த லெஷர் சீக்கர்

த லெஷர் சீக்கர் (The Leisure Seeker) என்பது 2017 ஆண்டைய இத்தாலின்-அமெரிக்க சாலைத் திரைப்படமாகும். இதை பாவ்லோ விர்ஸி இயக்கியுள்ளார். இது அவரது முதல் ஆங்கில மொழி திரைப்படமாகும். இந்தப் படம்  2009 ஆண்டு இதே பெயரில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் ஸடோரியன் எழுதிய எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் டோனல்ட் சதர்லாண்ட் மற்றும் ஹெலன் மிரென் ஆகியோர் இணைந்து நடித்ததுள்ளனர்.[1][2]   இது 74 வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது.[3]

த லெஷர் சீக்கர்
இயக்கம்பாவ்லோ விர்ஸி
தயாரிப்புஃபேப்ரிஜியோ டொன்விடோ
மார்கோ கோஹென்
பெனீடொட்டோ ஹபீப்
மூலக்கதைத லெஷர் சீக்கர்
படைத்தவர் மைக்கேல் ஸடோரியன்
திரைக்கதைபாவ்லோ விர்ஸி
பிரான்செஸ்கா ஆர்க்கிபுஜி
பிரான்செஸ்கோ பிஸ்கோலோ
ஸ்டீபன் அமிடோன்
நடிப்புடொனால்ட் சதர்லேண்ட்
ஹெலன் மிரென்
ஒளிப்பதிவுலூகா பிக்ஸாசி
கலையகம்இண்டியன் புரொடக்சன்ஸ் கம்பெனி
ராய் சினிமா
விநியோகம்சோனி பிக்சர்ஸ் கிளாசிக்ஸ்
கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்சி
BAC பிலிம்ஸ்
வெளியீடு3 செப்டம்பர் 2017 (2017-09-03)(Venice)
19 சனவரி 2018 (United States)
நாடுஇத்தாலி
ஐக்கிய மாநிலங்கள்
மொழிஆங்கிலம்

கதை தொகு

ஜான் –எல்லா ஆகிய இருவரும் எண்பது வயதை தொட்ட முதிய தம்பதியினர். ஐம்பது வருடத் திருமண வாழ்வின் நிறைவாக ஜானுக்கு நினைவுகள் அழியும் அல்சைமர் நோயும் எல்லாவுக்கு புற்றுநோயும் கண்டறியப்படுகின்றன. தாங்கள் சேர்ந்து வாழும் காலம் எண்ணப்படுவதை உணரும் இந்த முதிய தம்பதி, தாங்கள் கடந்துவந்த காதலின் பொன்னான தருணங்களைக் கடைசியாக நினைவுகூரும் முயற்சியில் வீட்டை விட்டு வெளியேறும் சாகசம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். அதன்படி இளம்பருவத்தில் ஊர் சுற்றிய, வீட்டுக்கான வசதிகளை உள்ளடக்கிய பொழுதுபோக்கு வாகனம் ஒன்றில் தப்பிக்கிறார்கள்.

தங்களது பெற்றோர்களை அவர்களின் வளர்ந்த குழந்தைகளும் மருத்துவர்களுமாகத் தேட ஆரம்பிக்கின்றனர். அனைவருக்கும் போக்குகாட்டும் முதியவர்கள் தங்கள் கடைசிப் பயணத்தைத் தொடர்வதும் அப்பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களுமே படம்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_லெஷர்_சீக்கர்&oldid=3170232" இருந்து மீள்விக்கப்பட்டது