அமிலத் தாக்குதல்

அமிலத் தாக்குதல் (acid attack) என்பது வன்முறை தாக்குதல்களில் ஒன்று[1][2][3]. அமிலங்களைக் கொண்டு எதிரிகளின் முகம், மற்றும் உடல் உறுப்புகளை சிதைத்தல், உருக்குலைத்தல், முடமாக்குதல்/ஊனமாக்குதல், தோற்றத்தை விகாரமாக்குதல் போன்றவதை இதன் நோக்கங்களாக, விளைவுகளாக இருக்கின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் நேர்கின்றன. பெரும்பாலும் முகத்தை சிதைக்கும் நோக்கிலேயே ஊற்றப்படுகின்றன. தோல்களையும், திசுக்களையும் பொசுக்கி விடும், சிலநேரங்களில் எலும்புகளையும் சேதப்படுத்துகின்றன. இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் பொதுவான வகை அமிலங்கள் சல்பூரிக் மற்றும் நைட்ரிக் அமிலம் . ஹைட்ரோகுளோரிக் அமிலம் சில சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மிகக் குறைவான தீங்கு விளைவிக்கும்.[4] காஸ்டிக் சோடா (சோடியம் ஹைட்ராக்சைடு) போன்ற வலுவான காரப் பொருட்களின் நீர் கரைசல்களும் பயன்படுத்தப்படுகின்றன இத்தாக்குதல்களின் நீண்ட நாளைய பாதிப்புகளில் கண் பார்வை பறிபோதல், முகம் மற்றும் உடல் விகார தோற்றமளித்தல் மட்டுமின்றி, சமூக விளக்கம், உளவியல் பாதிப்புகள் , பொருளாதார சிக்கல் போன்றவைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமிலத்தாக்குதல் உலகம் முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

தெஹ்ரானில் சிகிச்சை பெற்று வரும் ஈரானிய அமிலத் தாகுதலுக்கு உள்ளான பெண், ஏப்ரல் 2018 இல்

இன்று, உலகின் பல பகுதிகளில் அமிலத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன, இருப்பினும் வளரும் நாடுகளில் இவை அதிகமாக இருந்து வருகிறது. 1999 மற்றும் 2013 க்கு இடையில், மொத்தமாக 3,512 வங்காளதேச மக்கள் அமிலத்தால் தாக்கப்பட்டனர்,[5][6][7] குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்றுதல் மற்றும் கட்டுப்பாட்டின் அடிப்படையில் 2002 முதல் ஒவ்வொரு ஆண்டும் 15% –20% வழக்குகளின் விகிதங்களாலும் அமில விற்பனை குறைந்து வருகிறது.[8][9] இந்தியாவில், அமிலத் தாக்குதல்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் 250-300 சம்பவங்கள் பதிவாகின்றன, ஆசிட் சர்வைவர்ஸ் எனும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் கூற்றுப்படி "உண்மையான எண்ணிக்கை 1,000 ஐ தாண்டக்கூடும்,".[10][11]

உலகம் முழுவதும் அமிலத் தாக்குதல்கள் நடந்தாலும், இந்த வகை வன்முறை தெற்காசியாவில் மிகவும் அதிகமாக நடைபெறுகிறது.[12] சர்வதேச அளவில் இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் அமிலத் தாக்குதல்கள் நடைபெறுகிறது.[13]ஆசிட் சர்வைவர்ச் டிரச்ட் இன்டர்நேசனல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இங்கிலாந்தில் 601 க்கும் மேற்பட்ட அமிலத் தாக்குதல்கள் நடந்தன, மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 67% ஆண்கள், ஆனால் ASTI இன் புள்ளிவிவரங்கள் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களில் 80% பெண்கள் என்று கூறுகின்றன.[14] கடந்த ஐந்து ஆண்டுகளில் இது தொடர்பான 1,200 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2011 முதல் 2016 வரை, லண்டனில் மட்டும் 1,464 குற்றங்கள் பதிவாகியது.

பொதுவான காரணங்கள் தொகு

தாக்குபவரின் நோக்கம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரை கொல்வதை விட அவமானப்படுத்துவதாகவே உள்ளது. பிரிட்டனில், இத்தகைய தாக்குதல்கள், குறிப்பாக ஆண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைவாகவே வழக்காகப் பதிவு செய்யப்படுகிறது என்று நம்பப்படுகிறது, இதன் விளைவாக அவற்றில் பல அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தெரிய வருவது இல்லை.[15] குற்றவாளிகளின் பொதுவான உந்துதல்களில் சில:

  • நெருக்கமான உறவுகள் மற்றும் பாலியல் நிராகரிப்பு தொடர்பான தனிப்பட்ட மோதல் [16][17]
  • பாலியல் தொடர்பான பொறாமை மற்றும் காமம் [18]
  • பாலியல் முன்னேற்றங்கள், திருமண முன்மொழிவுகள் மற்றும் வரதட்சணை போன்றவற்றிற்கான பழிவாங்கள் [19]
  • இன உந்துதல்கள்
  • சமூக, அரசியல் மற்றும் மத உந்துதல்கள்
  • கும்பல் வன்முறை மற்றும் போட்டி [20]
  • சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு
  • நில உடைமை, பண்ணை விலங்குகள், குடியிருப்பு மற்றும் சொத்து ஆகியவற்றில் மோதல்கள் [21]

திருமணத் திட்டம் அல்லது பாலியல் முன்னேற்றத்தை நிராகரிக்கும் ஒரு பெண்ணுக்கு எதிரான பழிவாங்கலாக அமிலத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.[22][23] சமூகத்தில் பாலின சமத்துவமின்மை மற்றும் பெண்களின் நிலை, ஆண்களுடன் தொடர்பு, ஆகியன இந்தத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.[24]

தனிநபர்களின் மத நம்பிக்கைகள் அல்லது சமூக அல்லது அரசியல் நடவடிக்கைகளின் அடிப்படையில் தாக்குதல்களும் நிகழ்கின்றன. இந்த தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட தனிநபருக்கு எதிராக, அவர்களின் செயல்பாடுகளின் காரணமாக இருக்கலாம் அல்லது சீரற்ற நபர்களுக்கு எதிராக அவர்கள் ஒரு சமூக குழு அல்லது சமூகத்தின் பகுதியாக இருப்பதால் நடத்தப்படலாம்.[25] பள்ளியில் படித்ததற்காக மாணவர்களின் முகத்தில் அமிலம் வீசப்பட்டது.[26] மத மோதல்கள் காரணமாக அமிலத் தாக்குதல்களும் பதிவாகியுள்ளன.[27][28] வேறு மதத்திற்கு மாற மறுத்ததால் ஆண்களும் பெண்களும் அமிலத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.[29]

சொத்து பிரச்சனைகள், நில தகராறுகள் மற்றும் பரம்பரை தொடர்பான மோதல்களும் அமிலத் தாக்குதல்களின் உந்துதல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[30][31] குற்ற பின்னணி கொண்ட குழுக்கிடையேயான மோதல்கள் தொடர்பான அமிலத் தாக்குதல்கள் இங்கிலாந்து, கிரீஸ் மற்றும் இந்தோனேசியா உட்பட பல இடங்களில் நிகழ்கின்றன.[32][33]

சான்றுகள் தொகு

  1. Karmakar, R.N. (2010). Forensic medicine and toxicology (3rd ). Kolkata, India: Academic Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788190908146. https://books.google.com/books?id=XG84ff-WD2YC. 
  2. "World Now (blog)". Los Angeles Times. November 2011. http://latimesblogs.latimes.com/world_now/2011/11/afghan-sisters-hurt-acid-attack-rejected-proposal.html. 
  3. "Man who threw acid at woman blames 2 others". Los Angeles Times. 19 March 1992. http://articles.latimes.com/1992-03-19/news/gl-5793_1_father-and-son. 
  4. Welsh, Jane (Fall 2006). ""It was like burning in hell": A comprehensive exploration of acid attack violence". Carolina Papers on International Health (Center for Global Initiatives, University of North Carolina) 32. http://cgi.unc.edu/uploads/media_items/it-was-like-burning-in-hell-a-comparative-exploration-of-acid-attack-violence.original.pdf. பார்த்த நாள்: 3 April 2016. 
  5. UN Women (2014). Acid Attack Trend (1999–2013). UN Women, United Nations இம் மூலத்தில் இருந்து 2020-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200126114550/https://www.unwomen.org/en/page-not-found. பார்த்த நாள்: 2021-09-01. 
  6. Taylor, L. M. (2000). "Saving face: acid attack laws after the UN Convention on the Elimination of All Forms of Discrimination Against Women". Ga. Journal Int'l & Comp. Law 29: 395–419. http://digitalcommons.law.uga.edu/cgi/viewcontent.cgi?article=1474&context=gjicl. 
  7. Mannan, Ashim; Samuel Ghani; Alex Clarke; Peter E.M. Butler (19 May 2006). "Cases of chemical assault worldwide: A literature review". Burns 33 (2): 149–154. doi:10.1016/j.burns.2006.05.002. பப்மெட்:17095164. 
  8. Avon Global Center for Women and Justice at Cornell Law School; Committee on International Human Rights of the New York City Bar Association; Cornell Law School International Human Rights Clinic; Virtue Foundation (2011). "Combating Acid Violence In Bangladesh, India, and Cambodia" (PDF). Avon Foundation for Women. pp. 1–64. பார்க்கப்பட்ட நாள் 6 March 2013.
  9. "Acid Survivors Foundation (ASF)". Acidsurvivors.org. Archived from the original on 18 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Harris. "Acid Attacks" இம் மூலத்தில் இருந்து 2012-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120331081215/http://video.nytimes.com/video/2008/11/29/opinion/1194834033797/acid-attack.html. 
  11. Dhar, Sujoy. "Acid attacks against women in India on the rise; survivors fight back". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
  12. "Q&A: Acid attacks around the world". Edition.cnn.com. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  13. "Acid attacks against women in India on the rise; survivors fight back" (in en). USA TODAY. https://www.usatoday.com/story/news/world/2017/07/27/acid-attacks-women-india-survivors-fight-back/486007001/. 
  14. "Everything you know about acid attacks is wrong". BBC Three (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-11-17. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.
  15. Evans, Ruth (10 November 2013). "Acid attacks on men related to gang violence, say experts". BBC News. https://www.bbc.com/news/uk-24835910. 
  16. Solberg, Kristin (2010). "DEFINE_ME_WA". The Lancet 376 (9748): 1209–10. doi:10.1016/S0140-6736(10)61863-6. பப்மெட்:20941859. 
  17. "Acid Violence in Uganda: A Situational Analysis" (PDF). Acid Survivors Foundation Uganda. November 2011. pp. 1–21. Archived from the original (PDF) on 2013-06-17. பார்க்கப்பட்ட நாள் 6 March 2013.
  18. "Chemical Assaults Worldwide" (PDF). 6 February 2017. Archived from the original (PDF) on 6 February 2017.
  19. Bandyopadhyay, Mridula. Violence against women in Asian societies. 
  20. Evans, Ruth (10 November 2013). "Acid attacks on men related to gang violence, say experts". BBC News. https://www.bbc.com/news/uk-24835910. 
  21. Bahl, Taur. Encyclopaedia of Muslim world. 
  22. de Castella, Tom (9 August 2013). "How many acid attacks are there?". BBC News இம் மூலத்தில் இருந்து 9 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130809162958/http://www.bbc.co.uk/news/magazine-23631395. 
  23. Mannan, A.; S. Ghani; A. Clarke; P. White; S. Salmanta; P.E.M. Butler (August 2005). "Psychosocial outcomes derived from an acid burned population in Bangladesh, and comparison with Western norms". Burns 32 (2): 235–241. doi:10.1016/j.burns.2005.08.027. பப்மெட்:16448773. 
  24. Various. Combating acid violence in Bangladesh, India, and Cambodia. http://www.lawschool.cornell.edu/womenandjustice/upload/Combating-Acid-Violence-Report.pdf. பார்த்த நாள்: 16 July 2017. 
  25. "Kuneva case – the most severe assault on trade unionist in Greece for 50 years". FOCUS Information Agency. 4 January 2009. Archived from the original on 19 May 2014. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  26. Khan, Shaan (3 November 2012). "Pakistani Taliban target female students with acid attack". CNN. Archived from the original on 30 November 2012. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  27. "Acid attack injures Catholic priest". The Media Project. Archived from the original on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  28. "Catholic priest targeted in acid attack in Zanzibar". https://www.bbc.com/news/world-africa-24088096. 
  29. "26YO Woman Throws Acid On Ex-Boyfriend After He Refused To Convert To Her Religion For Marriage". https://www.indiatimes.com/news/india/christian-woman-throws-acid-on-hindu-ex-boyfriend-after-he-refuses-to-convert-269758.html. 
  30. "Dhaka men in acid attacks protest". BBC. 8 March 2005 இம் மூலத்தில் இருந்து 12 November 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051112140907/http://news.bbc.co.uk/2/hi/south_asia/4329733.stm. 
  31. GARPH Publication. Acid violence: A burning impact on women of Bangladesh – case study. https://www.academia.edu/6758023. பார்த்த நாள்: 20 April 2016. 
  32. Hewson, Jack (28 October 2013). "Acid attacks intensify Indonesia gang fights". Al Jazeera. Archived from the original on 27 October 2020. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  33. Evans, Ruth (10 November 2013). "Acid attacks on men related to gang violence, say experts". BBC News. https://www.bbc.com/news/uk-24835910. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிலத்_தாக்குதல்&oldid=3541298" இலிருந்து மீள்விக்கப்பட்டது