நடேசன் பூங்கா

சென்னை, தியாகராயநகரில் உள்ள வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ளது

நடேசன் பூங்கா (Natesan Park) இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டின் தலைநகரமாம் சென்னை நகரத்தின் தியாகராய நகரில் உள்ள வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ளது.[1] இப்பூங்கா நான்கு ஏக்கர் நிலப்பகுதியை உடையதாகும்.[2] வேளாண்மைத் துறை அமைச்சர் திரு.எ.பி.செட்டி அவர்களால் 1950 ஆம் ஆண்டு செம்டம்பர் 13 ஆம் நாள் பொது மக்கள் பயன்பாட்டிற்காககத் திறந்து வைக்கப்பட்டது. பூங்காவில் டாக்டர் நடேசன் சிலை நிறுவப்பட்டுள்ளதால் டாக்டர் நடேசன் பூங்கா என்றும் இது அழைக்கப்படுகிறது.[3]

நடேசன் பூங்கா
Natesan Park
பூங்காவில் நடேசன் சிலை
Map
வகைநகர்ப்புற பூங்கா
அமைவிடம்இந்தியா, தமிழ்நாடு, சென்னை, தி.நகர்
ஆள்கூறு13°2′15″N 80°14′10″E / 13.03750°N 80.23611°E / 13.03750; 80.23611
பரப்பளவு4 ஏக்கர்கள் (1.6 எக்டேர்கள்)
உருவாக்கம்13 செப்டம்பர் 1950
இயக்குபவர்சென்னை மாநகராட்சி
நிலைஅனைவருக்குமானது

சிறப்பு

தொகு

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் ஒரே பூங்கா நடேசன் பூங்காவாகும். குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க தனி தென்னிசு விளையாட்டரங்கம் இங்கு உள்ளது. ஒரு தாவர இனப்பெருக்க மையமும், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதியும் இங்கு உள்ளன. உள்ளூர்வாசிகள் காலை நடைப்பயிற்சி செய்வதற்கு இப்பூங்கா ஒரு பிரபலமான இடமாகும். குரோட்டன் செடிகள், ஒப்பனை கொடி வகைகள், காகிதப்பூ, மயில் கொன்றை, வேம்பு, செம்மயிற்கொன்றை, கொன்றை, மகோகனி எனப்படும் சீமை நுக்கு, அரச மரம், பனை மரங்கள் போன்ற தாவர வகைகள் இங்குள்ளன.[4] அகன்ற, நீண்ட, துய்மையான நடைபாதைகள், யோகா, தியானம், உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற இயற்கை சூழலுடன் கூடிய அமைதியான இடம் ஆகியவை நடேசன் பூங்காவின் சிறப்பம்சங்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலைய திட்டம் கைவிடப்பட்டது", Hindu Tamil Thisai, 2023-02-24, பார்க்கப்பட்ட நாள் 2023-10-14
  2. "பூங்காவின் புது முகம் - Dinamalar Tamil News", Dinamalar, 2023-04-24, பார்க்கப்பட்ட நாள் 2023-10-14
  3. "மறுசீரமைக்கப்பட்ட டாக்டர் நடேசன், ஜீவா பூங்கா திறப்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/jul/13/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2958883.html. பார்த்த நாள்: 14 October 2023. 
  4. Amirthalingam, M. "Parks of Chennai". Envis Centre on Conservation of Ecological Heritage and Sacred Sites of India. CPREEC. பார்க்கப்பட்ட நாள் 4 Feb 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடேசன்_பூங்கா&oldid=3853563" இலிருந்து மீள்விக்கப்பட்டது