பிர்லா குடும்பம்

பிர்லா குடும்பம் (Birla family) என்பது இந்தியாவின் தொழில்துறையும், சமூக வரலாறும் இணைந்த ஒரு குடும்பமாகும். [1] [2] [3]

பிர்லா குடும்பம்
தற்போதைய பகுதிஇந்தியாவின் தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களிலிருந்து செயல்படுகிறது
தோற்ற இடம்பிலானி, ராஜஸ்தான், இந்தியா
உறுப்பினர்கள்
பாரம்பரியங்கள்இந்து

அடித்தளங்கள்

தொகு

பிர்லா குடும்பத்தின் தோற்றம் வைசிய வர்த்தகர்களின் மகேசுவரி சாதியினருடன் உள்ளது. ஆனால் இவர்கள் 1922 ஆம் ஆண்டில் தங்கள் பாரம்பரிய சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது இவர்களது உறுப்பினர்களில் ஒருவரான ராமேஸ்வர் தாசு பிர்லா சாதி திருமண விதிகளை மீறியதாக கருதப்பட்டது. [4] இவர்கள் மார்வாடி எனவும் ராஜஸ்தான் மார்வாடி எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த குடும்பம் வடகிழக்கு ராஜஸ்தானில் உள்ள செகாவதி பிராந்தியத்தில் உள்ள பிலானி நகரத்திலிருந்து தோன்றியது. இவர்கள் இன்னும் பிலானியில் தங்கள் இல்லத்தை பராமரிக்கின்றனர். [5] பிட்சு பிலானி என்று பரவலக அறியப்படும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களை அங்கு நடத்தி வருகின்றனர்.

சிவ நாராயண பிர்லா

தொகு

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிலானியில், சேத் புதர்மாலின் பேரன் சேத் சோபராம் உள்ளூரின் சிறிய அளவிலான வணிகத்துடன் வாழ்ந்து வந்தார். [6] [7] இவரது மகன் சேத் சிவ நாராயணன் (1840-1909), முதன்முதலில் பிலானிக்கு வெளியே வணிகத்தை மேற்கொண்டார். அந்த காலத்தில், அகமதாபாத் என்பது வடமேற்கு இந்தியப் பிராந்தியத்தில் ஒரு பெரிய வர்த்தகத்திற்கு சேவை செய்யும் இரயில்வே தலைமையாக இருந்தது. பொருட்கள் (முக்கியமாக பருத்தி) உள்ளூரிலிருந்து நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இரயிலில் மும்பைக்கு அனுப்பப்படும். இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பருத்தியை சுத்தம் செய்வதற்காக அகமதாபாத்தில் பல பருத்தி நூற்பாலை பிரிவுகளும் அமைக்கப்பட்டன. இந்த பருத்தி வர்த்தகத்தில் பங்கேற்ற ஆரம்பகால இந்திய வர்த்தகர்களில் இவரும் ஒருவர். பின்னர், ஐக்கிய இராச்சியம் சீனாவுடன் அபினி வர்த்தகத்தை தீவிரமாக வளர்த்தது. இந்தியாவில் பாப்பி சாகுபடியை உருவாக்கியது. ரத்லம் - மண்டோசோர் (அகமதாபாத்துக்கு அருகில் இருந்தது) பிராந்தியம் பொருத்தமான மண் மற்றும் சூழல் காரணமாக பிரதான அபினி விளையும் வயல்வெளிகளில் ஒன்றானது. இவரும்ம் இவரது வளர்ப்பு மகன் பல்தேவ் தாசும் சீனாவுடன் அபினி வர்த்தகம் செய்ததன் மூலம் மகத்தான செல்வத்தை ஈட்டினர். இது குடும்பத்தின் செல்வத்தின் அடிப்படையாக அமைந்தது. வளர்ந்து வரும் செல்வத்துடனும், நம்பிக்கையுடனும், இவர் மற்ற மார்வாடி வர்த்தகர்களுடன் கூட்டாக சரக்குக் கப்பல்களில் சீனாவுடன் அபினி வர்த்தகம் செய்யத் தொடங்கினார். பிரிட்டிசு இடைத்தரகர்கள் மூலமே இது நடந்தது. இதை எளிதாக்க, இவர் 1863 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

பல்தேவ் தாசு பிர்லா

தொகு

சிவ நாராயண பிர்லாவுக்கு அவரது வாழ்க்கையில் ஒரு மிகுந்த துக்கம் இருந்தது: அவருக்கு குழந்தைகள் இல்லை. 1880 களின் முற்பகுதியில், சிவ நாராயணன் தனது வணிகத்தை தனது வளர்ப்பு மகன் பல்தேவ் தாசிடம் ஒப்படைத்தார். மும்பையை தளமாகக் கொண்டு ஒரு வர்த்தக இல்லத்தை சிவ நாராயணன் பல்தேவ் தாசை உருவாக்கினார். பல்தேவ் தாசு 1887 இல் கொல்கத்தாவிற்குச் சென்று வர்த்தகத்தை விவாக்கம் செய்தார். இவருக்கு சுகல் கிசோர், இராமேசுவர் தாசு,கன்சியாம் தாசு, பிரஜ் மோகன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். [8] [9] [10] [11]

இவருக்கு 1917 இல் ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டில் இவர் வணிகத்திலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு வாரணாசியில் மதம் சார்ந்த படிப்பை படிக்கத் தொடங்கினார். 1925 ஆம் ஆண்டில் பீகார் மற்றும் ஒடிசா அரசாங்கத்தால் இவருக்கு "ராஜா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. [12] வாரணாசி பனாரசு இந்து பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் விருது வழங்கியது.

கன்சியாம் தாசு பிர்லா

தொகு

கன்சியாம் தாசு பிர்லா 1911 ஆம் ஆண்டில் ஜி.எம். பிர்லா நிறுவனத்தை நிறுவி சணல் வர்த்தகத்தில் தனது தொழில்துறையின் அடித்தளத்தை அமைத்தார். 1914 இல்,முதல் உலகப் போர் தொடங்கியது. சாக்குப் பைகளுக்கான தேவை அதிகரித்தது. போரின் போது பிர்லாவின் மதிப்பு 2 மில்லியன் ரூபாயிலிருந்து 8 மில்லியனாக உயர்ந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. [13] 1919 ஆம் ஆண்டில், பிர்லா சணல் என்ற சணல் ஆலையின் உரிமையாளரான இந்திய தொழில்முனைவோரின் முதல் குழுவில் இவர் இடம் பெற்றார். [14] அடுத்த சில ஆண்டுகளில் இவர் பல பருத்தி ஆலைகளை வாங்கினார். பின்னர் இவர் பல சர்க்கரை ஆலைகளையும் தொடங்கினார். இந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிக்கை வெளியீடு 1924 இல் ஜி.டி. பிர்லாவால் இணைந்து நிறுவப்பட்டது. 1933 இல் இவர் அதை முழுமையாக கையகப்படுத்தினார்.இந்துஸ்தான் மோட்டார்ஸ் 1942 இல் தொடங்கப்பட்டது. 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இவர் கிராசிம் (குவாலியர் ரேயான் பட்டு உற்பத்தி, 1948) மற்றும் ஹிண்டால்கோ (இந்துஸ்தான் ஆலம் கம்பெனி 1958) ஆகியவற்றைத் தொடங்கினார்.

பல்தேவ் தாசும், அவரது மகன்களும் மகாத்மா காந்தி தலைமையிலான சுயராச்சிய இயக்கத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தனர். கூடுதலாக அர்ப்பணிப்புள்ள இந்து ஆர்வலர்களாகவும் இருந்தனர். இவர்கள் மதன் மோகன் மாலவியாவால் நிறுவப்பட்ட பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் தீவிர ஆதரவாளர்களாகவும், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவாளர்களாகவும் இருந்தனர். [15] புது தில்லியிலுள்ள முக்கிய லட்சுமிநாராயண் கோயில் சுகல் கிசோர் பிர்லாவால் கட்டப்படு, மகாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது, காந்தி கேட்டுக்கொண்டதற்கிணங்க, அரிசனர்கள் உட்பட அனைத்து இந்துக்களும் இந்த கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய சில தசாப்தங்களில், பிர்லாக்கள் உள்ளிட்ட இந்திய வணிகர்கள், ஒரு காலத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இந்தியாவில்இசுக்கொட்லாந்து ஆதிக்கம் செலுத்திய தொழில்களுக்குள் நுழைந்து அதை கையகப்படுத்த சில வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டனர். [16] இது மகாத்மா காந்தியின் சுதேசி இயகத்தின் ஒரு பகுதியாக மாறியது.

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் படேலைப் போல இந்தியாவின் சில தலைவர்களுடன் பிர்லாக்கள் நெருக்கமாக இருந்தனர். [17] நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சிச அரசாங்கத்தின் விளைவாக, ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு கேரள முதலமைச்சரானபோது (1957–59), அங்கே ஒரு கூழ் தொழிற்சாலையை நிறுவ பிர்லாக்கள் அழைக்கப்பட்டனர். [18]

சமீப காலங்களில், பிர்லாக்கள் மற்றும் பல இந்திய தொழிலதிபர்கள் வெளிநாடுகளிலும் விரிவடைந்துள்ளனர். [19]

தொண்டுப் பணிகள்

தொகு
 
காந்தி 1938, டெல்லி, லட்சுமிநாராயண்ன் கோயிலைத் திறந்து வைத்தார். பிர்லா குடும்பத்துடன் சுகல் கிசோர், இராமேசுவர் தாசு, கறுப்புத் தொப்பிகளில் கன்சியாம் தாசு, தலைப்பாகையில் பல்தேவ் தாசு

1880 களில் பிர்லாக்களின் அறப்பணிகள் தொடங்கியது. பிர்லா குடும்பம் கொல்கத்தாவில் கோசாலைகளை (பசுக்களின் பாதுகாப்பிற்கான தங்குமிடங்கள்) அமைப்பதற்காக 100,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தது. 1900 இன் முற்பகுதியில், பிர்லா குடும்பம் மதன் மோகன் மாலவியாவின் தாக்கத்தால் கல்வியை ஆதரிக்கத் தொடங்கியது. இவர்கள் கொல்கத்தா மற்றும் மும்பையின் ஜாம்னாலால் பஜாஜ் குழுக்களுடன் இணைந்து கல்வித் தொண்டாற்றினர். 1918 ஆம் ஆண்டில், குடும்பம் பிலானியில் முதல் உயர்நிலைப் பள்ளியை நிறுவியது. இப்போது இது பிலானி பிர்லா பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். இப்போது இவர்கள் பிர்லா கல்வி அறக்கட்டளை நடத்தும் 6 பள்ளிகளைக் கொண்டுள்ளனர். இது பிட்சு பிலானியாக உருவெடுத்துள்ளது. இப்போது ஐதராபாத்திலும், கோவாவிலும், துபாயிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. வாரணாசியில் ஒரு சமசுகிருத நூலகத்தையும் கொல்கத்தாவில் ஒரு நூலகத்தையும் திறந்துள்ளனர். [20] இது இந்தியரின் சுதந்திரப் போராட்டத்தின் நிதி உதவிக்காகவும், பல முக்கிய இந்திய நகரங்களில் கோயில்களைக் கட்டுவதற்கும் ( பிர்லா கோவிலைப் பார்க்கவும்) நன்கு அறியப்பட்டதாகும்.

பிர்லாக்களால் நிறுவப்பட்ட நிறுவனங்கள் பின்வருமாறு:

 
பிர்லா சகோதரர்கள் நிறுவிய 'பிட்சு, பிலானி'யில் '1944 ஆம் ஆண்டில் யாத்ரீகர்கள் குளிப்பதற்காக மழைநீரை சேமிக்க தோசி மலையில் 2000 இல் ஒரு அணை கட்டப்பட்டது.

மரபுகள்

தொகு

ஒரு கடிதத்தில், கன்சியாம் தாசு ஆதித்யாவுக்கு (அவரது பேரன்) படிக்கும் போது இந்த ஆலோசனையை வழங்கினார்:

“சைவ உணவை மட்டும் சாப்பிடவும், ஒருபோதும் மது அருந்த வேண்டாம், அதிகாலையில் எழுந்து விடவும், இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளவும், அறையை விட்டு வெளியேறும்போது விளக்குகளை அணைத்து விடவும், வழக்கமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், தினமும் நடைப்பயணத்திற்கு செல்லாவும், குடும்பத்துடன் தொடர்பில் இருக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருபோதும் களியாட்டமாக இருக்க வேண்டாம். ” [24]

ஜி.டி. பிர்லா தனது மகன் வசந்த் குமாருக்கு 'ஒருபோதும் செல்வத்தை வேடிக்கையாக பயன்படுத்த வேண்டாம்' என்றும், 'குறைந்தபட்சம் உங்களுக்காகவே செலவழிக்கவும்', 'உலக இன்பங்களை' கேலி செய்யவும் அறிவுறுத்தினார். [14]

இந்த ஆலோசனை வளர்ந்து வரும் மார்வாடி சமூகத்தின் நெறிமுறையை அடையாளப்படுத்தியது. கட்டுப்பாடு மற்றும் சிக்கனத்துடன் அதன் வரையறுக்கும் பண்புகளை வெளிகாட்டுகிறது. [25]

குடும்ப உறவுகள்

தொகு

பிர்லாக்கள் ஒரு ஒற்றை நிறுவனமாக கருதப்பட்டாலும், குடும்பத்தின் வெவ்வேறு கிளைகள் இப்போது நிதி ரீதியாக சுதந்திரமாக உள்ளன. [26] [27] எவ்வாறாயினும், "பிர்லா சகோதர்கள்" ஒரு உண்மையான நிறுவனமாகவும், ராஜா பல்தேவ் தாசு உயிருடன் இருந்த காலம் போலவே குடும்ப உறவுகளை இவர்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

ஜி.டி. பிர்லாவின் மனைவிகள் இருவரும் காசநோய் காரணமாக இறந்துவிட்டனர் (இவர் தனது முதல் மனைவியின் மரணத்திற்குப் பிறகு மறுமணம் செய்து கொண்டார்). இவரது சகோதரர்களான பிரிஜ் மோகன் மற்றும் இராமேசுவர் தாசு பிர்லா ஆகியோரின் குடும்பங்கள் இவரது குழந்தைகளை வளர்க்க உதவின. யாசு பிர்லாவின் பெற்றோர் விமான விபத்தில் இறந்தபோது, பிரியம்வதா பிர்லா, ("பாடி மா") அவரை கவனித்துக் கொண்டார். [28]

குமார் மங்கலம் பிர்லா குடும்பத்தின் பெயரைப் பாதுகாப்பதற்காக தனது உறவினர் யாசு பிர்லாவின் நிதிப் பிரச்சினைகளுக்கு உதவினார். [29]

"டாடா-பிர்லா" சொல் இணை

தொகு

பல தசாப்தங்களாக இந்தியாவில் வளம் டாடாக்கள் மற்றும் பிர்லாக்களுடன் தொடர்புடையது. டாடா-பிர்லா என்ற சொற்கள் பெரும்பாலும் ஒன்றாகவே பயன்படுத்தப்பட்டன. [30] இவர்கள் சிறிது காலம் டால்மியாக்களை (டால்மியா-சாகு ஜெயின் குழு) பின்தொடர்ந்தனர். [31] இருப்பினும் டாடாக்களும், பிர்லாக்களும் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களாக தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது (1939-1997 தரவுகளைப் பார்க்கவும் [32] ) மற்றவர்கள் குறைந்துவிட்டனர். [33] [34]

இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை 1944 ஆம் ஆண்டில் தொழிலதிபர்கள் குழு உருவாக்கியது. இது டாடா-பிர்லா திட்டம் அல்லது மும்பை திட்டம் [35] எனப்பட்டது. இது இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்திற்கான ஒரு வரைபடமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2011-11-29. பார்க்கப்பட்ட நாள் 2011-11-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "CK Birla Group - Birla Companies - Family - US$1.6 billion diversified conglomerate that has a history of enduring relationships with renowned global companies". www.ckbirlagroup.com. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  3. D'souza, Dev Chatterjee & Sharleen (17 February 2014). "Yash Birla's business comes under stress". பார்க்கப்பட்ட நாள் 9 July 2017 – via Business Standard.
  4. Weinberger-Thomas, Catherine (1999) [1996]. Ashes of Immortality: Widow-Burning in India (Translated ed.). University of Chicago Press. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-22688-568-1.
  5. House of history The Birla haveli in Pilani offers a glimpse into the beginnings of India's premier business family, Prakash Bhandari Business Standard, February 27, 2016
  6. Maheshwari Jati Ka Itihas, Maheshwari History Office, Bhanpura, Birla, June 1940, p. 183–190
  7. Birla, Krishna Kumar (17 April 2009). "Brushes With History". Penguin UK. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017 – via Google Books.
  8. Aditya Birla Group (31 May 2011). "The story of the Birla empire by Talveen Singh- Part I". பார்க்கப்பட்ட நாள் 9 July 2017 – via YouTube.
  9. The Birla Family Crisis - Case Studies, Case Study in Business, Management|Case Studies பரணிடப்பட்டது சூலை 14, 2014 at the வந்தவழி இயந்திரம்
  10. "Battle for Billions: Birlas vs Lodhas". பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  11. "What keeps the Marwaris thriving? - Times of India". பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  12. Industrial Entrepreneurship of Shekhawati Marwaris, D.K. Taknet, Kumar Prakashan, Jaipur, 1987, p. 41
  13. Herdeck, Margaret; Piramal, Gita (9 July 1985). "India's Industrialists". Lynne Rienner Publishers. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017 – via Google Books.
  14. 14.0 14.1 "'Family' spirit and frugality help the Birlas keep pace with changing times". 6 September 2014. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017 – via The Economic Times.
  15. Business Legends, Gita Piramal, Penguin UK, Dec 1, 2010
  16. Matthews, Herbert L. (2 January 1943). "British Investors See Peril in India – Managing Agents Fear Loss of Immense Profits on Half of Country's Industries – Natives Seek Business – Huge Sterling Credits Already Available to Buy Out the Foreign Companies". New York Times. p. 5. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  17. Debajyoti Burman, Mystery of Birla House, Jugabani Hahitya Chakara, 3rd reprint 1951, P. 111
  18. Phrases And Facts: About Kerala, Partha Choudhuri, Liberation, Vol. II, No. 3 (January 1969).
  19. Piramal, Gita (October 1999). "A crisis of leadership". Family Business, a symposium on the role of the family in Indian business. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  20. Birla, Rajashree (3 October 2014). "Rajashree Birla - Giving is in fact living". பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
  22. "Birla Global University - Top University in BBSR, Odisha". www.bgu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  23. "Govind Mishra gets Saraswati Samman 2013 for novel 'Dhool Paudhon Par'". Daily News & Analysis. 22 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
  24. India's Industrialists, Volume 1, Margaret Herdeck, Gita Piramal, Lynne Rienner Publishers, 1985 p. 97
  25. "Marwari ethic and the spirit of Capitalism - Gurcharan Das". gurcharandas.org. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  26. cakml. "The Hindu Business Line : `Mahatma was witness to Birla clan partition'". www.thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  27. "After months of tension, Birlas part ways amicably". பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  28. "Yash gets candid". பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  29. "Family Values". பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  30. Capitalists of the world, unite! Mathrubhumi, October 9, 2008 பரணிடப்பட்டது ஏப்பிரல் 2, 2015 at the வந்தவழி இயந்திரம்
  31. "World Marxist Review". Progress Books. 9 July 1970. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017 – via Google Books.
  32. Morck, Randall K. (1 November 2007). "A History of Corporate Governance around the World: Family Business Groups to Professional Managers". University of Chicago Press. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017 – via Google Books.
  33. The Curse of too-many Sons, Swaminathan S. Anklesaria Aiyar, Times of India, Nov 9, 1997
  34. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  35. Ramadorai, Subramaniam (9 July 2017). "Tata Consultancy Services Story- and Beyond". Penguin Books India. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017 – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்லா_குடும்பம்&oldid=3590181" இலிருந்து மீள்விக்கப்பட்டது