த. ஜெயசீலன்

த. ஜெயசீலன் (பிறப்பு - மார்ச் 5, 1973) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். தொண்ணூறுகளிற் கவிதை எழுதத் தொடங்கியோரில் குறிப்பிடத்தக்க ஒருவர். இவரது கவிதைகளில் மரபுக்கவிதையின் சாயலைக் காணலாம். ஜெயசீலன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரி ஆகி ஈராண்டுகள் விரிவுரையாளராக கடமை ஆற்றியவர். மூன்று ஆண்டுகள் ஆசிரியராக கடமை ஆற்றிய நிலையில் 2003ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் தேறி மருதங்கேணி உதவி அரச அதிபராக கடமை ஆற்றி பின் காரைநகர் உதவி அரசராக கடமையாற்றி தற்போது பருத்தித்துறை பிரதேச செயலராக கடமையாற்றுகிறார். இரு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

த. ஜெயசீலன்
பிறப்புமார்ச் 5, 1973
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. யாழ் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபிரதேச செயலர், ஈழத்து எழுத்தாளர்

இவரது நூல்கள் தொகு

  • கனவுகளின் எல்லை (2001)
  • "கைகளுக்குள் சிக்காத காற்று" (2004)
  • "எழுதாத ஒரு கவிதை" (2013)
  • "புயல் மழைக்குப் பின்னான பொழுது" (2014)

வெளியிணைப்பு தொகு

* கவிஞர் த. ஜெயசீலன் பரணிடப்பட்டது 2015-04-14 at the வந்தவழி இயந்திரம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ஜெயசீலன்&oldid=3632320" இலிருந்து மீள்விக்கப்பட்டது