நடுவண் வடக்குக் கடற்கரை

நடுவண் வடக்குக் கடற்கரை (Bắc Trung Bộ) அல்லது பாசுதிரங்போ (இதன் உண்மையான பொருள் நடுவண் வடக்கு வட்டாரம். ஆனால், நடுவண் வடக்குக் கடற்கரை (North Central Coast) என மொழிபெயர்க்கப்படுகிறது) என்பது வியட்நாமின் 63 மாகாணங்களில் ஒன்றாகும். இதில் பின்வரும் ஆறு மாகாணங்கள் உள்ளன: தாங்கோவா மாகாணம், நிகேயான் மாகாணம், காதின் மாகாணம், குவாங்பின் மாகாணம், குவாங் திரி மாகாணம், தூவதியேன் குயே. கடைசி இரண்டு மாகாணங்கள் 1975 வரை தென்வியட்நாமில் இஉந்தன.

வியட்நாமின் பாசுதிரங்போ (நடுவண் வடக்குக் கடற்கரை) வட்டாரத்தைக் காட்டும் நிலப்படம்

நடுவண் வடக்குக் கடற்கரை]] (பாசுதிரங்போ) - 6 மாகாணங்கள்: தாங்கோவா மாகாணம், நிகேயான் மாகாணம், காதின் மாகாணம், குவாங்பின் மாகாணம், குவாங் திரி மாகாணம், தூவதியேன் குயே. நிகுயேன் அரசில், தூவதியேன் தவிர்த்த எஞ்சிய பகுதி கூ திரூசு கய் எனப்பட்டது.

மாகாணங்கள்

தொகு
நடுவண் வடக்குக் கடற்கரை (பாசுதிரங்போ) புள்ளியியல்[1]
மாகாண-
மட்டப்
பிரிவு
தலைநகர் மக்கள்தொகை
(கணக்கெடுப்பு
ஏப்பிரல் 1,
2009)
பரப்பளவு
(கிமீ²)
காதின் காதின் 1,230,300 6,025.6 கிமீ²
நிகேயான் மாகாணம் வின் 2,919,200 16,490.7 கிமீ²
குவங்பின் மாகாணம் தோங் நோய்]] 848,000 8,065.3 கிமீ²
குவாங் திரி மாகாணம் தோங் நா 599,200 4,747.0 கிமீ²
தாங்கோவா மாகாணம் தாங்கோவா 3,405,000 11,133.4 கிமீ²
தூவ தியேன் குயே மாகாணம் குயே 1,088,700 5,062.6 கிமீ²

வரலாறு

தொகு

நடுவண் வடக்குக் கடற்கரை வட்டாரத்தின் நான்கு மாகாணங்கள் பொதுவுடைமை ஆட்சிக்கு ஆட்பட்ட வடக்கு வியட்நாமில் அமைந்துள்ளன. இவை ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக வியட்நாம் போரின் முழுவதிலும் செயல்பட்டன. இது வியட்கோங் விடுதலைப் படையின் கோட்டையாக இருந்தது.

பண்பாடு

தொகு

இங்கு, வியட்நாமின் ஏழு உலக மரபுக் களங்களில் மூன்று அமைந்துள்ளது. அவை, இயற்கை வளம் மிக்க போங் நாகே பாங் தேசியப் பூங்கா (2003), குயே மரபுச் சின்ன்ங்களின் வளாகம் (1993) கோ அரசகுலக் கோட்டை (2011) ஆகிய பண்பாட்டு மரபுக் களங்கள் ஆகும்.[2]

பொருள்வளம்

தொகு

பாசுதிரங்போ வட்டாரம் நாட்டிலேயே மிகக் குறைந்த உள்நாட்டு தொகு விளைபொருள் அமைந்த இரண்டாவது இடம் ஆகும். வியட்நாமின் வடமேற்கு (தாய் பாசு) வட்டாரம், மிகக் குறைந்த உள்நாட்டுத் தொகு விளைபொருள் அமைந்த முதலாவது இடமாக அமைகிறது.

மக்கள்தொகையியல்

தொகு

நடுவண் வடக்குக் கடற்கரை வட்டாரத்தின் மாத தனியர் வருமானம் 902,900 VND ஆகும். வியட்நாம் நாடு முழுவதற்குமான மாத தனியரின் வருமானம் 1,387,200 VND (2010) ஆகும். [3]

நடுவண் வடக்குக் கடற்கரை வட்டாரத்தில் நிலையாக வீடு உள்ளவர்கள் விழுக்காடுs 75.6% ஆகும்.வியட்நாம் நாடு முழுவதும் நிலையான வீடு உள்ளவர்கள் விழுக்காடு 49.2% (2010). [4]

நடுவண் வடக்குக் கடற்கரை வட்டாரத்தில் நிரல் (சராசரி) குடும்ப அளவு 3.94 பேர் ஆகும் (2010).[5]

நடுவண் வடக்குக் கடற்கரை வட்டாரத்தின் 15 அகவையும் அதற்கு மேற்பட்ட அகவையும் உள்ள மக்கள்தொகையினரின் கல்வித் தகுதி விழுக்காடு பின்வருமாறு: பள்லி செல்லாதவர் 5.2%; தொக்கநிலைப்பள்ளி 19.3%; உயர்நிலைப்பள்ளி 33.1%; மேனிலைப்பள்ளி 17.3%; கல்லூரி, பல்கலைக்கழகம் 5.2%; பட்டமேற்படிப்பு 0.1% (2010).[6]

15 அகவையும் அதற்கு மேற்பட்ட அகவையும் உள்ள மக்கள்தொகையினர் அடியில்கண்ட தொழில்துறைகளில் பின்வரும் விழுக்காடுகளில் அமைகின்றனர்: வேளாண்மை 59.9%; கான்வளம் 2.1%; மீன்பிடித்தல் 1.8%; தொழிலகம் 7.5%; கட்டுமானம் 6.6%; தொழில்வணிகம் 7.7%; சேவைகள் 14.5% (2010).[7]


மேற்கோள்கள்

தொகு
  1. "General Statistics Office Of Vietnam". Gso.gov.vn. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.
  2. UNESCO World Heritage Centre. "Viet Nam - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.
  3. http://www.gso.gov.vn/Modules/Doc_Download.aspx?DocID=13386
  4. http://www.gso.gov.vn/Modules/Doc_Download.aspx?DocID=13389
  5. http://www.gso.gov.vn/Modules/Doc_Download.aspx?DocID=13382
  6. http://www.gso.gov.vn/Modules/Doc_Download.aspx?DocID=13383
  7. http://www.gso.gov.vn/Modules/Doc_Download.aspx?DocID=13391
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுவண்_வடக்குக்_கடற்கரை&oldid=3620316" இலிருந்து மீள்விக்கப்பட்டது