நண்டி மாவட்டம்
நண்டி மாவட்டம், பிஜி நாட்டின் விட்டிலெவு தீவின் தென்மேற்குக் கரையில் உள்ளது. இங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ள நண்டி என்னும் நகரம் முக்கியத்துவம் பெற்றது. இங்கு சுற்றுலாவின் மூலம் குறிப்பிடத்தகுந்த வருவாய் கிடைக்கிறது. இங்கு கரும்பை பயிரிடுகின்றனர்.