த. பசுமதாரி

தரணிதோர் பாசுமதரி (D. Basumatari) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பாசுமதரி இந்திய நாடாளுமன்றத்திற்கு அசாம் மாநிலம் கோக்ராஜார் மக்களவைத் தொகுதிக்கு 1957, 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[1][2][3][4]

த. பசுமதாரி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1957-1977
பின்னவர்சரண் நர்சாரி
தொகுதிகோக்ராஜார், அசாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1914
தலைகான், கோல்பாரா மாவட்டம், அசாம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நர்மதா பாசுமத்தாரி
பிள்ளைகள்4 மகன்கள்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
  2. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
  3. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
  4. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 4 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._பசுமதாரி&oldid=3949440" இலிருந்து மீள்விக்கப்பட்டது