பண்டச் சந்தை
பண்டச் சந்தை என்பது நேரடியாக அல்லது இணையவழியாக மூல அல்லது முதன்மைப் பண்டங்கள் தொடர்பான வாங்கல், விற்றலைக் குறிக்கும். கோதுமை, காப்பி, கொக்கோ, சர்க்கரை, சோளம், சோயா, பழங்கள் போன்ற உற்பத்தியாக அறுவடை செய்யப்படும் பண்டங்கள் பொதுவாக மென்பண்டங்கள் எனப்படுகின்றன. பிரித்தெடுக்கப்படும் பொன், இரப்பர், பெட்ரோலியம் போன்றவை வன்பண்டங்கள். ஒழுங்குபடுத்தும் நோக்கத்துக்காகப் பண்டங்களை, சக்தி, கால்நடைகளை உள்ளடக்கிய வேளாண்மைப் பண்டங்கள், தொழிற்றுறை உலோகங்கள், அரிய உலோகங்கள் போன்ற பல குழுக்களாகப் பிரிப்பது உண்டு. இவற்றையும் ஏறத்தாழ 100 வகையான முதன்மைப் பண்டங்களாகப் பிரித்துள்ளனர். முதலீட்டாளர்கள் உலக அளவில் ஏறத்தாழ 50 முக்கியமான பண்டச் சந்தைகளை அணுகுகின்றனர். நேரடி வணிகத்துக்கு மாற்றாக இணையவழி விற்று வாங்கும் வசதிகளினால், வணிகமும் அதிகரித்து வருகின்றது.