நகர மண்டபம், கொழும்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நகர மண்டபம், கொழும்பு (Town Hall, Colombo) என்றழைக்கப்படுவது கொழும்பு மாநகர சபையின் தலைமையகமும் கொழும்பு மேயரின் அலுவலகமும் தெரிவு செய்யப்பட்ட நகரசபையின் சந்திப்பு இடமுமாகும். இது விகாரமகாதேவி பூங்காவின் முன்னால் அமைந்துள்ளது.
நகர மண்டபம் | |
---|---|
![]() நகர மண்டபம், கொழும்பு | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நகர் | கொழும்பு |
நாடு | இலங்கை |
ஆள்கூற்று | 6°54′57.06″N 79°51′49.63″E / 6.9158500°N 79.8637861°Eஆள்கூறுகள்: 6°54′57.06″N 79°51′49.63″E / 6.9158500°N 79.8637861°E |
கட்டுமான ஆரம்பம் | 1924 |
நிறைவுற்றது | 1927 |
கட்டுவித்தவர் | கொழும்பு மாநகர சபை |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர் | எஸ்.ஜே. எட்வாட்சு |
அடிக்கல் 1924, மே, 24 அன்று அக்காலத்தில் கொழும்பின் மேயராக இருந்த டி. ரீட் என்பவரால் பதிக்கப்பட்டது, கட்டுமானம் 1927 இல் நிறைவு பெற்றது. இது எஸ்.ஜே. எட்வாட்சு என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் மேயரின் அலுவலகம், சபையினர் கூடம், பெரிய விருந்தினர் மண்டபம் தேவைப்படும் நிகழ்வுகளிற்கான இடமாக அமைக்கப்பட்டது. தற்போது நகரசபை நிர்வாக ஊழியர்களின் வதிவிடமாகவுள்ளது. அதன் தோட்டம் பல்வேறு பேரணிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆண்டு முழுதும் நிகழும் இடமாகவுள்ளது.
வெளி இணைப்புக்கள்தொகு
- Under the dome, Architecture of Town Hall பரணிடப்பட்டது 2012-09-29 at the வந்தவழி இயந்திரம்