நஞ்செதிர்ப்பி

நஞ்செதிர்ப்பி (antivenom, antivenin, நஞ்சுமுறி) என்பது நஞ்சுக் கடிகள் அல்லது கொட்டுகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பயன்படும் உயிரிப்பொருள். குதிரை, செம்மறியாடு, வெள்ளாடு அல்லது முயல் போன்ற விலங்குகளில் மிகச்சிறிய அளவில் நஞ்சையேற்றுவதன் மூலம் நஞ்சுமுறி செய்யப்படுகிறது. பெர்ச்செரான் (Percheron) வகைக் குதிரைகளுக்கு மிகச்சிறியளவில் பாம்பின் நஞ்சு உட்செலுத்தப் படுகிறது; இதைச் செய்யும்போது குதிரைக்குத் தீங்கேற்படாது, ஆனால் குதிரையின் இரத்தத்தில் நஞ்சு எதிர்ப்பொருள்கள் உருவாகும். நீண்ட காலத்திற்கு ( 10 - 12 மாதங்கள்) இவ்வாறு செய்தபின், ஒவ்வொரு குதிரையினின்றும் சிறிதளவு இரத்தத்தை எடுத்து அதனின்று ஊனீர் (plasma) பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு நஞ்செதிர்ப்பொருள்கள் உருவான ஊனீரைப் பாம்புக்கடி பட்டவருக்கு உட்செலுத்துவதனால் பாம்பின் நஞ்சு முறிக்கப்படுகிறது.

குறிப்புதவி தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்செதிர்ப்பி&oldid=3349271" இலிருந்து மீள்விக்கப்பட்டது