நகர்ப்புறக் கலைகள்
தற்காலத்தில் இடம்பெற்றுவரும் துரித நகரமயமாக்கலும், நகர்ச்சூழலும் பல புதிய கலைகளை தோற்றுவித்தும், பழைய கலைகளுக்கு புது வடிவங்கள் கொடுத்தும், பிற பல கலைகளை மீளுருவாக்கமும் செய்தும் வருகின்றது. இப்படி நகரத்தவர்களால் நகர்ச்சூழலில் முக்கியத்துவம் பெறும் கலைகளை நகர்ப்புறக் கலைகள் எனலாம். இவற்றை கிராமத்து சூழலோ அமைந்த கலைகளோடு ஒப்பிட்டு ஆயலாம். நகரத்தில் இருக்கும் மனிதன் அன்னியப்பட்டு இருக்கின்றான் என்ற கருத்துக்கோட்பாட்டுக்கு இந்த கலைகள் ஒரு மறுப்பாக அமைகின்றன.