நட்பு, தோழமை , சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

மதிய உணவை நட்புடன் பகிர்ந்து உண்ணும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தெற்கு ஆசியாவைச் சேர்ந்த பெண் நண்பர்கள்

நட்பின் வகைகள் தொகு

  • நட்பு இங்கு நட்பு வைத்துக் கொள்ளும் பாலினத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.
  1. ஆண்‍‍‍-ஆண் நட்பு
  2. பெண்-பெண் நட்பு
  3. ஆண்-பெண் நட்பு
  • நட்பிற்காக அவர்கள் பயன்படுத்தும் தொடர்புமுறையைக் கொண்டும் வகைப்படுத்தலாம்.
  1. நேரடி நட்பு
  2. மறைமுக நட்பு
பேனா நட்பு
மின்னஞ்சல் நட்பு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்பு&oldid=3756099" இலிருந்து மீள்விக்கப்பட்டது