நதானியேல் ஹோவெல் ஃபர்மன்
நதானியேல் ஹோவெல் ஃபர்மன் (1892-1965) ஓர் அமெரிக்கப் பகுப்பாய்வு வேதியியலாளரும் பேராசிரியருமாவார். இவர் வெடிகுண்டுப் பொருள்களைத் தயாரிக்கும்மன்ஹாட்டன் திட்டத்தின் உறுப்பினராக சிறப்பு நுட்பங்களை உருவாக்கியவர். தூய யுரேனியத்தை பிரிக்கும் செயல்முறையை உருவாக்க உதவிய பகுப்பாய்வு வேதியியல் பேராசிரியராக இருந்தார். [1] தூய யுரேனியம் உலோகத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மாதிரி மற்றும் பகுப்பாய்வு செய்தல், பல்வேறு பொருள்களில் உள்ள உலோகங்களின் தடங்களை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தார். யுரேனியம் ஆக்சைடைத் தயாரிப்பதற்கான ஈதர்பிரித்தெடுக்கும் செயல்முறையை உருவாக்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. N. Howell Furman, 73, Dies; Chemist Worked on Atom Bomb; Responsible for Analytical Separation of Uranium - At Princeton 41 Years" (in en-US). The New York Times. August 3, 1965. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/1965/08/03/archives/dr-n-howell-furman-73-dies-chemist-worked-on-a-tom-bomb-responsible.html.