நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்

சென்னை மாவட்டம், நங்கநல்லூரில் அமைந்துள்ள சிவன் கோயிலf.

நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், நங்கநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

அர்த்தநாரீஸ்வரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:சென்னை, நங்கநல்லூர், 4வது முதன்மைச் சாலை
கோயில் தகவல்
மூலவர்:அர்த்தநாரீஸ்வரர்
தாயார்:அர்த்தநாரீஸ்ஸ்வரி
வரலாறு
கட்டிய நாள்:இருபதாம் நூற்றாண்டு

வரலாறு தொகு

1961இல் காஞ்சி சங்கராசாசாரியரான சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் சென்னை நங்கநல்லூருக்கு வந்தபோது. அங்கு உள்ள குளக் கரையில் கவிழ்ந்துள்ள ஒரு சிவலிங்கமானது துணி துவைக்கும் கல்லாக பயன்படுவதைக் கண்டு வருந்தினார். தன் அடியார்களிடம் அந்த சிவலிங்கத்தை எடுத்து குளக் கரையில் பிரதிட்டைச் செய்யுமாறு கூறினார். இச்சிவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயரிட்டார். சுவாமிகளின் ஆணைப்படி இச்சிவலிங்கமானது குளக்கரையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பிரதிட்டைச் செய்யப்ட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் காலவோட்டத்தில் இக்கோயிலானது ஐந்து நிலை இராசகோபுரத்துடன் பெரிய கோயிலாக வளர்ச்சியடைந்தது.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். கோயிலானது ஐந்து நிலை இராசகோபுரம், கொடிமரம், நந்தி மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தில் பால விநாயகர், பால சுப்பிரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கி உள்ளனர். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு அர்த்தநாரீஸ்வரரி அம்மன் உள்ளார். மேலும் மகா மண்டபத்தில் பஞ்சலோகத்திலான நடராசர் சிவகாமி சிலைகள் தெற்கு நோக்கி பிரதிட்டைச் செய்யப்பட்டுள்ளன. கோட்ட தெய்வங்களாக தெற்குப்பகுதியில் நர்த்தன விநாயகர், தென்முகக் கடவுளும் உள்ளனர். கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் உள்ளார். கோட்டத்தின் வடக்குப் பகுதியியல் பிரம்மனும், துர்கையும் உள்ளனர். பிரகார வலத்தில் சண்டிகேசுவரர், ஸ்வாணாகாஷண பைரவர், நவக்கிரக சந்நிதி போன்றவை உள்ளன. தல மரமாக வில்வ மரம் உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. முன்னூர் கோ. இரமேஷ் (மார்ச் 28 2019). "நங்கநல்லூரில் அருளும் அர்த்தநாரீஸ்வரர்". இந்து தமிழ்.