சந்திரசேகர சரசுவதி

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி

சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் எனும் பெயரில் இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.

சந்திரசேகர சரசுவதி
1933 இல் எடுக்கப்பட்ட சுவாமிகளின் படம்
பிறப்புசுவாமிநாதன்
மே 20, 1894
இறப்புசனவரி 8, 1994
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப் பள்ளி, திண்டிவனம்
பட்டம்சகத்குரு
பின்வந்தவர்ஜெயேந்திர சரசுவதி

இளமை வாழ்வு

தொகு

மஹாபெரியவா 1894 மே 20 அன்று தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தில் பிறந்தார். இவரது தந்தை சுப்ரமண்ய சாஸ்திரி தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தார், இவர் கன்னட மொழி பேசும் ஸ்மார்த்த பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். இவரது தாயார் மகாலட்சுமியும் திருவையாறுக்கு அருகிலுள்ள இச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த கன்னட பிராமணர் ஆவார். இவர்களின் இரண்டாவது குழந்தையே மஹாபெரியவா என அழைக்கப்பட்ட சந்திரசேகர சரசுவதி சுவாமியாவார்.[1] இவருக்கு பெற்றோர் வைத்தப்பெயர் ஸ்வாமிநாதன்.[சான்று தேவை] தனது துவக்கக் கல்வியை திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவருக்கு உபநயணம் 1905 ஆம் ஆண்டில் திண்டிவனத்தில் நிகழ்த்தப்பட்டது, மேலும் ​​அவர் வேதங்களை நன்கு அறிந்தவர் மற்றும் அவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பூஜைகள் செய்யத் தொடங்கினார். 1906 ஆம் ஆண்டில், காமகோடி பீடத்தின் அறுபத்தி ஆறாவது ஆச்சார்யா, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி, சதுர்மஸ்ய விரதத்தைக் கடைப்பிடித்து திண்டிவனத்திற்கு அருகிலுள்ள பெருமுக்கல் என்ற சிறிய கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது ஆச்சார்யாவின் ஆசீர்வாதங்களை மஹாபெரியவா பெற்றுக் கொண்டார். ஆச்சார்யர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மறைவிற்குப் பின்னர் சந்திரசேகர சரசுவதி சுவாமியின் தாய் வழி உறவினர் அறுபத்தியேழாவது ஆச்சார்யராக நியமிக்கப்பட்டார். அவர் உடல் நலம் குன்றியதால் சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் 1907 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது ஆச்சார்யராக சன்னியாசர் சரஸ்வதி என்ற சன்னியாச பெயருடன் நியமிக்கப்பட்டார். பின்னர் வேதங்கள், புராணங்கள், பல்வேறு இந்து நூல்கள் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களுடன் நன்கு பயிற்சி பெற்றார். 1909 ஆம் ஆண்டு இரண்டாண்டுகள் மடத்தினில் தங்கி வேதாந்தங்களைக் கற்றுக் கொண்டார். பின்னர் 1911 முதல் 1914 வரை அகண்ட காவிரியின் வடகரைக் கிராமமான மகேந்திரமங்கலத்தில் கற்றார். இவர் கணிதம், வானியல் மற்றும் புகைப்படத்துறையில் அதிக ஆர்வம் காட்டினார். 1914 ஆம் ஆண்டில் கும்பகோணம் திரும்பினார்.

பங்களிப்புகள்

தொகு

இந்திய ஆன்மீக நிலப்பரப்பெங்கும் ஆன்மீகப் பயணம் செய்து தனது அறிவைப் பரப்பத் தொடங்கினார். தினமும் சந்தியாவந்தனம், ஶ்ரீசந்திரமெளலீஸ்வரி பூஜை, ஶ்ரீபஞ்சதான்ய பூஜை, காமாட்சி அம்மன் பூஜை ஆகியவற்றைச் செய்வது வேதங்களை ஓதுவது போன்ற இவரது நடவடிக்கைகள் இவரை உலகெங்கும் பிரபலமாக்கியது. ஐயங்கார்கள், பிற சாதியினர், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இவரது பக்தர்களாயினர். அவர்கள் சந்திரசேகர சரசுவதி சுவாமியின் பழக்கவழக்கங்களையும் அவர் சிக்கல்களை எதிர்கொள்வதையும் வைத்து அவர் ஒரு மனிதரல்ல ஜகத்குரு என அழைத்தனர். இறைவன் சிவனை வழிபடுவதற்காகவந்த காமாட்சி அம்மனுக்காக சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் தன் வாழ்வை அர்ப்பணித்தார். எளிய முறையில் பக்திபூர்வமாக இருப்பதற்கான பொறுப்பினை ஏற்று ராமா ராமா என உச்சரிப்பதன் மூலமோ அல்லது எழுதுவதன் மூலமாகவோ அதிக பக்திபூர்வமாக இருக்க இயலும் என உணர்ந்தார். உலகம் முழுவதிலுமுள்ள பக்தர்கள் இவரை வணங்கினர். இவரது உரைகளைக் கேட்ட மத்திய மாநில அரசுத் தலைவர்கள் இவரது வழியைப் பின்பற்றினர். வாழ்நாள் முழுவதும் அத்வைத சித்தாந்தவாதியான ஆதிசங்கரரின்[2] வழியைப் பின்பற்றி நடந்தார். மேலும் வாழ்நாளெல்லாம் கோவில்களைப் புதுப்பிப்பதிலும், பெண்கள் உச்சரிக்காத விஷ்ணுசகஸ்ர நாமம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரிக்கச் செய்வதிலும், சரியான உச்சரிப்புடன் வேதங்கள் ஓதுவதையும், சபரிமலை ஐயப்பன் சுவாமி மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிக பக்தியுணர்வு வளரவும் அக்கோயில்களில் ஆகம விதிகள் தீவிரமாக கடைபிடிப்பதையும் நடைமுறைப்படுத்தினார்.இவரது 99 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இவரது சீடர்களான ஸ்ரீ ஜெயேந்திரர் மற்றும் ஸ்ரீ விஜயேந்திரர் ஆகியோர் ஒரு பெரிய நிகழ்வாக கொண்டாடினர். 8 ஜனவரி 1994 இல் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாமல் இவர் காலமானார்.

சொற்பொழிவுகள்

தொகு

சிறந்த ஞானியாக ஆதிசங்கரரைப் போலவே இவரும் நாட்டின் பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார். பல இடங்களில் தர்மம், பண்பாடு, கலாச்சாரம் பற்றி மக்களிடம் சொற்பொழிவாற்றினார். திண்ணைகள், ஆற்றுப்படுக்கைகள், சிறிய கூடங்கள் என எல்லா இடங்களிலும் சொற்பொழிவாற்றினார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு தெய்வத்தின் குரல் எனும் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்நூல் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் பலபகுதிகளில் சனாதான தர்மத்தின் நடைமுறைகளைக் கொண்டு வந்தார். இதன் பயனாக பல்வேறு வேத பாட சாலைகள் உருவாக்கப்பட்டன.

முக்கியப் பிரமுகர்கள்

தொகு

பல முக்கியப் பிரமுகர்கள் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளைச் சந்தித்துள்ளனர். தலாய் லாமா, சத்ய சாய் பாபா, மஹாத்மா காந்தி, ராஜாஜி, எம்.எஸ். சுப்புலெக்‌ஷ்மி, இந்திரா காந்தி, சுப்பிரமணியன் ஸ்வாமி, சங்கர் தயாள் சர்மா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஶ்ரீ ஶ்ரீ ரவிஷங்கர், பிரணாய் ராய், அமிதாப் பச்சன், பிர்லா குடும்பத்தினர், ஜே.ஆர்.டி டாடா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றோர் இவர்களுள் சிலர்.

புத்தகங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

http://hinduonline.co/VideoGallery.html http://hinduonline.co/Books/BooksOnline.html

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர_சரசுவதி&oldid=4092667" இலிருந்து மீள்விக்கப்பட்டது