பணப்பயிர்
பணப்பயிர் அல்லது காசுப்பயிர் என்பது விற்று இலாபம் ஈட்டுவதற்காக உற்பத்தி செய்யப்படும் பயிர் வகைகளைச் சேரும். இப்பயிர்களை உற்பத்தி செய்யும் பண்ணைகள் அல்லது தோட்டங்களைச் சாராத தரப்பினரே இவற்றை வாங்குவது வழக்கம்.[2] ஏலக்காய், காபி, பருத்தி, புகையிலை போன்ற தாவரம் சார்ந்த வேளாண்மை உற்பத்திகளே பணப்பயிர் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும். கால்நடை வேளாண்மை சார்ந்த உற்பத்திகளை இச்சொல் குறிப்பதில்லை. விற்பதற்காக உற்பத்தி செய்யப்படும் பயிர்களை வாழ்வாதாரப் பயிர்களில் இருந்து வேறுபடுத்துவதற்காகவே பணப்பயிர் என்னும் சொல் பயன்படுகிறது. வாழ்வாதாரப் பயிர் என்பது உற்பத்தியாளரின் குடும்ப உணவுத் தேவைகளை நிறைவு செய்யவும், அவர்களின் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தவும் உற்பத்தி செய்யப்படும் பயிர்களைக் குறிக்கும். பயிர்வகைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாகக் காணப்படலாம்.
முற்காலத்தில் ஒரு உற்பத்தியாளனுக்குப் பணப்பயிர் முக்கியமானதாக இருந்தாலும், அவருடைய மொத்த உற்பத்தியின் சிறு பகுதியாகவே அவை இருந்தன. தற்காலத்தில், சிறப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏறத்தாழ எல்லாப் பயிர்களுமே வருமானத்துக்காகவே உற்பத்தியாகின்றன. மிகவும் குறைவான வளர்ச்சி நிலையில் உள்ள நாடுகளில், வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக தேவை கொண்டனவாகவும், ஏற்றுமதிப் பெறுமானம் கொண்டனவுமான பயிர்கள் பணப்பயிர்களாகச் செய்கை பண்ணப்படுவதைக் காணலாம். இவ்வாறான பயிர்களுட் பல குடியேற்றவாத ஆட்சிக் காலங்களில் குடியேற்றவாத ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை.
முக்கியமான பணப்பயிர்களின் விலைகள் உலகளாவிய பண்டச் சந்தையில் தீர்மானிக்கப்படுகின்றன. இவ்விலைகள், சரக்கனுப்பும் கட்டணங்கள், உள்ளூர் கேள்வி, வழங்கல் சமநிலை என்பவற்றைப் பொறுத்து உள்ளூர்ச் சந்தைகளில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். இந்த முறையில், உலகின் எங்காவது ஓரிடத்தில் இருந்து குறித்த பண்டம் பெருமளவில் உலகச் சந்தைக்கு வரும்போது, உலகச் சந்தை விலைகள் குறைகின்றன. இதன் விளைவாக, இப்பண்டங்களை உற்பத்தி செய்யும் பகுதிகளும், நாடுகளும், தனி மனிதரும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். காப்பி இவ்வாறான விலைத் தளம்பல்களுக்கு உள்ளாகும் பண்டங்களுள் ஒன்று.[3][4]
வெப்பதட்ப வலயங்கள் சார்ந்த பணப்பயிர்கள்
தொகுஆர்க்டிக்
தொகுஆர்க்டிக் காலநிலை பணப்பயிர்கள் உற்பத்திக்குச் சாதகமானது அல்ல. ஆனாலும், ரோடியோலா ரோசியா என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை இப்பகுதியில் விளைகின்றது.[5] தற்போது இதற்கு நல்ல கேள்வி இருந்தாலும், வழங்கல் குறைவாகவே உள்ளது (2011 நிலவரப்படி).[5]
மிதவெப்ப வலயம்
தொகுசோளம், பார்லி, ஓட்சு போன்ற தானிய வகைகளும்; எண்ணெய் விதைப் பயிர்களும்; உருளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும்; ஆப்பிள், செர்ரி போன்ற மரப் பழ வகைகளும்; இசுட்ராபெர்ரி, ராசுப்பெர்ரி போன்ற மென் பழ வகைகளும் இப்பகுதிகளில் விளைகின்றன.
துணை வெப்ப வலயம்
தொகுநெல், வரகு போன்ற தானியங்கள்; சோயா அவரை போன்ற எண்ணெய் விதைப் பயிர்கள்; மரக்கறி, மூலிகைகள் என்பன இப்பகுதிகளில் விளையும் முக்கியமான பணப்பயிர்கள்.
வெப்ப வலயம்
தொகுவெப்பவலயப் பகுதிகளில் விளையும் பணப் பயிர்களுள், காப்பி,[3] கொக்கோ, கரும்பு, வாழை, தோடை, பருத்தி, சணல் போன்றவை அடங்குகின்றன. எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படும் எண்ணெய்ப் பாம் ஒரு வெப்ப வலயத் தாவரம். இதன் பழத்தில் இருந்து பாம் எண்ணெய் உற்பத்தியாகிறது.[6]
முக்கியமான சில பணப்பயிர்கள்
தொகுதேயிலை
தொகுதேயிலைச் செடியின் கொழுந்து என அழைக்கப்படும் குருத்துக்களைக் காயவைத்துப் பதப்படுத்தித் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலையை அருந்துவதற்கான தேநீர் எனப்படும் பானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற பல நாடுகளில் தேயிலையைப் பயிரிடப்படுகிறது. இப்பயிர் பிரித்தானியர் இந்நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினர். இவர்கள், இந்நாடுகளைப் பிடித்துக் குடியேற்றவாத ஆட்சி நடத்திய காலத்தில், இந்நாடுகளின் பரந்த பரப்பளவில் பெருந்தோட்டங்களை உருவாக்கித் தேயிலைப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்டனர். இதற்காகப் பெருமளவில் தொழிலாளர்களையும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று குடியேற்றினர். இவ்வாறு தேயிலைப் பயிர்ச் செய்கை அறிமுகமான பல நாடுகளில் இன்றும் அது முக்கியமான ஒரு ஏற்றுமதிப் பண்டமாக விளங்கிவருவதைக் காணலாம். அதே வேளை, நாடுவிட்டு நாடு தொழிலாளர்களை இடம்பெயர்த்தியதனால், பிரித்தானியர் வெளியேறிய பின்னர் இந்நாடுகளில் பல சமுதாய, அரசியல் சிக்கல்கள் உருவாயின.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 USDA-Foreign Agriculture Service. "(Cotton) Production Ranking MY 2011". National Cotton Council of America. பார்க்கப்பட்ட நாள் April 3, 2012.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "Ag 101: Crop Glossary". U.S. Environmental Protection Agency. September 10, 2009. பார்க்கப்பட்ட நாள் April 4, 2012.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ 3.0 3.1 Ellis, Blake (September 10, 2010). "Coffee prices on the rise". CNN Money. http://money.cnn.com/2010/09/10/markets/coffee_prices/index.htm. பார்த்த நாள்: April 3, 2012.
- ↑ Galatola, Thomas (February 14, 2012). "Coffee Futures Fall to Lowest in 14 Months: Commodities at Close". Bloomberg News. http://www.bloomberg.com/news/2012-02-14/coffee-futures-fall-to-lowest-in-14-months-commodities-at-close.html. பார்த்த நாள்: April 3, 2012.
- ↑ 5.0 5.1 "Medicinal Arctic herb: Alaska's next (legal) cash crop?". Alaska Dispatch. February 17, 2011. பார்க்கப்பட்ட நாள் April 9, 2012.
{{cite web}}
: External link in
(help)[தொடர்பிழந்த இணைப்பு]|publisher=
- ↑ Reeves, James B.; Weihrauch, John L.; Consumer and Food Economics Institute (1979). Composition of foods: fats and oils. Agriculture handbook 8-4. Washington, D.C.: U.S. Dept. of Agriculture, Science and Education Administration. p. 4. இணையக் கணினி நூலக மைய எண் 5301713.