நடத்தை விதிகள்

நடத்தை விதிகள் (Conduct Rules) என்பது மக்களாட்சியில் தேர்தல் தொடங்கும் முன் செயல்படுத்தப்படும் ஒரு சிறப்பு அரசியல் நடைமுறையாகும். இந்த நடைமுறை அல்லது விதிமுறைகள் பெரும்பாலும் தேர்தல் தேதி அறிவித்து, தேர்தல் முடியும் வரை செயல்படுத்தப்படும்.

நடத்தை விதிகள் அமலாகும் பொழுது, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், ஊழியர்களின் சட்ட பூர்வமான குடும்ப உறுப்பினர்களை வகைப்படுத்தல், அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கூட்டுறவு சங்கங்களில் பங்கேற்றல், அரசு தொடர்பற்ற தனிப்பட்ட தொழில் அல்லது வேலை செய்தல், ஏலச் சீட்டு கட்டுதல், வரதட்சனை, கொடை, பரிசுகள் வாங்குதல், பணியில் இருக்கும் போது உயர்கல்வி பயிலல், வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டு வாங்குதல், அலுவல் நேரங்களில் ஆர்ப்பாட்டம் (Demonstration) செய்தல், சங்க சந்தா வசூலித்தல், முதலீடுகள் செய்தல் மற்றும் கடன் வாங்குதல்; கொடுத்தல், வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தல், அரசியல் கட்சியில் சேர்தல் மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல், சாதி சங்கங்களில் உறுப்பினராதல், இருதார திருமணம் புரிதல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், போதைதரும் மருந்துகள்/பானங்கள் அருந்துதல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான இயக்கங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கெடுத்தல் போன்றவை குறித்தான செயல்பாட்டு அல்லது நடத்தை விதிமுறைகள் விரிவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடத்தை_விதிகள்&oldid=3599620" இலிருந்து மீள்விக்கப்பட்டது