முதன்மை பட்டியைத் திறக்கவும்
சணல் கட்டுக்கள், கோர்கூரஸ் ஓலிடோரியஸ் இழைகளைக் காட்டுகிறது (டோஸா சணல் இழை)அண்ட் கோர்கூரஸ் காப்ஸுலாரிஸ் (வெள்ளை சணல் இழை)
சணல் செடிகள் (கோர்கூரஸ் ஓலிடோரியஸ் காப்ஸுலாரிஸ்)

சணல் நீண்ட, மென்மையான, மினுக்கமான தாவர இழையாகும். அதை நூற்று கரடுமுரடான வலிமையான கயிறாகத் திரிக்கலாம். அது பாரம்பரிய கோர்கோருஸ் டிலாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

சணல் இயற்கையான இழைகளில் மிக விலைகுறைவானதொன்றாகும். மேலும் பருத்திக்கு இரண்டவதாக அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதும், பல்வேறு பயன்பாடுகளுக்கு இருப்பதுமாகும். சணல் இழைகள் முதன்மையாக செல்லுலோசு தாவர பொருட்களிலும் (தாவர இழையின் பெரும் பங்கு) லிக்னினிலும் (பெரும் மர இழைப் பொருட்கள்) அடங்கியுள்ளதாகும். ஆகையால் அது ஒரு லிக்னோ-செல்லுலொசிக் இழைப் பகுதியாக ஒரு பகுதியில் சவுளி இழையாகவும் மற்றொரு பகுதியில் மரமாகவுமுள்ளது. அது கெனஃபு, கற்சணல் ( கைத்தொழில்) வகையின, பட்டுச் சணல் (இலினென்), இரேமிப் புல் ஆகியன அடங்கும் மரவுரி இழை வகையின் கீழ் வருகிறது (தாவரத்தின் மரவுரி அல்லது தோற் பகுதியிலிருந்து இழை பெறப்படுதல்) . தொழில் ரீதியாக சணல் இழை கச்சா சணல் என்றழைக்கப்படுகிறது. இழைகள் மங்கிய வெள்ளையிலிருந்து பழுப்பு நிறம் வரையிலும், மேலும் 1-4 மீட்டர்கள் (3-2 அடி) நீளமும் இருக்கும்.

சணல் இழை ஹெஸ்ஸியன் என அழைக்கப்படுகிறது. சணல் துணிகளும் கூட ஹெஸ்ஸியன் துணிகள் என்றும், சணல் சாக்குகள் கன்னி பேக்ஸ் என்றும் சில ஐரோப்பிய தேசங்களில் அழைக்கப்படுகின்றன. சணலிலிருந்து தயாரிக்கப்படும் துணிகள் பிரபலமாக வட அமெரிக்காவில் பர்லாப் என அறியப்படுகிறது.

பயிரிடுதல்தொகு

சணலுக்கு ஒரு தெளிவான வறண்ட மண்ணும் நிலைத்த தண்ணீரும் தேவை. வளரும் சணலுக்கு பொருத்தமான பருவச் சூழலை (மிதமான தட்பவெப்ப மற்றும் ஈரப்பதமுள்ள தட்பவெப்ப சூழல்) மழைக்கால பருவச் சூழல் பருவக் காலங்களில் ஏற்படுத்துகிறது. வெப்ப அளவுகள் 20˚ C லிருந்து 40˚ C ஆகவும் 70%–80% தொடர்புடைய ஈரப்பதம் வெற்றிகரமான பயிர் இடுதலுக்குச் சாதகமாக உள்ளது. சணலுக்கு 5–8 செமீ வாரந்திர மழையளவும் விதைக்கும் போது அதிகமான மழையளவும் தேவைப்படும்.

வெள்ளைச் சணல் (கோர்குரஸ் காப்சுலாரிஸ் )தொகு

பல வரலாற்று ஆவணங்கள் (1590 ஆம் ஆண்டில் அபுல் பசல் எழுதிய அயினி அக்பரி உட்பட) ஏழை இந்திய கிராமவாசிகள் சணலினால் செய்த ஆடைகளை அணிந்தனர் என்றது. எளிமையான கைத்தறிகள் மற்றும் கை ராட்டை சக்கரங்கள் நெசவாளர்களால் பயன்படுத்தப்படும். அவை பருத்தி இழைகளையும் கூட நெய்யப் பயன்படுத்தப்படுகின்றன. வரலாறும் கூட இந்தியர்கள், குறிப்பாக வங்காளிகள், வெள்ளைச் சணலிலிருந்து செய்யப்பட்ட கயிறுகள் மற்றும் இறுக்கமான நூல்களை பழங்காலத்திலிருந்தே வீட்டு மற்றும் இதரப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தினர் என்று கூறுகிறது.

டோஸா சணல் (கோர்கூரஸ் ஓலிடோரியூஸ் )தொகு

டோஸா சணல் (கோர்கூரஸ் ஓலிடோரியூஸ் ) என்பதொரு அரேபிய வகையாகும். அதன் இலைகளுக்கு மிகப் பிரபலமானது. இலைகள் ஒரு சில அரேபிய நாடுகளில் பிரபலமான மூலோகிய என்ற பெயருடைய முசிலாஜினஸ் போதெர்ப் எனும் உணவுப் பொருளில் ஓர் உள்ளீடாக (ஒரு நிச்சயமற்ற சொல்லிலக்கணம்) பயன்படுத்தப்படுகின்றன. ஹீப்ரூ பைபிளின் 'தி புக் ஆஃப் ஜாப்' இந்த தாவர போதெர்பை ஜூஸ் மால்லோ எனக் குறிப்பிடுகிறது.

டோஸா சணல் மென்மைமையானது, பட்டு போன்றது, மேலும் வெள்ளைச் சணலை விட வலுவானது. டோஸா சணல் ஆச்சரியப்படும் வகையில் கங்கை கழிமுகப்பகுதியின் பருவச் சூழலில் நல்ல வளமையுடனிருந்தது. வெள்ளைச் சணலுடன் டோஸா சணலும் கூட வங்காள மண்ணில் பயிரிடப்படுகிறது, அங்கு அது 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து பாட் என அறியப்படுகிறது. தற்போது வங்காளப் பகுதியே (மேற்கு வங்கம், இந்தியா மற்றும் வங்காள தேசம்) உலகிலேயே அதிகமான டோஸா சணல் வகையை உற்பத்திச் செய்வதாகும்.

வரலாறுதொகு

பல நூற்றாண்டுகளுக்கு சணல் வங்காள தேசத்தின் முழு தென் மேற்கு பகுதி மற்றும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளின் பண்பாட்டில் இனைந்தப் பகுதியாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் போது, வங்காளத்தின் கச்சா சணல் இழையின் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன, அங்கு டண்டீயில் குவிந்துள்ள ஆலைகளில் பதப்படுத்தப்பட்டன. துவக்கத்தில் அதன் கட்டமைப்பின் காரணமாக அந்நகரத்தில் திமிங்கிலத்தின் எண்ணெயினால் பதப்படுத்தப்படலாம் என்று கண்டறியப்படும் வரை அது கைகளால் மட்டுமே பதப்படுத்தப்பட்டது. அந்த எண்ணெய் கொண்டு இயந்திரத்தாலும் பதப்படுத்தப்பட்டது.[1] தொழில் செழிப்படைந்த போது ("சணல் நெசவாளர்" 1901 ஆம் ஆண்டு இங்கிலாந்து மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது அங்கீகரிக்கப்பட்ட வணிகமாகும்) ஆனால் இந்த வணிகம் 1970 ஆம் ஆண்டுகளில் பெரியளவில் செயற்கை இழைகளின் தோற்றத்தினால் நின்று போனது.

டண்டியிலிருந்த மார்க்ரேட் டானலி எனும் சணல் ஆலை முதலாளி 1880 ஆம் ஆண்டுகளில் வங்காளத்தில் முதல் சணல் ஆலையை ஏற்படுத்தினார். 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் நைலான் மற்றும் பாலிதீன் அரிதாகப் பயன்படுத்தப்பட்டப்போது ஐக்கிய பாகிஸ்தானின் முதன்மை அந்நியச் செலாவணி மூலதாரமாக இருந்தது சணல் ஏற்றுமதியேயாகும்; அது கிழக்கு வங்காளத்தில் (தற்போது வங்காள தேசம்) விளைந்ததை அடிப்படையாகக் கொண்டது. சணல் "வங்காளத்தின் தங்க இழை" என்றழைக்கப்படுகிறது. இருப்பினும், சணலுக்கு மாற்றாக பாலீதீன் மற்றும் இதர செயற்கை இழைகள் அதிகரித்து சந்தையை கைப்பற்றின; சணல் தொழில் பெருமளவில் வீழ்ச்சியையே கண்டது.

1980 ஆம் ஆண்டுகளின் சில வருடங்களில் வங்காள தேசத்தின் விவசாயிகள் அவர்களது சணற் பயிர்களை கூடுதல் விலை பெறப்படாதப் போது எரித்தனர். பல சணல் ஏற்றுமதியாளர்கள் சணலிலிருந்து இதரப் பொருட்களுக்கு மாறினர். சணல்-தொடர்பான நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதற்கு தூண்டப்பட்டன, மாற்றப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன. தேவையில் நீண்ட நாள் குறைவானது உலகின் பெரிய சணல் ஆலையை (ஆதாம்ஜி சணல் ஆலை) மூடப்பட வற்புறுத்தியது. தொழிலதிபர் யாஹ்யா பவன் முன்பு உடைமைக் கொண்டிருந்த வங்காள தேசத்தின் இரண்டாம் பெரிய ஆலையான லடீஃப் பாவனி சணல் ஆலைகளை அரசு தன் வசம் கொண்டது. இருப்பினும், வங்காள தேசத்தின் விவசாயிகள் சணல் பயிரிடுவதை முற்றிலும் நிறுத்தவில்லை; முக்கிய காரணம் உள்ளூர் சந்தைகளின் தேவை. 2004–2009 இடையில் சணல் சந்தை மீண்டது; கச்சா சணலின் விலை 200% ற்கும் அதிகமாக அதிகரித்தது.

சணல் பல வேறுபட்ட தொழில்களின் ஊடே நுழைந்துள்ளது - எங்கெல்லாம் இயற்கை இழைகள் படிப்படியாகச் சிறந்த மாற்றாக முடியுமோ அங்கெல்லாம் நுழைந்துள்ளது. இத்தகைய தொழில்களில் காகிதம்,செல்லுலாயிட் பொருட்கள் (படச் சுருள்), நூற்கப்படாத ஜவுளிகள், கலப்புக்கள் (செயற்கை-மரம்) மற்றும் நிலத்தடித்துணிகள் (ஜியோடெக்ஸ்டைல்ஸ்) ஆகியவை உள்ளடங்கும்.

2006 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐக்கிய நாட்டு சபையின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டை இயற்கை இழைகளின் சர்வதேச ஆண்டாக அறிவித்தது. அவ்வாறு சணல் மற்றும் இதர இயற்கை இழைகளின் வாழ்வை உயர்த்த வேண்டி செய்தது.

தயாரிப்புதொகு

 
சணற் பாய்கள் வெள்ள அரிப்பை தடுக்கப் பயன்படுகிறது அதே சமயம் இயற்கை தாவர வளர்ச்சி முறை நிறுவப்படுகிறது.இந்த நோக்கத்திற்கு ஒரு இயற்கை மற்றும் மக்கும் தன்மையுள்ள இழை அவசியம்.

சணல் மழை சார்ந்த பயிர்; சிறிதளவே இரசாயனம் அல்லது பூச்சிகொல்லி மருந்து தேவைப்படுவதாகும். இதன் உற்பத்தி வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் குவிந்துள்ளது.

சணல் இழை சணற் செடியின் தண்டு மற்றும் நாடாப்பகுதியிலிருந்து கிடைப்பதாகும். இழைகள், முதலில் நீரில் நனைத்து மிருதுவாக்கப்படுகின்றன. மிருதுவாக்கும் முறைகளில் சணல் தண்டுகளை சேர்த்து கட்டாகக் கட்டியும் ஓடுகின்ற நீரில் கீழாக அமிழ்த்தி வைப்பதும் அடங்கியுள்ளன. இரு விதமான மிருதுவாக்கும் முறைகள் உள்ளன; அவை தண்டு மற்றும் நாடா ஆகியனவாகும். மிருதுவாக்கும் பணி முடிந்தப் பிறகு உரித்தல் துவங்குகிறது. பெண்களும் சிறார்களும் இப்பணியைச் செய்கின்றனர். உரிக்கும் போது, இழையல்லாத கழிவுகள் அகற்றப்படுகின்றன, பின்னர் பணியாளர்கள் சணற் தண்டிலிருந்து இழைகளைத் தோண்டி சேகரிக்கின்றனர்.[2] இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் உள்ளூர் சணல்களை அதிகம் வாங்குகின்றனர். அதே சமயம் பிரிட்டன், இசுப்பானியா, ஐவரி கோஸ்ட், செருமனி மற்றும் பிரேசில் ஆகியவை வங்காளத்திலிருந்து கச்சா சணலை இறக்குமதி செய்கின்றனர். வங்காள தேசம் உலகின் பெரிய சணல் உற்பத்தி நாடாகும். அது 5.5 மில்லியன் பேல்கள் (1 பேல் 180 கிலோகிராமுக்குச் சமம்) சணலை ஒவ்வோர் ஆண்டும் உற்பத்திச் செய்கிறது.

உயர்ந்த பத்து சணல் உற்பத்தியாளர்கள் — 11 ஜூன் 2008
நாடு உற்பத்தி (டன்களில்) அடிக்குறிப்பு
  இந்தியா 2140000 எஃப்
  வங்காளதேசம் 800000 எஃப்
  சீனா 99000
  ஐவரி கோஸ்ட் 40000 எஃப்
  தாய்லாந்து 31000 எஃப்
  மியான்மர் 30000 எஃப்
  பிரேசில் 26711
  உஸ்பெகிஸ்தான் 20000 எஃப்
  நேபாளம் 16775
  வியட்நாம் 11000 எஃப்
[37]உலகம் 3225551
No symbol = அதிகாரபூர்வ புள்ளிவிவரம், F = FAO மதிப்பீடு, A = மொத்தம் (அதிகாரபூர்வ; அரை-அதிகாரபூர்வ அல்லது மதிப்பீடுகள்);
ஆதாரம்: ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு: பொருளாதாரம் மற்றும் சமூகத் துறை: புள்ளியியல் பிரிவு

பயன்கள்தொகு

இழைதொகு

சணல் பருத்திக்கு அடுத்து, இரண்டாவது மிக முக்கிய தாவர இழையாக பயிரிடுதல் மட்டுமல்லாது பல்வேறு பயன்பாடுகளுகளும் உடைத்தது. சணல் முக்கியமாக கச்சா பருத்தியின் பேல்களை உருட்டி மடக்கவும், சாக்குப் பைகள் மற்றும் துணி உற்பத்திச் செய்யவும், கரடுமுரடான துணிகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இழைகள் திரைச்சீலைகள், நாற்காலி உறைகள், தரை விரிப்புகள், தள விரிப்புகள், ஹெஸ்ஸியன் துணிகள் மற்றும் இலினோலியத்தை(தரையமை விரி) தாங்கவும் நெய்யப்படுகின்றது.

அதே சமயம் சணல் செயற்கைப் பொருட்களால் இது போன்ற பயன்பாடுகளில் இடம் மாற்றப்படுகின்றது. சணலின் மக்கும் தன்மையை சில பயன்பாடுகள் சாதகமாக எடுத்துக் கொள்கின்றன; குறிப்பாக எங்கு செயற்கை பொருந்தாமற் போகுமோ, அங்கெல்லாம் அத்தகைய பயன்பாடுகளின் சில எடுத்துக் காட்டுகளாக; மரம் நடும் சட்டிகள் வேர்களை தொந்திரவு செய்யாமல் நேரடியாக நடப்பட ஏதுவாக்கும், மரநடுகையின் போது சணற்றுணி இயற்கைக் காற்றோட்டத்தை தடைசெய்யாமல், மண் அரிப்பை தடுக்க வழிசெய்கிறது.

இழைகள் தனியாகவோ அல்லது இதர வகை இழைகளுடனோ இணைத்து கடுநூலையும் கயிறையும் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சணலின் தடித்த முனைகள், செடியின் முரட்டுத்தனமான இறுதிப் பகுதிகள் விலை மலிவான துணிகளைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. மாற்றாக, சணலின் சிறந்த நூல்கள் தனியே பிரிக்கப்பட்டு பட்டின் சாயல் செய்யப்படுகிறது. சணல் இழைகள் காகிதக் கூழ் அல்லது காகிதம் செய்யவும் பயன்படுகின்றன. மேலும் மரக் காகிதக் கூழில் பெரும்பாலான காகிதங்களைச் செய்ய வனங்களை அழிப்பது குறித்த அதிகரித்து வரும் கவலை இந்தப் பயன்பாட்டிற்கான சணலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம். சணலுக்கு நீண்ட கால பயன்பாட்டு வரலாறு கோணிப்பைகள், துணி சுற்ற (பருத்தி பேல்), கட்டுமானத் துணி மற்றும் உற்பத்தித் தொழில் ஆகியவற்றில் உள்ளது.

மரபு ரீதியிலான சணல் சவுளி இழைகள் செல்லுலோசு (தாவர இழை உள்ளடக்கம்) மற்றும் லிக்கின் (மர இழை உள்ளடக்கம்) எனும் காரணத்தினால் மரபார்ந்த சவுளி இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்டன. வாகனம், காகிதக் கூழ் மற்றும் காகிதம், மரச் சாமான்கள் மற்றும் அடுக்கமைவு/படுக்கைத் தொழில்கள் முதலிய தொழிற்றுறைகள் சணல் மற்றும் அதன் உப இழைகளை கொண்டு சவுளியல்லாத பிற பயன்பாடு கருதிய துணிவகைகள், இதர பாகங்களை வடிவமைத்துக் கொள்ளவும், சணலுக்கு பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகையால், சணல் சவுளி இழையாக மட்டும் பார்க்கப்படும் நிலையிலிருந்து மாறி அதன் புதிய அடையாளமான அதாவது மர இழை என்பதை நோக்கிச் செல்கிறது. சவுளி இழை என சணல் அதன் எல்லைய எட்டிவிட்டது, ஆனால் ஒரு மர இழையாக சணல் சாத்தியமான எதிர்காலத்தைக் கொண்டுள்ளது.[3]

சணல் எண்ணற்ற துணிகளை ஹெஸ்ஸியன் துணி, கோணி, மெல்லிய திரைச் சீலை, தரை விரிப்பு மேல் துணி (CBC) மற்றும் ஓவியம் வரைதுணி போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகிறது. ஹெஸ்ஸியன், கோணியை விட எடைக் குறைவானது; பைகள், உறைகள், சுவர்-மேலொட்டிகள், அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் வீட்டு அலங்காரங்களுக்கு பயன்படுகிறது. கோணிப்பை கடுமையான சணல் இழைகளால் செய்யப்படுவதாகும். சணலால் செய்யப்பட்ட CBC இரு வகைகளில் வருகிறது. முதன்மை CBC ஒரு நூற்குஞ்சம் கொண்ட தளத்தையும், அதேப் போல் இரண்டாவது CBC முதலாவதின் மேல் விரிப்பிற்கு பின்னணியை கொடுக்கிறது. சணல் பொதிகள் சூழல்-நட்பு மாற்றாகப் பயன்படுகிறது.

பலதரப்பட்ட சணற் பொருட்கள் அதிகளவில் நுகர்வோருக்கு மதிப்புடையதாக ஆகியுள்ளன. அவற்றில் காலணிகள், தரை விரிப்புகள், வீட்டு ஜவுளிகள், உயர் பயன்பாட்டு தொழில் நுட்ப ஜவுளிகள், ஜியோடெக்ஸ்டைல்ஸ், ஒருங்கிணைப்புக்கள் மற்றும் பலவாக உள்ளடங்கியுள்ளன.

சணற் பைகள் ஃபேஷன் மற்றும் ஃபிரமோஷனல் பைகள் செய்ய பயன்படுகின்றன. சூழல்-நட்பு தன்மையுடைய சணல் பெரும் நிறுவனங்களின் பரிசுப் பொருட்களுக்கு பொருத்தமாகவுள்ளன.

சணல் தரை விரிப்புகள் நூற்கப்பட்ட மற்றும் நூற்குஞ்சமுள்ள மற்றும் மென்மயிர் தரைவிரிப்புக்களில் அடங்கும். சணற் பாய்கள் மற்றும் 5 / 6 மீட்டர் அகலம் நீண்ட நீளம் கொண்ட பாய்கள் தென் இந்தியாவின் பகுதிகளில் எளிமையாக நெய்யப்படுகின்றன. உறுதியாகவும் அழகான நிறச் சாயல்களில், பல்வேறு நெசவு முறைகளில் போக்லே, பனாமா, ஹெர்ரிங்கோன் முதலியவைகளில் நெய்யப்படுகிறது. சணற் பாய்கள் & ரக்குகள் மின் நெசவு & கைத்தறிகளில் இந்தியாவின் கேராளாவில் பெரிய அளவில் நெய்யப்படுகின்றன. மரபார்ந்த சடராஞ்சி பாய்கள் வீட்டு அலங்காரத்தில் மிகப் பிரபலமாக மாறி வருகிறது. சணல் நூற்பற்றன மற்றும் ஒருங்கிணைப்புக்கள் கீழிடவும், லினோலியம் கீழிடுதலுக்கும் மற்றும் பலவற்றிற்கும் பயன்படுகின்றன.

சணல் பல நன்மைகளை வீட்டு ஜவுளியாக பருத்தியை மாற்றவோ அல்லது அதனுடன் கலந்து பயன்படுத்துதலையோ வைத்துள்ளது. அது ஒரு வலுவான, நீடித்த, நிறமுடைய மற்றும் லைட்-ஃபாஸ்ட் இழையாகும். அதன் புற ஊதா பாதுகாப்பு, சப்தம் மற்றும் வெப்ப பிரித்துவைத்தல், குறை வெப்ப கடத்திப் பண்பு மற்றும் விரைப்பற்றத் தன்மை அதனை வீட்டு அலங்காரங்களுக்கு ஏற்ற தேர்வாக்குகிறது. மேலும், சணல் துணிகள் கரிய அமில வாயு சிக்கலுக்கு மிதமான ஏற்புடையவை மற்றும் இயற்கையாகவே மக்கும் தன்மையுடையவையாகும். இத்தகைய குணங்கள் சணலை உயர் செயல்பாட்டு தொழில்நுட்ப சவுளிகளில் பயன்படவும் செய்யும்.[2]

மேலும், சணல் 4-6 மாதங்களில் வளர்க்கப்படலாம். சணல் ஹர்ட்டிலிருந்து (உள்ளிருக்கும் மரக் கொட்டை அல்லது சணல் தண்டின் பேரன்சீமா) ஏராளமான செல்லுலோஸ் எடுக்கப்படுவது உலகின் பெரும்பாலான மரத் தேவைகளை பூர்த்தி செய்யப்பயன்படும். சணல் தொழில்மயமாக்கலினால் சாத்தியப்படும் காடழிப்பினை பாதுகாக்க இதர பயிர்களுடனான பெரிய பயிராக விளங்குகிறது.

ஆக, சணல் மிக சூழல்-நட்புடனானதாக இழை விதையிலிருந்து காலவதியான இழை வரை உள்ளது; காலவதியான இழைகள் ஒருமுறைக்கு மேல் மறு சுழற்சி செய்யப்படலாம்.

சணல் கில்லி சூட்ஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கில்லி சூட்ஸ் கேமோபிளெக் மற்றும் புற்கள் அல்லது குட்டைச் செடிகள் போன்றவையாக பயன்படுகின்றது.

மற்றொரு பலதரப்பட்ட சணல் பொருள் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் ஆகும். அவை விவசாயத் துறையில் இதை பிரபலமான விவசாயப் பொருளாக ஆக்கியுள்ளது. அது ஒரு மெல்லியதாக இழையப்பட்ட துணியாக இயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். மண் அரிப்பு கட்டுப்பாட்டிற்கும், விதை பாதுகாப்பிற்கும், களை கட்டுப்பாட்டிற்கும், இன்னும் பல இதர விவசாய மற்றும் நில வடிவமைப்பு பயன்களுக்கும் பயன்படுகிறது. ஜியோடெக்ச்டைல்ஸை ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்த இயலும். மேலும் மக்கும் சணல் ஜியோடெக்ஸ்டைல்சானது நிலத்தில் அழுக விடப்பட்டால், நிலத்தை குளிர்வித்தும் நிலத்தினை அதிகம் வளப்படுத்தவும் சாத்தியமாக்கும். இது போன்ற முறைகள் ஆஸ்திரேலியாவின் [18] மற்றும் சஹாராவின் பகுதிகளில் வறட்சியை மாற்றி கங்கை கழிமுகப்பகுதியின் வளத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படலாம்.[சான்று தேவை]

உணவுதொகு

சணல் இலைகள் உலகின் பல பகுதிகளில் நுகரப்படுகின்றன. அதொரு பிரபலமான தாவரமாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. நைஜீரியாவின் யோருபா அதை "ஈவேடு" என்றும் மாலியின் சோங்ஹே அதை "பாக்கோஹோய்" என்றும் அழைக்கின்றனர். அது பொதுவான முசிலாஜினோஸ் (ஏதோரு "ஸ்லிம்மி") சூப் அல்லது சாஸ் என்று சில மேற்கு ஆப்பிரிக்க சமையல் மரபுகளில் அழைக்கப்படுகிறது. அதேபோல ஈகிப்ததில் முலுக்கியா என்றழைக்கப்பட்டு தேசிய உணவாகக் கருதப்படுகிறது. அது பிலிப்பைன்ஸ்சின் வடக்கு மாகாணங்களில் பிரபல உணவாக உள்ளது; அங்கு அது சாலுயோட் என அறியப்படுகிறது. சணல் இலைகள் மேற்கு கென்யாவின் லூய்ஹியா மக்கள் மத்தியிலும் நுகரப்படுகிறது. அங்கு அது பொதுவாக "ம்ரெண்டா" அல்லது "மூரெரெ" என அறியப்படுகிறது. அது 'உகாலி'யுடன் உண்ணப்படுகிறது. 'உகாலி' கென்யாவின் பெரும்பாலான சமூகங்களின் சத்துணவாகவும் உள்ளது. இலைகள் பேடாகாரோடென், இரும்பு,கால்சியம், மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றில் வளமாக உள்ளது. தாவரம் 'வைட்டமின் ஈ' க்கு இணையானதொரு ஆண்டிஆக்சிடெண்ட் நடவடிக்கையை கணிசமான α-டோக்கோபெரோல் உடன் கொண்டுள்ளது.

மற்றவைதொகு

சணலின் பலதரப்பட்ட உப-பொருட்கள் அழகு பொருட்கள், மருந்து, நிறக்குழம்பிகள் மற்றும் பல பொருட்களில் பயன்படலாம்.

அம்சங்கள்தொகு

 
நீண்ட சணல் இழையின் கீழ்ப்பகுதி வெட்டப்படுகிறது. கடின இழையின் கீழ்பகுதி, வங்காள தேசத்திலும் இந்தியாவிலும் சணல் வெட்டல் எனவும் (பொதுவாக சணல் பட்ஸ் அல்லது சணல் டாப்ஸ் மற்ற இடங்களில்).சணல் வெட்டல்கள் தரத்தில் குறைவாகவும், ஆனால் காகிதத்திற்கு வணிக மதிப்பை,கார்டெட் இழை, மற்றும் இதர இழை வழிமுறை தொழில்களுக்குக் கொண்டுள்ளது.வங்காள தேசத்தில் சணல் இழைகள் கட்டுக்களில் கிடங்கின் பின்னணியில் வைக்கப்பட்டுள்ளன.
 • சணல் இழை 100% மக்கும் தன்மையுடனிருப்பவை மேலும் மறு சுழற்சியுடையவை. ஆக சூழல் நட்புக் கொண்டவை.
 • அதொரு இயற்கையான தங்க மற்றும் பட்டுப் போன்ற பிரதிபலிப்புக் கொண்டது. ஆகையால் தி கோல்டன் ஃபைபர் என அழைக்கப்படுகிறது.
 • அது தாவரத் தண்டின் பாஸ்ட் அல்லது தோலிலிருந்து பெறப்படும் விலைக் குறைவான தாவர இழையாகும்.
 • பருத்திக்குப் பிறகு இரண்டாவது முக்கிய தாவர இழையாக உலக நுகர்வு, உற்பத்தி மற்றும் கிடைத்தல் ஆகியவற்றின் வரையறைகளின் கீழ் அதன் பயன்பாடு வருகிறது.
 • அதன் உயர் விறைப்பான வலு, குறைவான இழுவை இழைகளில் தாக்குப்பிடிக்கும் தன்மையை உறுதியளிக்கிறது. ஆகையால், சணல் விவசாயப் பொருட்களை மொத்தமாகக் கட்டுவிக்க மிகப் பொருத்தமாக உள்ளது.
 • அது சிறப்பான தொழில் இழை, துணி, வலை மற்றும் கோணிகளை தரமுடன் தயாரிக்க உதவுகிறது. அது மூலப் பொருட்களில் பயன்படும் இயற்கையான பன்முகம் கொண்ட துணிகளில் ஒன்றாக பேக்கேஜிங், ஜவுளி, ஜவுளி அற்றவை, கட்டுமானம் மற்றும் விவசாய துறைகளில் பயன்படுகிறது. இழைகளை மொத்தமாகக் கட்டுவதன் விளைவாக உடையும் போக்கின் குறைவு மற்றும் அதிகரிக்கும் உடையும் விரிவுதன்மை ஆகிய மூன்றால் ஆன கலப்பாக கலக்கப்படுகையில் ஏற்படுத்துகிறது.
 • ஹெம்ப் இழைப் போலின்றி சணல் கன்னாபிஸ் வடிவமல்ல.
 • சணலின் சிறந்த உலக மூலாதாரம் கங்கையிலுள்ள கழிமுகப்பகுதியின் பெங்கால் கழிமுக சமவெளிப்பகுதியாகும்; அதன் பெரும் பகுதி வங்காள தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
 • சணலின் நன்மைகள் திறனான இன்சுலேடிங் மற்றும் ஆண்டிஸ்டாடிக் குணங்களாகும். அதே போல குறைவான வெப்பக் கடத்தி மற்றும் ஒரு மிதமான ஈரப்பத மீட்பும் ஆகும். சணலின் பிற நன்மைகளில் ஒலியுடன் கூடிய இன்சுலேடிங் குணங்கள் மற்றும் தோல் எரிச்சலற்ற உற்பத்தியும் அடங்கும்.
 • சணல் இதர இழைகளுடன் கலக்கும் திறனை, செயற்கை மற்றும் இயற்கை இரு விதங்களிலும், செல்லுலோஸ்சிக் சாய வகைகளான இயற்கை, அடிப்படை, கொழுப்பு, சல்ப்ஃபர், ரியாக்டிவ் மற்றும் பிக்மெண்ட் சாயங்களை ஏற்றுக்கொள்கிறது. இயற்கையான வசதியான இழைகளின் தேவை உயரும் போது, சணலின் தேவை மற்றும் இதர இயற்கை இழைகள் பருத்தியுடன் ஒருங்கிணைக்கப்படுபவைகளின் தேவைகளும் அதிகரிக்கும். இந்தத் தேவையை சந்திக்க, இயற்கை இழைத் தொழிலுக்கு ரீட்டெர்ஸ் எலிடெக்ஸ் அமைப்பைத் தழுவி வழிமுறைகளை நவீனமயமாக்கும் படி பரிந்துரைந்துரைக்கப்பட்டுள்ளது. விளைவாக சணல்/பருத்தி இழைகள் துணிகளை குறைந்த செலவில் ஈரப்பத வழிமுறை பதப்படுத்தலைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும். சணல் கம்பளியுடனும் கலக்கப்படலாம். சணலை காஸ்டிக் சோடாவுடன் பதப்படுத்தும் போது, சுருக்கமின்மை, மென்மை, இசையும்தன்மை மற்றும் தோற்ற மேம்பாடு ஆகியன இணைக்கப்பட்டு கம்பளியுடன் நெய்யப்படும் அதன் திறனுக்கு உதவுகிறது. திரவ அம்மோனியா சணல் மீது இதே போன்ற விளைவைத் தருகிறது. அதே போல தீப்பற்றுவதைத் தடுக்கும் இரசாயணங்களுடன் பதப்படுத்தும் போது தீப்பற்றுதலைத் தடுக்கும் குணங்களை மேம்படுத்தும்.
 • சிலர் சணலின் பாதக அம்சங்களாக மோசமான அழகு சேர்க்கும் தன்மை மற்றும் சுருக்க எதிர்ப்பு, நொய்மைத் தன்மை, இழை விடுதல் மற்றும் சூரிய வெளிச்சத்தில் மஞ்சள் நிறமாதல் போன்றவற்றை உள்ளடக்குகின்றனர். இருப்பினும், துணிகளை கடுகு எண்ணெய் மசகுடன் தயாரிக்கும் போது, குறைவான மஞ்சள் நிறம் மற்றும் துணி எடையிழப்புக் குறைவு மற்றும் அதிகரிக்கும் சாய அறிவு ஆகியவற்றைத் தருகிறது. சணல் ஈரமாக இருக்கும் போது எடை குறைவாக இருக்கும். மேலும் ஈரமான சூழல்களில் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகிறது. சணல் அதன் சில நொய்மைகளையும் இறுக்கத்தையும் குறைக்க வேண்டி என்சைம்களுடன் பதப்படுத்தப்படலாம். ஒருமுறை என்சைம்களுடன் பதப்படுத்தப்படும்போது சணல் தயாராக இயற்கைச் சாயங்களை ஒப்புக்கொள்ளும் ஏற்றத்தைக் காட்டுகிறது. என்சைம் மேரிகோல்ட் மலரிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். சணல் துணியை இந்த எண்ணெய் உடன் சாயமிடும் ஒரு முயற்சியில் வெளுக்கப்பட்ட துணி இரும்பு சல்பேட்டுடன் அரிகாரம் பூசப்பட்டப்போது, துணியின் சாயம் ஏற்கும் மதிப்பை அதிகரித்தது. சணல் ரியாக்டிவ் சாயத்தில் கூட நன்கு எதிர்வினைப் புரிகிறது. இந்த வழிமுறை சணலிருந்து தயாரிக்கப்பட்ட வெண்மையான மற்றும் வேகமாக நிறமடையும் பலவகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் காண்கதொகு

மேற்குறிப்புகள்தொகு

 1. http://www.bbc.co.uk/iplayer/episode/b00n5pvr/Brian_Coxs Jute__Journey/
 2. 2.0 2.1 சணல். (IJSG). பெறப்பட்டது 13 ஜூன் 2007.
 3. தி குளோபல் ஃபைபர் டிரேட் செண்டர் லிமிடெட். (GFTCL) - Articles & Information on சணல், Kenaf, & Roselle Hemp.

குறிப்புகள்தொகு

 • பாசு, ஜி., ஏ,கே.சின்ஹா, அண்ட் எஸ்.என். சட்டோபாத்யாய். "பிராபெர்ட்டீஸ் ஆஃப் ஜூட் பேஸ்ட் டெனெரி பிளண்டட் பல்க்ட் யார்ன்ஸ்". மேந்மேட் டெக்ஸ்டைல்ஸ் இன் இந்தியா . தொ. 48, எண். 9 (செப். 2005): 350–353. (AN 18605324)
 • சட்டோபாத்யாய், எஸ்.என்., என்.சி.பான், அண்ட் ஏ. டே. "அ நாவல் பிராசஸ் ஆஃப் டையிங் ஆஃப் ஜூட் ஃபேப்ரிக் யூசிங் ரியாக்டிவ் டை". டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீ ஆஃப் இந்தியா . தொ. 42, நெ. 9 (செப். 2004): 15–22. (AN 17093709)
 • துரைசுவாமி,ஐ., ஏ.பாசு, அண்ட் கே.பி. செல்லமணி. "டெவலப்மெண்ட் ஆஃப் ஃபைன் குவாலிட்டி ஜூட் ஃபைபர்ஸ்". கல்ரேஜ் . நவ. 6–8, 1998, 2ப. (AN TDH0624047199903296)
 • கோஸ்லோவ்ஸ்கி,ஆர். அண்ட் எஸ்.மணிஸ். "க்ரீன் ஃபைபர்ஸ்". தி டெக்ஸ்டைல் இன்ஸ்டியூட். டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீ: வின்னிங் ஸ்டிராடெஜீஸ் ஃபார் தி நியூ மில்லினியம்-பேபர்ஸ் பிரெசெண்டட் அட் தி வோர்ல்ட் கான்ஃபெரென்ஸ் . பிப். 10–13, 1999: 29 (13ப). (AN TDH0646343200106392)
 • மது, டி. "பயோ-கம்போசைட்ஸ்-ஆன் ஓவர்வ்யூ". டெக்ஸ்டைல் மேக்சைன் . வால். 43, நெ. 8 (ஜூன். 2002): 49 (2 பக்கங்கள்). (AN TDH0656367200206816)
 • மாலிக், எஸ்.ஆர் "கெமிக்கல் மாடிஃபீகேஷன் ஆஃப் ஜூட்". ஏஷியன் டெக்ஸ்டைல் ஜர்னல் . வால். 10, நெ. 7 (ஜூல். 2001): 99 (8 பக்கங்கள்). (AN TDH0648424200108473)
 • மோசஸ், ஜே. ஜெயக்கொடி, அண்ட் எம்.ராமசாமி. "குவாலிட்டி இம்ப்ரூவ்மெண்ட் ஆன் ஜூட் அண்ட் ஜூட் காட்டன் மெட்டீரியல்ஸ் யூசிங் என்சைம் ட்ரீட்மெண்ட் அண்ட் நேச்சுரல் டையிங்". மேன்-மேட் டெக்ஸ்டைல்ஸ் இன் இந்தியா . வால். 47, நெ. 7 (ஜூல். 2004): 252–255. (AN 14075527)
 • பான், என்.சி., எஸ்.என் சட்டோபத்தியாய், அண்ட் ஏ.டே. "டையிங் ஆஃப் ஜூட் ஃபேப்ரிக் வித் நேச்சுரல் டை எக்ஸ்டிரேடட் ஃபிரம் மேரி கோல்ட் பிளவர்". ஏஷியன் டெக்ஸ்டைல் ஜர்னல் . வால். 13, நெ. 7 (ஜூல். 2004): 80–82. (AN 15081016)
 • பான், என்.சி., ஏ.டே, அண்ட் கே.கே.மஹலனாபிஸ். "பிராபெர்ட்டீஸ் ஆஃப் ஜூட்". இந்தியன் டெக்ஸ்டைல் ஜர்னல் . வால். 110, நெ. 5 (பிப். 2000): 16. (AN TDH0635236200004885)
 • ராய், டி.கே.ஜி., எஸ்.கே. சாட்டர்ஜி, அண்ட் பி.டி.குப்தா. "கமபாரேட்டிவ் ஸ்டடீஸ் ஆன் பிளீச்சிங் அண்ட் டையிங் ஆஃப் ஜூட் ஆஃப்டர் பிராசெஸிங் வித் மினரல் ஆயில் இன் வாடர் எமுல்ஷன் விஸ்-எ-விஸ் செலப்-எமூல்சிபெயபில் காஸ்டர் ஆயில்". கலரேஜ் . வால். 49, நெ. 8 (ஆக். 2002): 27 (5 பக்கங்கள்). (AN TDH0657901200208350)
 • ஷெனாய், வி. ஏ. "என்சைம் ட்ரீட்மெண்ட்". இந்தியன் டெக்ஸ்டைல் ஜர்னல் . வால். 114, நெ. 2 (நவ. 2003): 112–113. (AN 13153355)
 • ஸ்ரீநிவாஸன்,ஜே., ஏ.வெங்கடாசலம், அண்ட் பி.ராதாகிருஷ்ணன். "ஸ்மால்-ஸ்கேல்ஜூட் ஸ்பின்னிங்: ஆன் அனாலிசிஸ்". டெக்ஸ்டைல் மேகசைன் . வால். 40, நெ. 4 (பிப். 1999): 29. (ANTDH0624005199903254)
 • விஜயக்குமார், கே.ஏ., அண்ட் பி.ஆர். ராஜேந்திரா. "அ நியூ மெத்தட் டு டெடர்மைன் தி பிரோபோர்ஷன் ஆஃப் ஜூட் இன் அ ஜூட்/காட்டன் பிளெண்ட்". ஏஷியன் டெக்ஸ்டைல் ஜர்னல் , வால். 14, நெ. 5 (மே 2005): 70-72. (AN 18137355)

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சணல்&oldid=2233955" இருந்து மீள்விக்கப்பட்டது