நண்டு விருந்து
நண்டு விருந்து ( crayfish party ) நோர்டிக் நாடுகளில் கோடைக்காலத்தில் சாப்பிடுவதும் குடிப்பதும் ஒரு பாரம்பரிய கொண்டாட்டமாகும் . இந்தப் பாரம்பரியம் சுவீடனில் தோன்றியது, அங்கு நண்டு விருந்து கிராப்ட்ஸ்கிவா என்று அழைக்கப்படுகிறது . பாரம்பரியம் சுவீடன் மொழி பேசும் மக்களால்,[1] நோர்வே வழியாக பின்லாந்திற்கும் பரவியது. இதேபோன்ற பாரம்பரியம் பால்டிக் நாடுகளில் குறிப்பாக லித்துவேனியா மற்றும் லாத்வியாவில் உள்ளது.
நண்டு விருந்துகள் பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகின்றன. சுவீடனில் நண்டு பிடிப்பது 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதிக்கு, கோடையின் பிற்பகுதியில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டதால் இந்தப் பாரம்பரியம் தொடங்கியது.[2][2]
இவ்வகை விருந்துகள் பியர் மற்றும் பிற வகையான பானங்களுடன் பரிமாறப்படுகிறது, அத்துடன் பாரம்பரிய குடி பாடல்களும் பாடலாம்.[3] நண்டு உப்பு நீரில் வேகவைக்கப்பட்டு, புதிய வெந்தயத்துடன் கலந்து சுவையூட்டப்படுகிறது . பின்னர் குளிர்ச்சியாக பரிமாறப்பட்டு விரல்களால் உண்ணப்படுகிறது. இத்துடன் வெதுப்பி, காளான் துண்டுகள், வலுவான பாலாடைக் கட்டி, காய்கறிகள் மற்றும் பிற உணவுகளுடன் வழங்கப்படுகின்றன.[2]
எசுப்போனியா
தொகு40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹெர்ரெரா டி பிசுவேர்கா நகரம் ( பாலென்சியா மாகாணம் ) நண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகிறது (நண்டு தேசிய விழா). ஏனென்றால், இந்த ஓட்டுமீன் எப்பொழுதும் அப்பகுதியின் பாரம்பரிய காஸ்ட்ரோனமியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. 2011 முதல், நகரம் அதன் கொண்டாட்டங்களில் "சுவீடிஷ் இரவு உணவை" உள்ளடக்கியுள்ளது. இந்தத் திருவிழாவின் போது குடியிருப்பாளர்கள் காகித விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் தெருவோர இரவு உணவின் சுவீடன் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றனர்.[4]
சான்றுகள்
தொகு- ↑ "Finnish Crayfish Party". Finnguide. Archived from the original on March 10, 2006. பார்க்கப்பட்ட நாள் January 31, 2006.
- ↑ 2.0 2.1 2.2 Po Tidhom (2004). "The Crayfish Party". The Swedish Institute. Archived from the original on February 4, 2009. பார்க்கப்பட்ட நாள் January 29, 2006.
- ↑ Po Tidhom (2004). "The Crayfish Party". The Swedish Institute. Archived from the original on February 4, 2009. பார்க்கப்பட்ட நாள் January 29, 2006.
- ↑ EL MUNDO. Periódico digital: Cangrejada al estilo sueco en el Festival de Herrera de Pisuerga