பினாங்கு நகர விளையாட்டரங்கம்

(நகர விளையாட்டரங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பினாங்கு நகர விளையாட்டரங்கம் ஆங்கிலம்: Penang City Stadium; மலாய்: Stadium Bandaraya Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு பல்நோக்கு மைதானமாகும். மேலும் இது பினாங்கு மாநில கால்பந்து அணியான பினாங்கு எப் சி-க்குச் சொந்த மைதானமாக செயல்படுகிறது.

பினாங்கு நகர விளையாட்டரங்கம்
Penang City Stadium
Stadium Bandaraya Pulau Pinang
பினாங்கு நகர விளையாட்டரங்கம் is located in central George Town, Penang
பினாங்கு நகர விளையாட்டரங்கம்
பினாங்கு நகர விளையாட்டரங்கம்
முன்னாள் பெயர்கள்பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம்
(1 அக்டோபர் 1945–8 ஆகஸ்டு 2003)
அமைவிடம்ஜார்ஜ் டவுன், பினாங்கு
ஆட்கூற்றுகள்5°24′42″N 100°18′52″E / 5.4117°N 100.3145°E / 5.4117; 100.3145
உரிமையாளர்பினாங்கு மாநில அரசு
இயக்குநர்பினாங்கு தீவு மாநகராட்சி
இருக்கை எண்ணிக்கை20,000[1]
ஆடுகள அளவு110 m × 70 m (120 yd × 77 yd)
தரைப் பரப்புபுல்வெளி
தடகளம்
கட்டுமானம்
Broke ground1 அக்டோபர் 1945
கட்டப்பட்டதுஜூன் 1, 1948
திறக்கப்பட்டதுசெப்டம்பர் 1, 1956
சீரமைக்கப்பட்டது1953, 2018
விரிவாக்கப்பட்டது1 மே 1950
வடிவமைப்பாளர்ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம்
குடியிருப்போர்
பினாங்கு எப் சி

மலேசியாவில் பயன்பாட்டில் உள்ள பழைமையான விளையாட்டு அரங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அரங்கம் 1932-இல் பிரித்தானிய அரசாங்கத்தால் கட்டப்பட்டது[2].

சுமார் 25,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட இந்த அரங்கம் தற்போது கால்பந்து போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது

வரலாறு

தொகு

பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம்

தொகு

விளையாட்டரங்கத்தின் கட்டுமானம் 1 அக்டோபர் 1945 அன்று இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தொடங்கியது. 1948-இல் முடிந்ததும், அதிகாரப்பூர்வமாக பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம் என பெயரைப் பெற்றது.

1950-ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தால் இந்த மைதானம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் 1953 ஆம் ஆண்டு மேலும் புதுப்பிக்கப்பட்டது.

நகர விளையாட்டரங்கம்

தொகு

பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம் 2003-இல் நகர விளையாட்டரங்கம் என மறுபெயரிடப்பட்டது. 2000-களில் மற்றொரு சுற்று சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Malaysia – Penang FA Venue– Soccerway". Soccerway. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
  2. "Bandaraya Stadium event". Archived from the original on 2018-02-03. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.