நடுவண் தெற்குக் கடற்கரை
நடுவண் தெற்குக் கடற்கரை (South Central Coast) என்பது வியட்நாமின் எட்டு வட்டாரங்களில் ஒன்றாகும். இதில் தற்சார்பு மாநகராட்சியாகிய தா நாங் நகராட்சியும் ஏழு மாகாணங்களும் உள்ளன.
மரபாக, இவ்வட்டாரம் நடுவன் மேட்டுச் சமவெளிக்குச் செல்லும் வாயில்களில் ஒன்றாக விளங்கியது. இது போக்குவரத்தோ பிற அகக்கட்டமைப்புகளோ ஏற்படுத்த மிக அறைகூவலாக உள்ள, கடற்கரை வரை மலைத்தொடர்கள் நீளும் சிக்கலான புவிப்பரப்பைப் பெற்றுள்ளது; ஆனால், இது நல்ல சுற்ருலாத் தளமாக விளங்குகிறது; குறிப்பாக, பாந்தியேத், நாத்திராங், [தா நாங்]] ஆகிய பகுதிகள் சுற்றுலாவுக்கு ஏற்றன. சாம்பாக் கவின் கட்டிடங்கள், நிகழ்த்து கலைகள், அருங்காட்சியகங்கள் போன்ற பண்பாட்டு மரபு வளமும் சுற்றுலாவை ஈர்க்கும் வண்னம் அமைந்துள்லது. இது, ஓ சி மின் நகரைச் சுற்ரியமைந்த தென்கிழக்கு வட்டாரம் அல்லது சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையைப் போல தொழில்மயமானதோ வளர்ச்சிவாய்ப்பு மிக்கதோ அல்ல; ஆனால், இவ்வட்டாரத்தின் தா நாங், நாத்திராங், குயிநிகோன் பகுதிகளில் சில வட்டாரத் தொழிலகங்கள் அமைந்துள்ளன.
நடுவண் தெற்குக் கடற்கரை (நாம்திரங்போ) வட்டாரத்தின் 8 மாகாணங்கள்: தா நாங், குவாங்நாம் மாகாணம், குவாங் நிகாய் மாகாணம், பின்தின் மாகாணம், பூயேன் மாகாணம், காங்கோவா மாகாணம், நின்துவான் மாகாணம், பின்துவான் மாகாணம். நிகுயேன் அரசகுல ஆட்சியில், இப்பகுதி தாத்திரூசு கய் (தூவதியேனுக்கு வலதில் உள்ள பகுதி) எனப்பட்டது.
மாகாணங்கள்
தொகுமாகாண- மட்டப் பிரிவு |
தலைநகர் | பரப்பளவு (கிமீ²) |
மக்கள்தொகை (2011)[1] |
மக்கள்தொகை அடர்த்தி (நபர்கள்/கிமீ²) |
தொ உ வி தனிஒருவருக்கு (மில்லியன் VND, 2007)[2] |
---|---|---|---|---|---|
பின்தின் மாகாணம் | குயிநோன் | 6,040 | 1,497,300 | 247 | 9.57 |
பின்துவான் மாகாணம் | பாந்தியேத் | 7,837 | 1,180,300 | 151 | 11 |
காங்கோவா மாகாணம் | நாத்திராங் | 5,218 | 1,174,100 | 225 | 16.1 |
நின்துவான் மாகாணம் | பான்றாங்–தாப்சாம் | 3,363 | 569,000 | 169 | 6.66 |
பூயேன் மாகாணம் | துய்கோவா | 5,061 | 871,900 | 172 | 8.43 |
குவாங் நாம் மாகாணம் | தாங்கை | 10,438 | 1,435,000 | 137 | 8.76 |
குவாங் நிகாய் மாகாணம் | குவாங் நிகாய் | 5,153 | 1,221,600 | 237 | 7.82 |
தா நாங் | 1,256 | 951,700 | 740 | 18.98 | |
மொத்தம் | 44,367 | 8,900,900 | 201 | 10.76 |