த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை
த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை என்பவர் சைவ நெறியின் மீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும் கொண்ட அளவிலாத பற்றால் பல நூல்களை இயற்றியும், பதிப்பேற்றியும் தமிழுக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார். இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 21-வது குருமகா சந்நிதானம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் மகாவித்துவான் என பட்டம் அளித்து சிறப்பித்தார்.[1]
த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை | |
---|---|
இருப்பிடம் | திருவாவடுதுறை |
பணி | ஆதீனப்புலவர் |
பணியகம் | திருவாவடுதுறை ஆதீனம் |
அறியப்படுவது | அழிநிலை நூல்களைப் பதிப்பித்தமை |
பட்டம் | திருவாவடுதுறை ஆதீனம் மகாவித்துவான் |
சமயம் | இந்து சமயம் |
பிள்ளைகள் | சிவஞானவல்லி, சிவஞானம், திருநாவுக்கரசர் |
நூல்களின் பட்டியல்
தொகுபுத்தகத்தின் பெயர் | பதிப்பகம் | பதிப்பித்த ஆண்டு |
---|---|---|
திருவெம்பாவை கருத்து முதலியன | திருவாவடுதுறை ஆதீனம் | 1952 |
சைவப்பேரரசு | வெங்கடேஸ்வர் அச்சகம் | 1952 |
திருவாவடுதுறை ஆதீன வரலாறு | திருவாவடுதுறை ஆதீனம் | 1950 |
சந்தானக்குரவர் நான்மணி மாலை | திருவாவடுதுறை ஆதீனம் | 1951 |
திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் - ஆராய்ச்சிக்குறிப்பு | திருவாவடுதுறை ஆதீனம் | 1953 |
ஸ்ரீகாசிக்காண்டம் என வழங்கும் ஸ்ரீகாசிக்கண்டம் - மூலம் | திருவாவடுதுறை ஆதீனம் | 1953 |
ஸ்ரீமாசிலாமணி தேசிக மூர்த்திகள் அருளிச்செய்த திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் | திருவாவடுதுறை ஆதீனம் | 1953 |
மெய்கண்டசாத்திரம் - ஸ்ரீ உமாபதி நாயனார் அருளிச்செய்த சிவப்பிரகாசம் மூலம் | திருவாவடுதுறை ஆதீனம் | 1953 |
திருத்துறையூர் அருணந்திதேவ நாயனார் அருளிச்செய்த இருபாவிருபது | திருவாவடுதுறை ஆதீனம் | 1952 |
தணிகைப்புராணம் - குறிப்புரையுடன் | திருவாவடுதுறை ஆதீனம் | 1960 |
திருமூலர் திருமந்திரம் - கைலாயச் சித்தர் உரை | திருவாவடுதுறை ஆதீனம் | 1954 |
சிவஞானக் களஞ்சியம்[2] | வித்யா அச்சகம் | 1949 |
திருப்பருப்பதம் தேவாரத் திருப்பதிகங்கள் | திருவாவடுதுறை ஆதீனம் | 1953 |
அரிகரதாரதம்மியம், பரப்பிரம விளக்கம் | திருவாவடுதுறை ஆதீனம் | 1953 |
உலகுடைய நாயனார் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், பெரிய பிள்ளைத் திருவெண்பா, ஆனந்தக்களிப்பு முதலியன | வெங்கடேஸ்வர் அச்சகம் | 1951 |
சடமணிக்கோவை பொழிப்புரையுடன் | வித்யா அச்சகம் | 1949 |
ஆலங்குடி என்னும் திருவிரும்பூலைக் குமரவேல் கொச்சக்கலிப்பா | லட்சுமி அச்சகம் | 1961 |
திருக்குடமூக்குத் தலவரலாறு | திருபுவனம் மதராசு லா ஜர்னல் பிரான்சு அச்சகம் | 1947 |
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் சபாபதி நாவலரவர்கள் மொழிப்பெயர்த்தாற்றிய பாரத தார்ப்பரிய சங்கிரகம் உரையுடன் | வெங்கடேஸ்வர் அச்சகம் | 1951 |
சீகாழி சிற்றம்பல நாடிகை, கலித்துறை முதலியன | முருகன் அச்சகம் | 1954 |
சந்தானாச்சார்ய புராண சங்கிரகம் | வெங்கடேஸ்வர் அச்சகம் | 1951 |
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து வித்துவான் சபாபதி நாவலரவர்கள் இயற்றிய சமயம் | தமிழ் வளர்ச்சிக் கழகம் | 1949 |
ஸ்ரீமாதவசிவஞானசுவாமிகள் பிரபந்தங்கள், வடதிருமுல்லைவாயிலந்தாதி - மூலமும், உரையும் | திருவாவடுதுறை ஆதீனம் | 1952 |
அத்துவித வாக்கியத் தெளிவுரை | வெங்கடேஸ்வர் அச்சகம் | 1949 |
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து திராவிடமாபாடிய கர்த்தராகிய ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் அருளிச்செய்த கலைசை பதிற்றுப்பத்தந்தாதி | திருவாவடுதுறை ஆதீனம் | 1951 |
ஸ்ரீ உமாபதிதேவநாயனார் அருளிச்செய்த போற்றிப்பஃறொடை முதலியன | திருவாவடுதுறை ஆதீனம் | 1954 |
இரட்டையர் பிரபந்தங்கள் | திருவாவடுதுறை ஆதீனம் | 1953 |
திருக்கோகரணம் தேவாரத் திருப்பதிகங்கள் | திருவாவடுதுறை ஆதீனம் | 1952 |
திருமந்திரம் சிவயோகப்பகுதி முதலியன பழையவுரை விளக்கம் | திருவாவடுதுறை ஆதீனம் | 1955 |
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவெம்பாவை | பாரதி அச்சகம் | 1952 |
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து திராவிடமாபாடிய கர்த்தராகிய ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் பிரபந்தங்கள் | வெங்கடேஸ்வர் அச்சகம் | 1950 |
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து 3வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் அருளிச்செய்த பதி பசு பாசப் பனுவல், அளவை அட்டவணை, பதி பசு பாசத் தொகை | வெற்றிவேர் பதிப்பகம் | 1880 |
போலிவினா மறுப்பு | திருவாவடுதுறை ஆதீனம் | 1952 |
முத்தி பஞ்சாக்கர மாலையும் : திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து திராவிடமாபாடிய கர்த்தராக விளங்கும் ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் மாலையும் | துறைசையாதீனம் | 1949 |
திருமந்திரம் - கைலாயச் சித்தர் உரை | திருமந்திர மாநாடு | 1954 |
சிதம்பரம் கங்கட்டிமடம் ஸ்ரீ மறைஞான சம்பந்த நாயனார் அருளிச்செய்த சைவ சிறுநூல்கள் - முதற்பகுதி | திருவாவடுதுறை ஆதீனம் | 1954 |
கவிராக்ஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் | முருகன் அச்சகம் | 1953 |
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து 3வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் அருளிச்செய்த பூப்பிள்ளை அட்டவணையும், பஞ்சாக்கர சிந்தனையும், ஞான பூசையும் | திருவாவடுதுறை ஆதீனம் | 1949 |
திருவள்ளுவ நாயனாரும், பெரிய புராணமும் | தமிழ் வளர்ச்சிக் கழகம் | 1949 |
திருத்தொண்டர் மாலை | நமச்சிவாயமூர்த்தி அச்சகம் | 1957 |
தொட்டிக்கலை மதுரகவி ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் பிரபந்தங்கள் | திருவாவடுதுறை ஆதீனம் | 1953 |
சீகாழி சட்டைநாத வள்ளல் அருளிச் செய்த சதாசிவரூபம் - பழைய உரையுடன் | முருகன் அச்சகம் | 1954 |
சீனிப்புலவர் இயற்றிய திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம் | வெங்கடேஸ்வர் அச்சகம் | 1954 |
கவிராக்ஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் - இரண்டாம் பகுதி | திருவாவடுதுறை ஆதீனம் | 1954 |
திருவிடைமருதூர் தலவரலாறு - கல்வெட்டு | மகாலிங்கசுவாமி தேவஸ்தானம் | 1954 |
குளத்தூர்ச் சோமேசர் முதுமொழி வெண்பா : மூலம் | திருவாவடுதுறை ஆதீனம் | 1952 |
திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் | வெங்கடேஸ்வர் அச்சகம் | 1953 |
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருவஞ்சைக்கலம், திருநொடித்தான்மாலை, தேவாரத் திருப்பதிகங்கள் | திருவாவடுதுறை ஆதீனம் | 1952 |