நகர் மைய்ய பேரங்காடி
நகர் மைய்ய பேரங்காடி (City Centre Mall) இந்தியாவின் கருநாடக மாநிலம் சிமோகாவில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகமாகும். சிமோகா பேருந்து முனைய பேரங்காடி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நகரில் முதன் முதலாகக் கட்டப்பட்ட வணிக வளாகம் என்ற சிற்ப்பும் இப்பேரங்காடிக்கு உண்டு. ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட வணிக நிறுவனமான இ.கே.கே.குழுமத்தின் ஆதரவுடன் வளர்ந்து வரும் நகர் மைய்ய பேரங்காடி கருநாடகா சாலைப் போக்குவரத்து பேருந்து நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2][3]
இருப்பிடம்: | சீமக்கா, கருநாடகம், இந்தியா |
---|---|
திறப்பு நாள் | ஏப்ரல் 2014 |
உருவாக்குநர் | இ.கே.கே குழுமம் |
கட்டிடக் கலைஞர் | கருநாடக மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனம் |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 85,000 sq ft (7,900 m2) |
தள எண்ணிக்கை | 3 |
வலைத்தளம் | cityshimoga |
பேரங்காடி
தொகுஇந்த பேரங்காடியானது உலகளாவிய வணிக நிறுவனமான குசுமேன் & வேக்பீல்டு நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது. மும்பையைத் தலமையிடமாகக் கொண்ட பியூச்சர் குழுமத்தின் பேரங்காடி பெருஞ் சந்தையையும் கொண்டுள்ளது.[1]
இ.கே.கே. குழுமம்
தொகுஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்ட இ.கே.கே குழுவானது இ.கே. காதரால் நிறுவப்பட்ட 100 மில்லியன் அரபு அமீரக திர்காம் நிறுவனமாகும். தற்போது இ.கே. முகமது சோகைல் தலைமை வகிக்கிறார். இக்குழுமம் துபாய், சார்ஜா, அச்மான், மும்பை, கர்நாடகா மற்றும் கேரளாவில் வணிக நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. சில்லறை வர்த்தக சங்கிலிகள், விருந்தோம்பல் உணவகங்கள் மற்றும் நில வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 www.thisweekbangalore.com, "Shimoga gets its first shopping mall; UAE and India based EKK Group expands in Central Karnataka", http://www.thisweekbangalore.com.
- ↑ "City's First Shopping Mall". Ajeya Kannada Daily, Shimoga. 2 April 2014 இம் மூலத்தில் இருந்து 11 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150311205151/http://ajeyakannadadaily.blogspot.in/. பார்த்த நாள்: 8 April 2014.
- ↑ http://www.ekkgroup.com, EKK Group Website.