நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா

நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா (நண்டுகளின் நிலத்தில் ஓர் இடைவேளை) (Njandukalude Nattil Oridavela) என்பது 2017 ஆண்டைய மலையாள நாடக-நகைச்சுவைத் திரைப்படம். படத்தை இயக்கி, உடன் எழுதியவர் அல்தாஃப் சலீம். இப்படத்தில் நிவின் பவுலி, சாந்தி கிருஷ்ணா, ஆஹா கிருஷ்ணா, லால், ஸ்ரீண்டா அஹான், ஐஸ்வர்யா லெக்சி, சிஜு வில்சன், ஷரபூதீன், கிருஷ்ணா சங்கர், திலீஷ் பொத்தன் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 19 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சாந்தி கிருஷ்ணா இப்படத்தின் மூலம் படங்களில் மீண்டும் வந்துள்ளார்.[1] இப்படமானது அல்தாப் சாலிம் மற்றும் ஜார்ஜ் கோர ஆகியோரால் எழுதப்பட்டது. பாலி ஜூனியர் பிக்சர்ஸ் என்ற தனது பதாகையின் கீழ் நிவின் பவுலி இப்படத்தை தயாரித்துள்ளார்.[2]. இப்படம் 2017 செப்டம்பர் 1 அன்று வெளியானது .

நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா
Njandukalude Nattil Oridavela
இயக்கம்அல்தாஃப் சலீம்
தயாரிப்புநிவின் பவுலி
கதைஅல்தாஃப் சலீம்
ஜார்ஜ் கோரா
இசைஜஸ்டீன் வர்கேஸ்
நடிப்புநிவின் பவுலி
சாந்தி கிருஷ்ணா
அஹானா கிருஷ்ணா
லால்
ஒளிப்பதிவுமுகேஷ் முரளீதரன்
கலையகம்பவுலி ஜூனியர் பிக்சர்ஸ்
விநியோகம்Chakkalakel Films & Tricolor Entertainment
வெளியீடு1 செப்டம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கதை தொகு

ஒரு மகிழ்ச்சியான குடும்பம். அந்தக் குடும்பத் தலைவி, ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும்போது, தன் மார்பில் ஒரு சிறு கட்டி இருப்பதை அவர் உணர்கிறார். தனக்குப் புற்றுநோயாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதியாகிறது. அந்தக் கசப்பான உண்மையை, அந்தக் குடும்பத் தலைவி எப்படி எடுத்துக்கொள்கிறார், அந்தக் குடும்பம் எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதுதான் படம்.

பொதுவாக, நம் நாட்டில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால், அவர் குணமாகிறவரை எந்த ஒரு நல்ல செயலையும் செய்யமாட்டார்கள். ஆனால், அப்படி சோகத்தில் மூழ்கி இரிக்கத் தேவையில்லை என்கிறது இந்தப் படம். குடும்பத்தின் முதன்மை உறுப்பினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. திருமண வைபவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் நோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம புன்னகையுடன் ஆதரவாக இருப்போம். அவர்களை நாம் மகிழிச்சியாக பார்த்துகாப்போம். நாமும் மகிழ்ச்சியாக இருப்போம் என இயக்குநர் செல்ல வருகிறார்.[3]

தயாரிப்பு தொகு

ஜார்ஜ் கோராவுடன் இணைந்து திரைக்கதை அமைத்ததுடன் படத்தை அல்தாப் சாலிம் இயக்கியதாக அவர் குறிப்பிடுகிறார். இந்த படத்தின் முதன்மை படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது. முகேஷ் முரளிதரன் ஒளிப்பதிவு செய்தார்.[4] திரைப்படமானது 2017 செப்டம்பர் 01 அன்று வெளியிடப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு