நடாலியா போன்ஸ் தி லியோன்

நடாலியா போன்ஸ் தி லியோன் (Natalia Ponce de León) (பிறப்பு: 1980 ஆகத்து 8) இவர் போகோட்டாவில் பிறந்த கொலம்பிய பெண் ஆவார். தனது நாட்டில் அமிலத் தாக்குதல்களில் ஈடுபடுவோரை குறிவைத்து ஒரு சட்டத்திற்காக வெற்றிகரமாக பிரச்சாரம் செய்தவர். இவரும் ஒரு அமிலத்தாக்குதலிம் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் ஆவார். 2016ஆம் ஆண்டில், இவர் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார். [1] இவர் கொலம்பியாவின் போகோட்டாவில் உள்ள பொலிடிக்னிகோ கிரான்கொலம்பியானோ பல்கலைக்கழகத்தில் திரைப்பட ஆய்வுகளில் இளங்கலை பட்டம் பெற்றார்.

மே 2018 இல் இஸ்ரேலில் நடந்த மாஷாவின் 30 வது சர்வதேச பெண்கள் முன்னணி மாநாட்டில் நடாலியா போன்ஸ் தி லியோன்
2017 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையில் நடைபெற்ற விழாவின் போது கொலம்பியாவைச் சேர்ந்த சர்வதேச வீரதீரப் பெண் என்ற விருது பெற்ற நடாலியா போன்ஸ் தி லியோன் கருத்துக்களை வழங்கினார்.

தாக்குதல்தொகு

போன்ஸ் தி லியோன், லண்டனில் சிறிது காலம் வாழ்ந்த பின்னர் போகோடாவிற்கு திரும்பி வந்தார். அங்கு இவர் ஆங்கிலம் படித்து உணவக பணியாளராக பணிபுரிந்தார். கொலம்பியா திரும்பி வந்ததும், தனது தாயுடன் வேலை செய்யத் தொடங்கினார். பள்ளி சீருடைகள் தயாரித்தார். இவர் எதிர்பாராத விதமாக ஜொனாதன் வேகா என்பவனால் தாக்கப்பட்டார். [2] இவர் 2014 மார்ச் 27, அன்று [3] சாண்டா பார்பராவில் உள்ள தனது தாயைப் பார்க்கச் செல்லும்போது முகத்திலும் உடலிலும் ஒரு லிட்டர் சல்பூரிக் அமிலத்தை வீசினான். [4] முன்னாள் பக்கத்துவிட்டைச் சேர்ந்த வேகா, போன்ஸ் தி லியோன் மீது "தொந்திரவு" கொடுத்து வந்ததாகவும், இவர் ஒரு உறவுக்கான திட்டத்தை நிராகரித்த பின்னர் இவருக்கு எதிராக மரண அச்சுறுத்தல்களைச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அமிலத் தாக்குதலின் விளைவாக இவரது உடல் 24 சதவீதம் கடுமையாக பாதிக்கப்பட்டது. [5] தாக்குதலுக்குப் பின்னர் போன்ஸ் தி லியோன் தனது முகம் மற்றும் உடலில் 37 புனரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். [6]

புதிய சட்டம்தொகு

இவரது வழக்கு தனிப்பட்ட சம்பவம் அல்ல. தாக்குதல் நடைபெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கொலம்பியா உலகில் தனிநபர் அமில தாக்குதல்களின் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும். [7] இருப்பினும், இவரது தாக்குதலுக்குப் பின்னர் சில மாதங்களில் போன்ஸ் டி லியோனின் பிரச்சாரம் தொடங்கும் வரை ஒரு பயனுள்ள சட்டம் நடைமுறையில் இல்லை.

இவரது தக்குதலுக்குப் பிறகான புதிய சட்டம், அமில தாக்குதல்களை ஒரு குறிப்பிட்ட குற்றமாக வரையறுத்து. தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை 50 ஆண்டுகள் வரை அதிகரிக்கிறது. [6] பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை உள்ளிட்ட சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய சட்டம் எதிர்கால தாக்குதல்களுக்கு தடையாக செயல்படும் என்று போன்ஸ் தி லியோன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஊடகப் பரப்புரைதொகு

போன்ஸ் தி லியோன் தனது பிரச்சாரத்தின் போது ஒரு பாதுகாப்பு முகமூடியுடனே பொது வெளியில் பேசினார். இவரது கதையைச் சொல்லும் எல் ரெனாசிமியான்டோ தி நடாலியா போன்ஸ் தி லியோன் (நடாலியா போன்ஸ் தி லியோனின் மறுபிறப்பு) என்ற புத்தகம் 2015 ஏப்ரலில் வெளியிடப்பட்டபோது இவர் தனது முகத்தைக் காட்ட முடிவு செய்தார். [8]

குறிப்புகள்தொகு