வரகு
Kodo millet
உயிரியல் வகைப்பாடு
திணை:
வரிசை:
Poales
குடும்பம்:
Poaceae
துணைக்குடும்பம்:
Panicoideae
பேரினம்:
Paspalum
இனம்:
P. scrobiculatum
இருசொற் பெயரீடு
Paspalum scrobiculatum
லி.
Panicum miliaceum

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது (தவறு[1]). வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.[சான்று தேவை][2][3][4]

பண்டைத்தமிழரின் உணவு தானியம்

தொகு

இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஓர் உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.

  • வரகை அரிசிக்குப் பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
  • அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
  • வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

விழிப்புணர்வு

தொகு

தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.

வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால், தொண்டையில் அடைத்துக் கொண்டு ஒருவிதமான ஒவ்வாமையை உண்டாகும்.

வரகின் பயன்பாடு

தொகு
  • வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது.[சான்று தேவை]
  • வீடுகளில் கூரை வேய்வதற்கு வரகுத்தாளை பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

சாகுபடி முறை

தொகு
  • ஆடிப் பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது.
  • இதன் வயது 5 மாதங்கள்.
  • அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது.
  • மழை பெய்து முடிந்த பிறகு, மண்ணில் அதிக ஈரம் இல்லாமல், புட்டுப்பதத்தில் இருக்கும் போது, இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 7 கிலோ விதையைப் பரவலாக விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு போடவேண்டும்.
  • ஈரப்பதம் இருப்பதைப் பொறுத்து, 7 முதல் 10 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும்.
  • விதைப்பு செய்த பிறகு மழை இல்லாமல் இருந்தாலும், மழை பெய்தவுடன் முளைத்து விடும்.
  • களை எடுக்கத் தேவையில்லை, பூச்சி, நோய், பறவைகள் போன்ற பிரச்னையில்லை, உரம், பூச்சிக்கொல்லி தேவையில்லை.
  • இளம் பயிராக இருக்கும்போது, மாடுகள் மேய்ந்தாலும், பயிர் மீண்டும் அதிகமான கிளைப்புடன் வளர்ந்து விடும்.
  • நான்காம் மாதத்தில் கதிர் பிடிக்க ஆரம்பித்து, ஐந்தாம் மாதத்தில் முற்றி அறுவடைக்கு வந்து விடும்.
  • ஒரு குத்துக்கு 15 முதல் 20 சிம்புகளும், சிம்புக்கு 5 முதல் 8 கதிர்களும், கதிருக்கு 150 முதல் 200 மணிகளும் இருக்கும்.
  • அறுவடை செய்ய ஆட்கள் வேண்டிய அவசியமில்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் நெல் அறுவடை இயந்திரங்களை வைத்தே அறுவடை செய்யலாம்.
  • ஏக்கருக்கு சராசரியாக 15 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும்.

கபிலர் பாடலில் வரகு

தொகு

கபிலர் தன் பாடலில் (115) ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ பயன்கள்

தொகு
  • சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
  • மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது.
  • கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
  • நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
  • மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய சுட்டிகள்

தொகு

கல்லீரலைக் காக்கும் வரகு !

மேற்கோள்கள்

தொகு
  1. முனுசாமி இலட்சுமணன், அசோக் (1996-02-14). "Lost Crops of Africa: Volume I: Grains". National Academies Press: 260. https://www.nap.edu/read/2305/chapter/17#253. 
  2. "Panicum miliaceum L.". The Plant List. 2013. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
  3. Lu, H.; Zhang, J.; Liu, K.-b. et al. (21 April 2009). "Earliest domestication of common millet (Panicum miliaceum) in East Asia extended to 10,000 years ago". Proceedings of the National Academy of Sciences 106 (18): 7367–7372. doi:10.1073/pnas.0900158106. பப்மெட்:19383791. Bibcode: 2009PNAS..106.7367L. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரகு&oldid=4102785" இலிருந்து மீள்விக்கப்பட்டது