் தாய் பெயர் வள்ளியம்மை ஆகும். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றார். திருச்சிராப்பள்ளி, நெய்வேலி, கல்லக்குடி தால்மியாபுரம் ஆகிய இடங்களிலுள்ள உயர்நிலைப் மேல்நிலைப்பள்ளிகளில் 30 ஆண்டு காலம் தமிழ்ப் பணிபுரிந்தவர்.
படைப்புகள்
தொகுகல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நாடகம் எழுதும் போட்டியில் பரிசு பெற்றவர். இளமையிலிருந்தே பல நாடகங்களை எழுதியவர். வானொலியில் பல நாடகங்களை ஒலிபரப்பியவர். இவர் சுமார் 31 நாடகங்களை எழுதியுள்ளார்.கதை,கட்டுரை, கவிதை, ஆய்வுக் கட்டுரைகள் என பலவும் படைத்துள்ளார். மேடைச் சொற்பொழிவாற்றலும் மிக்கவர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் கோலாலம்பூர் ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கட்டுரையைப் படித்து, அதை நூலாக வெளியிட்டவர். உலகத தமிழார் மாநாடுகளிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்துள்ளார்.
அன்புத்தங்கை, அம்மை ஆண்டாள், தமிழ் எழுத்தமைப்பு, வான்வழி வள்ளுவம், மருத நாயகம் என்னும் கம்மந்தன் பூசுபுகான், வான்வழி விருந்து, வான்வழி நாடகங்கள், நாடக நருமலர்கள், சிந்தனைச் செல்வர் சாக்கரட்டீஸ், எளிமைத் தமிழ், தமிழ்ப்பூக்கள், பூவே பூவே, மனக்குரங்கு, கோடப்பிள்ளை குறள் ஆவேரா உரை/ கதிரேசனார் உரை நடைச்சிறப்பு ஆகிய நூலகளைப் படைத்துள்ளார்.