நடைவழிக் கல்லறை

நடைவழிக் கல்லறை என்பது, பெருங்கற் பண்பாட்டுக்கு உரிய ஒருவகைக் கல்லறை ஆகும். இது பெரிய கற்களால் உருவாக்கப்பட்ட ஒரு நடைவழியையும், மண்ணால் அல்லது கற்களால் மூடப்பட்ட ஒன்று அல்லது பல அடக்க அறைகளையும் கொண்டது. பெருங்கற்களால் கட்டப்பட்ட நடைவழிக் கல்லறைகள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை. ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட கல்லறைகளில், முதன்மை அறையில் இருந்து வாயில்களைக் கொண்ட துணை அறைகள் அமைந்திருக்கும். பொதுவாகக் காணப்படும் சிலுவைவடிவ நடைவழிக் கல்லறை சிலுவையின் வடிவில் அமைந்த தளவடிவம் கொண்டது. சில சமயங்களில் நடைவழிக் கல்லறைகள் கற்குவைகளினால் மூடப்பட்டிருக்கும். எல்லா நடைவழிக் கல்லறைகளிலும் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கவில்லை.[1][2][3]

அயர்லாந்தில், சிலிகோ என்னும் இடத்துக்கு அருகில் உள்ள கரோமோர் என்னும் இடத்தில் அமைந்த எளிமையான நடைவழிக் கல்லறை.

மேற்கோள்கள்

தொகு
  1. More technically called a tumulus, and also referred to as a barrow.
  2. Sheridan, Alison. "Megaliths and Megalomania: An account and interpretation of the development of passage tombs in Ireland.". The Journal of Irish Archaeology 3: 17–30. 
  3. Ó Nualláin, Seán & De Valera, Rúaidhrí (1961). Survey of the Megalithic Tombs of Ireland. Dublin: Ordnance Survey (Ireland).{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடைவழிக்_கல்லறை&oldid=4099811" இலிருந்து மீள்விக்கப்பட்டது