நசீம் அகமத்

நசீம் அகமத் (Naseem Ahmad) என்பவர் முன்னாள் ஆட்சிப் பணியாளர் ஆவார். 1972 ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்திலிருந்து இந்திய நிர்வாகப் பணியில் இருந்த இவர் அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும் இருந்தார். இங்கு 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை துணை வேந்தராக இவர் பணிபுரிந்தார் [1]. தற்போது இவர் இந்தியாவின் சிறுபான்மையினர் தேசிய அமைப்பின் தலைவராக உள்ளார்.

1972 தொகுதி அரியானா மாநிலப் பிரிவு ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணியாளரான இவர் முன்னதாக 1971 முதல் சூன் 1972 வரை உத்தரப் பிரதேச நீதித்துறை குடிமைப்பணி உறுப்பினராகவும் இருந்தார் [2].

மேற்கோள்கள் தொகு

  1. "Naseem Ahmed, ex-IAS is new NCM Chairman — A Statutory Body, Government of India". Muslim Mirror. Archived from the original on 31 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "National Commission for Minorities — A Statutory Body, Government of India". National Commission for Minorities. Archived from the original on 29 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்பிரல் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீம்_அகமத்&oldid=3587303" இலிருந்து மீள்விக்கப்பட்டது