சுவராஜ்

காந்தியம்

சுவராச்சு (Swaraj) என்ற இந்தி மொழிச் சொல் பொதுவாக தன்னாட்சியைக் குறித்த போதும் [1] மகாத்மா காந்தி இதனை உள்ளாட்சி என்ற பொருளில் பயன்படுத்தினார்.[2][3] காந்தியின் கருத்தாக்கத்தின்படி புதிய இந்திய அரசு படிநிலையில் அமைந்த அரசாக இல்லாது தனிநபர் மற்றும் சமூகக் கட்டமைப்புகளின் தன்னாட்சி மூலம் ஆளப்படுவதை விரும்பினார். அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்படாது அதிகாரப் பரவல் இதன் முதன்மை குவியமாக இருந்தது.[4] இந்தக் காந்தியின் கருத்தாக்கம் பிரித்தானிய அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு எதிராக இருந்தமையால் பிரித்தானியரால் நிறுவப்பட்ட அரசியல், பொருளியல், நிர்வாக, சட்ட, இராணுவ மற்றும் கல்வி அமைப்புகளை கைவிடக் கூறினார்.[5]

மகாத்மா காந்தி (வலது)

காந்தியின் இக்கருத்தாக்கம் முழுமையாக இந்தியாவில் பின்பற்றப்படாவிடினும் இதற்காக அவர் நிறுவிய தன்னார்வலர் அமைப்புக்கள் இந்தக் கொள்கையை முன்னெடுத்துச் சென்றன.[6] நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் வரும் முன்பே இக்கொள்கையின்படி அமைந்த வினோபா பாவேயின் நிலக்கொடை இயக்கம் தனிநபர்களால் தாமாகவே தமது கூடுதல் விளைநிலத்தை வறியவர்களுக்குப் பகிர்ந்தளிக்க முன்னோடியாக விளங்கியது. சுவராச்சின் தாக்கத்தால் நிலச்சுவான்தார் முறையும் முடிவுக்கு வந்தது.

சான்றுகள் தொகு

  1. swa- பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் "self", raj "rule"
  2. Hind Swaraj or Indian Home Rule, Gandhi, 1909
  3. What is Swaraj? பரணிடப்பட்டது 2012-09-15 at the வந்தவழி இயந்திரம். Retrieved on July 12, 2007.
  4. Parel, Anthony. Hind Swaraj and other writings of M. K. Gandhi. Cambridge University Press. Cambridge, 1997.
  5. What is Swaraj? பரணிடப்பட்டது 2012-09-15 at the வந்தவழி இயந்திரம். Retrieved on March 3, 2007.
  6. What Swaraj meant to Gandhi. Retrieved on September 17, 2008.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவராஜ்&oldid=3514101" இலிருந்து மீள்விக்கப்பட்டது